கவிதைகள்

“தரையில் என் முகம் கலங்கித் தெரிந்தது” …. கவிதை …. முல்லைஅமுதன்.

மொசைட் தரைதான்.
துடைத்துவிடக் கட்டளையிட்டான்
வயதில் சிறியவன் ஒருவன்.
நிமிர்ந்து பார்க்கையில்
வக்கிரமுகமாய் தெரிந்தது.
வயதுடன்,வாழ்க்கையைத் தொலைத்த என்
கண்களில் காட்சியாய்த் தெரிந்தனர்..
மனைவி
மகள்கள்…
வயதான அம்மா…
தரையில் என் முகம்
கலங்கித் தெரிந்தது.


முல்லைஅமுதன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *