முச்சந்தி
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி படுகொலை முயற்சி: சர்வதேச அனுதாபத்திற்காக உள்வீட்டு சதியா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா சதி் என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவித்தாலும், உக்ரேனிய உளவுப்பிரிவின் உள்வீட்டு சதி என்றே அறியப்படுகிறது.
உள்வீட்டு சதியா ?
அத்துடன் சர்வதேச அனுதாபத்திற்காக பிரச்சார நோக்கத்திற்காகவும் இக் கொலை முயற்சியில் உக்ரேனிய உளவுப்பிரிவின் சதித்திட்டம் எனவும் ஊகிக்கப்படுகிறது.
முன்பும் பல தடவை உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா சதி் என்றும், மேற்குலகின் அனுதாபத்தை பெற உக்ரேனிய அரசு திட்டமிட்டு பிரச்சாரங்கள் செய்தது. அதேவேளை
உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி தனது வெளிநாட்டில் உள்ள அவரின் சொந்த வங்கிக் கணக்கில் பல மில்லியன் டாலர்கள் வைப்பில் உள்ளது எனவும் உக்ரேனிய ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த வருடம் உக்ரேனிய உள்துறை அமைச்சர் அதிபர் ஜெலென்ஸ்கியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதும், பல உக்ரேனிய இராணுவ உயர் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டதும் அறிந்ததே.
போலந்தில் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சதித் திட்டம் திட்டியதாக
ஒருவரை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
ஏற்கெனவே, ஜொ்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இரு ரஷ்யா்களை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்ததால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், போலந்திலும் அதே போன்றதொரு குற்றச்சாட்டின் பேரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா சதி?

இது குறித்து போலந்து சட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
போலந்தில் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்யும் ரஷ்ய உளவுத் துறையின் சதித் திட்டத்தில் பங்கேற்ற ‘பவெல் கே’ என்பவரைக் கைது செய்துள்ளோம்.
அவா் போலந்து நாட்டவா். ஜெலெனஸ்கி அடிக்கடி வந்துசெல்லும் ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்களை ரஷ்ய உளவு அமைப்பினரிடம் தெரிவிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது அவா் செய்யப்பட்டாா். உக்ரைன் உளவு அமைப்பினருடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையையொட்டி தென்கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையம் அமெரிக்க படையினரின் பாதுகாப்பில் உள்ளது. உக்ரைனுக்கு அளிக்கப்படும் சா்வதேச ஆயுத மற்றும் நிவாரணப் பொருள்கள் இந்த விமான நிலையம் வழியாகத்தான் அனுப்பப்படுகின்றன.
ஜொ்மனியில் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் :
அதிபா் விலோதிமீா் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட உக்ரைன் தலைவா்கள் நாட்டிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்குச் செல்ல இந்த விமான நிலையத்தை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனா். இந்தச் சூழலில், ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்களை ரஷ்ய உளவு அமைப்பினருக்கு அளிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் போலந்து நாட்டவா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஜொ்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய உளவு அமைப்புடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாக ‘டயட்டா் எஸ்’, ‘அலெக்ஸாண்டா் ஜே’ என்ற இருவரை அந்த நாட்டு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் ரஷ்ய-ஜொ்மன் இரட்டைக் குடியுரிமை பெற்றவா்கள்.
உக்ரைன் உளவுப்பிரிவின் சதி:
உக்ரைன் அரசின் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷ்யாவின் உளவுத் துறையினருக்கு தகவல் சொல்லி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்றுவிடுமாறு ரஷ்யா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகளை கூறியுள்ளனர்.
இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதன்மூலம் உக்ரைன் நாட்டின் ரகசிய நடவடிக்கைகள், ராணுவ தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் ஆகியவற்றை கசிய விட்டுள்ளனர்.
இதற்காக பல கோடி பணம், ரஷ்ய நாட்டு குடியுரிமை, பெண்கள் ஆகியவை பேரமாக பேசப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட பின்னர் ரஷ்யாவில் இருந்து உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய இரு ஆளில்லா விமானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமும் வகுத்து தரப்பட்டுள்ளது.
இதுகுறித்தான தகவல்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.
யார் இந்த ஜெலென்ஸ்கி ?
உக்ரேனிய போர் ஆரம்பத்தில் ஜெலென்ஸ்கி அதிபராக தொடர சாத்தியமற்றவர் என பல ஊடகங்களாலும் காட்டப்பட்டது. அதற்கான காரணங்களில்,
அவர் ஒரு நகைச்சுவை நடிகர், அவர் தொலைக்காட்சியில் அதிபராக நடித்தார், ஆனால் நிஜ வாழ்க்கையில் அரசியல் முன் அனுபவம் இல்லை.

இருப்பினும், அவருக்கு முன் ஆட்சியிருந்தவர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது வாக்குறுதிகள் 2019 தேர்தலில் அவரது வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
ஜெலென்ஸ்கி ஒரு நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி உக்ரேனிய தொலைக்காட்சியில் பிரபலமான முகமாக மாறினார்.
1+1 தொலைக்காட்சி சேனலில் அவரது மிகவும் பிரபலமான நடிப்பு அவரது கடைசி படமாக அமைந்தது. ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், எதிர்பாராதவிதமாக நாட்டின் அதிபராக வரும், அரசியல் நையாண்டி கலந்த ஜெலென்ஸ்கியின் கற்பனைக் கதாபாத்திரமான, ‘மக்களின் சேவகன்’, மக்கள் மத்தியில் எதிரொலித்தது.
ஜெலென்ஸ்கி பிரச்சார பேரணிகள் மற்றும் நேர்காணல்களைத் தவிர்த்தாலும், அவர் தொலைக்காட்சியில் தொடர்ந்து தோன்றினார். மேலும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவர் ஆற்றிய உரைகள் நாட்டில் மாற்றத்திற்கான வளர்ந்து வரும் கோரிக்கைக்கு வழிவகுத்தன.
2019 இல் அவர் தனது வேட்பு மனுவை அறிவித்த உடனேயே, கருத்துக் கணிப்புகள் ஜெலென்ஸ்கியை சாதகமான வேட்பாளராகக் கணித்தன. அந்த நேரத்தில் அப்போதைய அதிபராக இருந்த பெட்ரோ பொரோஷென்கோவின் அரசாங்கத்திற்குள் ஊழல் பற்றிய அறிக்கைகள் மற்றும் டான்பாஸில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லாததால் அவருக்கு எதிரான மனக்கசப்பும் இதற்குக் காரணமாகும். ஜெலென்ஸ்கி தேர்தலில் 73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆயினும் ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா சதி் என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவித்தாலும், உக்ரேனிய உளவுப்பிரிவின் உள்வீட்டு சதி என்றே அறியப்படுகிறது.
![]()