முருகனைக் காண கிளிநொச்சி வந்தார் நளினி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையான நளினி தனது கணவர் முருகனை பார்ப்பதற்கு கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.

நளினியின் கணவர் முருகன் தற்போது கிளிநொச்சி பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையானவருமான நளினி தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

முருகன் மற்றும் நளினி ஆகியோர் மிக விரைவில் லண்டனில் இருக்கும் தங்கள் மகளிடம் சென்று மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *