யாழ்ப்பாணத்தில் பொலிசார் விரட்டிச் சென்று உதைத்து விழுத்தியதால் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் நேற்றிரவு பொலிஸார் விரட்டிச் சென்ற ஒருவர், மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர். குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *