யாழில் சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்ட வீடு முற்றுகை: 4 பேர் கைது

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டின்  உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வரைக் கைதுசெய்துள்ளனர்.

சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக  பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த  வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட போது மேலும் ஒருநபர் மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தப்பிச் சென்றவருடையதாக கருதப்படும் கைத்தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *