இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேவிற்கு சர்வதேச விருது!

ஸ்பெயினில் சமீபத்தில் நடந்து முடிந்த Las Palmas de Gran Canaria சர்வதேச திரைப்பட விழாவில், மூத்த திரைப்பட தயாரிப்பாளர் / இயக்குனர் பிரசன்ன விதானகேயின் சமீபத்திய திரைப்படமான, இந்திய-இலங்கை தயாரிப்பில் வெளியான, ‘Paradise’ க்கு பார்வையாளர்களுக்கான ஜூரி விருதுகளை வென்றது.
பிரசன்னாவின் இப் படத்தின் கதைக்கரு பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பான 2022ம் ஆண்டில் இலங்கைக்கு வரும் ஒரு ஜோடியை மையப்படுத்தி புனையப்பட்டது. இந்தத் திரைப்படம் 23வது முழு நீள திரைப்படப் பிரிவில் கலந்து போட்டியிட்டது. ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளில் உள்ள கிரான் கனாரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸ் என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே விழாவில் பிரசன்னா 2004 ஆம் ஆண்டு சில்வர் லேடி ஹரிமகுடாவை தனது ‘இரா மீடியமா’ (Ira Mediyama) அல்லது “ஆகஸ்ட் சன்” படத்திற்காக வென்றார்.
“சினிமா தயாரிப்பது எனக்கு தனித்துவமானது. அவற்றை எனது உணர்வுகளை பகிரும் ஒரு தளமாகவே நாள் கருதுகிறேன். எனது படங்களில் நான் சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் நான் என்னை நன்கு அறிந்து கொள்கிறேன்” என்று விழா இணையதளம் பிரசன்னாவை மேற்கோள் காட்டி கூறியது. இந்தப் படம் 2022 இல் தயாரிக்கப்பட்டது,
இது இலங்கை அனுபவிக்கும் மிக மோசமான நிதி நெருக்கடியைக் களமாய்க் கொண்டு கதை நகர்த்துகிறது. கடந்த ஆண்டு பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான மதிப்புமிக்க கிம் ஜிசோக் விருதை (Kim Jiseok Award for the Best Film) இதே “பாரடைஸ்” திரைப்படம் வென்றது.
17வது ஆசிய திரைப்பட விருதுகளில் இப்படம் நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பிராட்வே சினிமாதேக்குடன் இணைந்து ஆசியன் பிலிம் அவார்ட்ஸ் அகாடமி வழங்கிய விழாவில், ‘பாரடைஸ்’ சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த விருதுகள் பிரசன்ன விதானகே மற்றும் அனுஷ்கா சேனாநாயக்க ஆகியோருக்கும் சிறந்த எடிட்டர் விருது ஏ. ஸ்ரீகர் பிரசாத்துக்கும் கிடைத்தது.
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ பதாகையின் கீழ் ‘நியூட்டன் சினிமா’ தயாரிப்பில் உருவாக்கப்பட்ட – ‘பாரடைஸ்’ படத்தில் இந்திய சினிமாவைச் சேர்ந்த ரோஷன் மேத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பதுடன், இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திர பெரேரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கிறிஸ்டி நல்லரெத்தினம்
![]()