இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: ரஷ்யா குற்றச்சாட்டு

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.

அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்( யுஎஸ்சிஐஆர்எப்) என்ற அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது.இதனை நிராகரித்த மத்திய அரசு, இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யுஎஸ்சிஐஆர்எப் அமைப்பு தலையிட முயற்சி செய்வதாக பதில் அளித்து இருந்தது.

இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் லோக்சபா தேர்தல் நேரத்தில் ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் தேசிய மன நிலையை அமெரிக்கா சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. ஒரு நாடாக இந்தியாவை அவமதிக்கும் செயல். இந்தியாவில் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்தாமல் தேர்தலை சிக்கலாக்குவதே அமெரிக்காவின் நோக்கம். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டின் அறிக்கை தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *