கணவனை கட்டிப்போட்டு சிகரெட்டால் சூடு வைத்த மனைவி!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு, அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்.

ஏற்கனவே பல முறை தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார் மனைவி மெஹர் ஜஹான்.

இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது, சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை கணவன் சி.சி.ரி.வி. கமெரா மூலம் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் கணவன் மனைவிக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *