ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த்

2024 ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் யாழ் இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த்(Vijayakanth Viyaskanth) களமிறங்கவுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியிலிருந்து வனிந்து ஹசரங்க விலகுவதாக  சிறிலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்த வெற்றிடத்திற்கு மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.பாரிய எதிர்பார்ப்பு

அத்தோடு, யாழ் இளைஞனான வியாஸ்காந்த் இன்றைய தினம் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் களமிறங்கவுள்ளார்.

அதேவேளை, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *