தேர்தலுக்கு ஆயத்தமாகும் மகிந்த

எதிர்வரும் தேர்தலுக்காக  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் செயற்பாட்டு அலுவலகம்  திறக்கப்படவுள்ளது.

கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நாளை (09) பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு தொகுதி மட்டத்தில் கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதித் தீர்மானம்

எவ்வாறாயினும், அதிபர் தேர்தலுக்கான இறுதித் தீர்மானத்தை  சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்னும் எடுக்கவில்லை.

அத்தோடு, அதிபர் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை தனது வேட்பாளரை முன்வைப்பதா அல்லது வேறு வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டாம் என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *