இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையில் மோதல் : இறுதியில் நேர்ந்த சோகம்

இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்று அதிகாலை (05.05.2024) வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இசை நிகழ்ச்சியின் போது இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இவ்வாறு கொலையில் முடிந்துள்ளது.

பாணந்துறை பரத்த வீதியில் வசிக்கும் 17 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *