யாழில் இடம்பெறும் சர்வதேச ரீதியிலான பாரம்பரிய கலை போட்டி

சர்வதேச சிலம்பம் போட்டியை யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை நினைத்து பெருமை அடைகிறேன் என்று உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று(03.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தமிழக்கு அகராதி கொடுத்த இடம் இங்கு பேசுகின்ற தமிழ் தூய்மையான செழுமையான தமிழ் அதையிட்டு நான் பெருமை அடைகிறேன்.

அவ்வாறான ஒரு இடத்தில் உலக சிலம்பம் சங்கத்தின் உறுப்பினர்களும் வெளிநாட்டு மாணவர்களும் இணைந்து எமது பாரம்பரிய கலை போட்டியை நிகழ்த்தவுள்ளோம்.இலங்கை சிவலீமன் சங்கத்துடன் இணைந்து உலக சிலம்பம் சங்கம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சர்வதேச சிலம்பம் போட்டிகளை நடத்தவுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சர்வதேச சிலம்பம் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று காலை 8 மணி முதல் மாலை வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *