இந்தியா, சீனாவுக்கு அன்னியர்கள் மீது வெறுப்பு ” – பைடன் தீடீர் பாய்ச்சல்

அன்னியர்கள், புலம்பெயர்வதால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து வருகிறது எனக்கூறிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், சீனா முதல் ஜப்பான் வரையிலும், இந்தியாவும் அன்னியர்களை வெறுப்பதால் அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், வாஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

விழாவில் ஜோ பைடன் பேசியதாவது: புலம்பெயர்ந்தவர்களால் அமெரிக்க பொருளாதாரம் வளர்கிறது. சீனா பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது ஏன்? ஜப்பான் பொருளாதாரம் தள்ளாடுவது ஏன்? ரஷ்யாவும், இந்தியாவும் தடுமாறுவது ஏன்? அந்நாடுகள் அன்னியர்களை வெறுக்கிறது. இதனால், அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆனால், அன்னியர்களால் நமது நாடு வலுவடைந்து வருகிறது. இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *