மெக்சிகோவில் பயணிகள் பஸ் விபத்து : 14 பேர் உயிரிழப்பு

மெக்ஷிக்கோவில் 45 பேரை ஏற்றிச்சென்ற சொகுசு பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ் டி லா பெஸ் நகரில் இருந்து மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மனிநல்கோ நகருக்கு பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று(29) இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ், கெப்லுன் – ஷல்பா நகர் இடையேயான அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பயணிகளில் 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளடன் மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *