சீனா, மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

சீனாவின் ஜிஜாங் நகரில் நேற்றிரவு 9.25 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

சீனாவின் ஆட்சி பகுதிக்குட்பட்ட திபெத்தில் ஷிகாத்சே என்ற இடத்தில் இருந்து 146 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நடந்து சில மணிநேரங்களில் அண்டை நாடான மியான்மரில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதன்படி, மியான்மரில் நேற்றிரவு 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *