கவிதைகள்

கலக்கமதை தந்து விண்ணில் மறைந்தார்!… கவிதை … சங்கர சுப்பிரமணியன்.

அம்பி என்று நம்மில் வாழ்ந்த கவிஞர்
தும்பியாய் இயங்கி தொண்டு செய்தார்
நம்பியிருந்தோம் நூறாண்டைக் காண
கொம்பிழந்த கொடியாய் நாமானோம்

வம்பு ஒன்றும் வளர்த்திடாத மாமனிதர்
நெம்புகிற ஆற்றல் தந்து உடனிருந்தார்
தும்புபோல் இனிமைதரும் அவர் குரலும்
எம்புதற்கு ஏற்றம்தந்து புரவலராயிருந்தே

தள்ளாத வயதென்றாலும் தமிழில் தளரார்
வெள்ளத்தனைய மலர் நீட்டம் கண்டோம்
உள்ளத்தனைய அவரில் உயர்வுகண்டோம்
தெள்ளு தமிழில் மழலையர் கவிதை தந்தே

இலக்கிய கலைச் சங்கமதில் முன்நின்றார்
இலக்கின்றி பயணிக்காது காத்து வந்தார்
விலக்கிட முடியாத இடத்தையும் வென்றார்
கலக்கமதை தந்து விண்ணில் மறைந்தார்

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *