கிளிநொச்சியில் நள்ளிரவுவேளை கைது செய்யப்பட்ட பெண்கள்

சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு (27) கிளிநொச்சி நகரில் வைத்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் சென்ற காரை விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

காரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட

இதன்போது வவுனியா நோக்கி கடத்திச் செல்லும் வகையில் காரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கட்டியை கைப்பற்றியுள்ளனர்.

கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட காரும் அதன் சாரதி மற்றும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *