யாழில் போதைப் பொருள் கொடுத்து பெண் வன்புணர்வு!

யாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

குறித்த பெண் தனது பெற்றோரை இழந்த நிலையில் தனது சகோதரனின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அப்பெண் தனிமையில் இருந்துள்ள வேளை அத்துமீறி அவரது வீட்டுக்குள் நுழைந்த கும்பலொன்று அவரை துன்புறுத்தி, போதை ஊசியை செலுத்தி அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அத்துடன் தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, அவருக்கு பொதைப்பொருள் கொடுத்து  வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *