விஜய் நீங்க நினைக்குற மாதிரி இல்ல… அரசியல் என்ட்ரி குறித்து வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கிட்டத்தட்ட 68 படங்களுக்கு மேல் நடித்து அவர் இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இவரது சாம்ராஜ்யத்தை யாருமே அசைக்க முடியாத அளவிற்கு தனது மார்க்கெட்டிங் உச்சத்தில் வைத்திருக்கிறார். நடிகர் விஜய் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்த வருபவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார் இப்படியான நேரத்தில் விஜய்யை குறித்து பிரபல வில்லன் நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதாவது, கில்லி படத்தில் இல்லை அதற்கு முன்னதாகவே அவருடன் பகவதி, தமிழன் உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்திருக்கிறேன்.

அப்போதிலிருந்தே விஜய் வேலையில் ரொம்பவே சின்சியராக இருப்பார். ஷாட் வருவதற்கு முன்பு வரை அமைதியாக இருக்கும் நபர் ஷாட் ஆரம்பித்ததும் புயலாக மாறி எப்படித்தான் நடிக்கிறார் என நானே பலமுறை ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளேன் எனக் கூறியுள்ளார். மேலும் அரசியல் குறித்து, விஜய் அரசியலில் தனது முழு உழைப்பை நடிகர் விஜய் கொட்டுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என ஆஷிஷ் வித்யார்த்தி பேசியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *