லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்!

தொழிலதிபர் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகம் ஆன படம் லெஜெண்ட். அவரது சொந்த தயாரிப்பில் பிரம்மாண்ட செலவில் படம் எடுக்கப்பட்டாலும் பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. லெஜெண்ட் சரவணன் அடுத்து தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருகிறார். அந்த படத்தினை துரை செந்தில்குமார் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்க, லெஜெண்ட் படத்தின் இரண்டாம் பாகத்தையே எடுக்க முடிவெடுத்து இருப்பதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வந்திருக்கிறது.

சில மாதங்களில் ஷூட்டிங் தொடங்க வாய்ப்பிருப்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *