ஓமானில் கன மழை-17 பேர் உயிரிழப்பு!

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஓமனின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களை மூட ஓமன் அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கடும் மழை காரணமாக பல கார்கள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *