மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர்: மகிந்த கூறிய விடயம்

பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதனை பெயரிடுவது மிகவும் சவால் மிக்க விடயம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளரை தம்மால் பெயரிட முடியாது என தெரிவித்தார்.

மொட்டு கட்சி வேட்பாளர்

கட்சியிலிருந்து அதிபர் வேட்பாளர் ஒருவரை நியமித்தால் அந்தப் பதவிக்கான கனவில் காத்திருக்கும் ஏனையவர்கள் தன்னுடன் கோபித்துக் கொள்வார்கள்.

எனவே கட்சியின் பொருத்தமான அதிபர் வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பு சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மத்திய செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *