தமிழ்ப் பொது வேட்பாளர் யார்..! யாழில் முக்கிய சந்திப்பு

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது  இன்று (12.04.2024) மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

உப குழு

கலந்துரையாடலின் போது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் உப குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.

எனினும், பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *