சூரியக் கிரகணத்தில் கல்யாணம்!
அமெரிக்காவின் ஒஹாயோ (Ohio) மாநிலத்தில் முழுச் சூரியக் கிரகணத்தின்போது 20க்கும் அதிகமான ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
டிரெண்டன் (Trenton) நகரப் பூங்காவில் கிரகணத்தைக் காண நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.
சில தம்பதிகள் கிரகணத்தின்போது திருமணம் புரிய கடைசி நேரத்தில் முடிவெடுத்ததாய்க் கூறினர்.
கடைசி நேரம் என்பதால் அதிகத் திட்டமிடல் தேவையில்லாமல் போனது என்றும் சிலர் மகிழ்ந்தனர்.
சில தம்பதிகள் தனிமையில் திருமணம் செய்துகொள்ள விரும்பிய தங்கள் ஆசை நிறைவேறியதாகத் தெரிவித்தனர்.
சூரியக் கிரகணத்தின்போது சுமார் 3 நிமிடங்களுக்கு வானம் கவிழ்ந்திருந்தது. சுற்றிலும் இருட்டு. அப்போது தம்பதிகள் நடனமாடத் தொடங்கினர்.
பலர் சுற்றி இருந்தாலும் தாங்கள் மட்டுமே அங்கிருந்ததைப் போல் உணர்ந்ததாக அவர்கள் கூறினர்.
![]()