பிரான்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 3 பேர் உயிரிழப்பு!

பிரான்ஸின் தலைநகரான பரீஸில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று  இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையத்து சம்பவ இடத்துக்கு விரைந்த  தீயணைப்புப் படையினர் தீயை முற்றுமுழுதாக அணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுக் கசிவு காரணமாக குறித்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *