யாழ். இந்திய துணைத் தூதுவரை சந்தித்த விமானப்படையின் கட்டளை தளபதி

யாழ்ப்பாண (Jaffna) இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளைத் தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.

குறித்த சந்திப்பானது, மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று (01.04.2024) இடம்பெற்றுள்ளது.

இதில், யாழ்ப்பாண விமானப்படையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பொதுமக்களுக்கு செயலாற்றக்கூடிய வகையிலான உதவித்திட்டங்கள் மற்றும் பரஸ்பர உதவித்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், இந்நிகழ்வில், யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் அதிகாரி ராம் மகேஸ் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *