பக்கசார்பாக நடைபெறும் யுக்திய நடவடிக்கை: அநுர தரப்பு விமர்சனம்

யுக்திய நடவடிக்கை சிறு குற்றவாளிகளுக்கு மட்டுமே வலையமைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பீட உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுக்திய நடவடிக்கை

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உண்மையான ‘யுக்திய’ நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

அனைத்து போதைப்பொருள் வியாபாரிகள், மோசடி செய்பவர்கள் மற்றும் குற்றவாளிகள் இதனை மனதில் கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் நேரடியாக அரசியலுடன் தொடர்பு கொண்டுள்ளது. பாதாள உலக கலாசாரமும் அரசியல்வாதிகளால் தமது சொந்த நலன்களுக்காக வளர்க்கப்படுகின்றது” என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *