பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றத்தை நாடும் அரசியல் தலைவர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக இன்று நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர, பொருளாளர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கடந்த 30ம் திகதி கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *