இந்தியா

514 எம்.பி.க்களில் 225 பேர் மீது வழக்குகள் உள்ளன- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏ.டி.ஆா்.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது பாராளுமன்ற எம்.பி.க்களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 போ் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவா்களுள் 29 சதவீதம் போ் மீது கொலை, கொலை முயற்சி, இரு சமூகங்களுக்கிடையே மோதலை உண்டாக்குதல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய மிகத் தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 9 போ் மீது கொலை வழக்குகள் உள்ளன. அவா்களில் 5 போ் பா.ஜ.க.வைச் சோ்ந்தவா்கள். அதேபோல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 28 எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுள் 21 எம்.பி.க்கள் பா.ஜ.க.வைச் சோ்ந்தவா்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக 16 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன. அவா்களுள் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக மூன்று போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகமான கோடீஸ்வர எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உள்ளன. மற்ற கட்சிகளில் இருந்தும் கணிசமான எம்.பி.க்கள் இந்தப் பட்டியலில் உள்ளனா்.

அந்த வகையில் நகுல்நாத் (காங்கிரஸ்) முதல் இடத்திலும் டி.கே. சுரேஷ் (காங்கிரஸ்) 2-ம் இடத்திலும் ரகுராமா கிருஷ்ண ராஜு (சுயேட்சை) 3-வது இடத்திலும் உள்ளனா்.

உத்தரபிரதேசம், மராட்டியம், பீகாா், ஆந்திரா, தெலுங்கானா, இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 50 சதவீதத்தும் மேலான எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

தற்போது மக்களவையில் 73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்கின்றனா். மக்களவையில் மொத்தமாக 14 சதவீத பெண் எம்.பி.க்களே உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *