கவிதைகள்

“கைப்பறவை மகளானாள்” …. கவிதை …. முல்லைஅமுதன்.

கைகளில் வந்தமர்ந்தபறவைகனிவுடன் பார்த்தது.எதையோ இழந்ததின் கனதியானவலி கண்ணில் தெரிந்ததை உணர்ந்தேன்.பெயர் வைப்போமா?மகள் கேட்டாள்.நீயே தெரிவு செய்துகொள்.கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பூனைதலையைத் தூக்கிப் பார்த்துவிட்டுமீள கண்ணை மூடிக்கொண்டது.கணினியில் பெயரைதெரிவு செய்வதில் முனைப்புக் காட்டினாள் மகள்.என் அணைப்பில் அது எதையோ உணர்ந்துசாவகாசமாக,பதற்றம் தணிந்து அமைதி கொண்டது.மனைவி அதிக ஆர்வம் கொண்டிருக்கவில்லை.கைகளை விட்டுப்போனமூத்தவள் ஜனனியை அணைத்திருந்தது இப்படித்தான்…கண்கள் கசிய மகளைப் பார்த்தேன்.பெயரைத் தெரிவு செய்தாயிற்று.கைப்பறவை மகளானாள்.

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *