கவிதைகள்சிறுகதைகள்
“இழவு வீட்டுக்குபோய் வந்தால்… மருத்துவரிடம் போய்வந்தால்” … கவிதை …. முல்லைஅமுதன்.

குளித்துவிட்டு உள்ளே வா என்றாள் அம்மா.நண்பனின் இறப்பிற்கு சென்றுவந்ததில்இன்னும் ஆறாத வருத்தம் அதிகம் தான்.குளித்துவிட்டுவந்தேன்சுடுதேநீர் ஆறுதலாக இருப்பினும்,அவனின் நினைவு அகல நாட்களெடுக்கலாம்.இப்படித்தான்,அம்மா சொல்லுவாள்…இழவு வீட்டுக்குப் போய் வந்தால்….மருத்துவரிடம் போய்வந்தால்….தனக்குப்பிடிக்காதவர்களிடம் போய் வந்தால் கூட..அம்மாவைப்போல இப்போது மனைவி எதுவும் சொல்வதில்லை…இழவு வீட்டுக்குபோய் வந்தால்…மருத்துவரிடம் போய்வந்தால்…என் எதிரியிடம் கூட நட்பில் இருக்கிறாள்.வானம் கூட முன்னைப்போல இல்லையே.
முல்லைஅமுதன்
![]()