கவிதைகள்
“இன்றைய மரணங்களை நினைக்க மனது கனத்து” …. கவிதை …. முல்லைஅமுதன்.

இரவு முழுவதும்அழகுறவண்ணமயமான கலவையுடன்தயார் செய்தான்.தன் உடலை அளவெடுத்துவடிவமைக்கப்பட்டது போலிருந்தது.முழுமையாக்கியபின்இன்றைய உழைப்புடனும்,நாளைய கனவுகளுடனும்மனைவியிடம் சொல்லிவிட்டு தூங்கப்போனான்.மறுநாள்,உச்சிவெயில் தகிக்க..வானம் அழாத ஒரு பொழுதில்…அவனின் உடலைஅவனே வடிவமைத்த பெட்டியுள் அடக்கப்பட்டிருந்தான்.
முல்லைஅமுதன்.(இன்றைய மரணங்களை நினைக்க மனது கனத்து…இப்படி நினைத்துப்பார்த்தேன்)
![]()