கட்டுரைகள்
பாலியலும் மற்ற பேய்களும்! …. 01 ….. நெருக்கத்துக்கும் காதலுக்கும் இடையிலான சிக்கலான உறவில் தேடல்!… சங்கர சுப்பிரமணியன்..

சதர்ன் கிராஸ் தொடர்வண்டி நிலையம். புறநகர் செல்லும் வீலைன் தடம் நான்கில் ஜீலாங் செல்லும் தொடர்வண்டியில் அமர்ந்திருந்தேன். சில மாணவர்கள் தொடர்வண்டியில் ஏறினர்.
அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் அது இந்தி என்பது எனக்கு புரிந்தது. அவர்கள் பேச்சு மற்ற நாட்டவர்களின் பேச்சை ஒலியிழக்க வைத்தது.
அவர்கள் இந்தியர்கள் அல்லது பீஜியர்களாக இருக்கலாம் என எண்ணினேன். அதில் இருவர்கள் காதலர்கள். அவர்கள் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியர்களாகவே மாறியிருந்தார்கள. அதற்காக என் இனத்தில் அப்படி எவரும் இல்லை என்று சொல்லவில்லை. உண்மை எங்கிருந்தாலும் பொய்யாகாது.
அப்போது நம் பண்பாடு, காதல் மற்றும் பாலியல் போன்றவற்றை பற்றி கல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஶ்ரீமன்டி சென்குப்தா என்ற எழுத்தார் வயர் என்ற ஆங்கில இதழில் எழுதியிருந்த கட்டுரை என் நினைவுக்கு வர அதைத் தங்களோடு பகிர்கிறேன். இது நான் படித்ததை பகிர்வதாகும்.
கொல்கொத்தா:

ஒரு வெளிநாட்டவர்க்கு இந்தியா காதல்
மிகுந்த நாடாகத் தெரியும். காதல் கதைகளுடன் கண்கவர் ஆடைகள் திறமையான நடனம் மற்றும் அபாரமான நடிப்புடன் வரலாற்றைத் தழுவிய லைலா மஜ்னு போன்று அல்லது அரசன் ஜாஜஹானுக்கும் அரசி மும்தாஜ் இருவருக்கும் இடையிலான உண்மையில்
அழியாத காதலை வளர்ச்சியடைந்து வரும் பாலிவுட் திரைப்படத் தொழிற்சாலை தொடர்ந்து வெளியிடுகிறது. 

நாங்கள் உண்மையில் பயமுறுத்தப்பட்டும் சமீபகாலம்வரை சிறையில் அடைக்கப் பட்டுக்கொண்டும் இருந்தோம்.
நூறுகோடிக்கும் மேற்கொண்ட மக்கள் தொகையக் கொண்ட இந்தியாவில் பாலுறவு பற்றி சிறிது கேட்டாலோ அல்லது அதைப்பற்றி சொன்னாலோ எப்போதும் முகம் சிவந்து விடுவதை புரிந்துகொள்ள கடினமாயுள்ளது.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் நட்சத்திர ஓட்டலில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் தங்கள் விருப்பம்போல் தங்கலாம் என்ற அறிவிப்பு வந்ததும் அது பலருக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம்.
ஏனென்றால் காதலர் தினத்தன்று இந்தியா முழவதும் 90.57 சதவிகிதம் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் பதிவானதை அறிந்ததாக தாழ்வுடன் பகிர்ந்து கொள்ள இசைந்தனர் விடுதியினர். இந்தியாவின் காதலர் பண்பைப்பற்றி இந்த பதிவு என்ன சொல்கிறது?
“இந்திய சமுதாயத்தில் ஆழமாக
பதிந்துவிட்ட போலிநடிப்பை இது வெளிப்படுத்துகிறது” என்று கேரளாவிலுள்ள M. K. அர்ஷுன் என்ற ஆயுர்வேத மருத்துவர் சொல்கிறார். “அநேக நேரங்களில் இன்பம் அனுபவிப்பதை தவிர்க்கப்பட்ட ஒன்றாகவும் மறைக்கப்பட்ட ஆசையாகவும் மற்றும் தார்மீக ரீதியில் இழிவானதாகவும் கருதப்படுகிறது. 

பழங்காலத்தில் தாராளமாக காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய இடமென்று பெருமையுடன் அறியப்பட்ட நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்
முரண்பாடாகவும் பாலியல்பற்றிய
குறியீடுகளை கையாள்வதை பண்பாகவும் கூறுகிறார் இவர்.
முற்போக்குவாதிகளான நமது
முன்னோர்களின் எச்சங்கள் கட்டடக்கலையின் சிறப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையில் விளக்கமாக கஜூரகாவின் கோவில் சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ளன.
பல சமஸ்கிருத கவிதைகளிலும் படைப்புக்களிலும் மற்றும்
தத்துவஞானி வாத்சாயனா் எழுதிய புராதன நூலான காமசூத்திரம் என்ற நூலில் 63 வகையான உடலுறவு நிலைகளையும் எடுத்துக் காட்டுக்களோடு விளக்கிய சிறப்பைப் பெற்றுள்ளது. எதையும்
பொருட்படுத்தாது, உடலுறவு என்பது மக்களின் மனநிலையில் குழந்தை பெறுவதற்கு மட்டுமே என்ற எண்ணமாக கருதப்பட்டது.
“பாலியல் உறவானது காதலின் அடையாளமாகவே வெளிப்படுகிறது. காதலுக்கும் உடலுறவுக்கும் இடையேயான வேறுபாடு இந்தியாவில் காதல்செய்யும் பண்பில் தீங்குண்டாக்குகிறது” என்று டில்லியை அடிப்படையாக கொண்ட பாலியல் ஆய்வாளாரான மருத்துர் அரோரா மருத்துவ மனையை உருவாக்கிய மருத்துவர் தீபக் அரோரா சொல்கிறார்.
இந்தியாவின் பாலியல் இரட்டை
நிலைப்பாட்டைப் பற்றி சொல்லும்போது “நமது பெற்றோர்கள் நமக்கு போதிய அளவு பாலியல் கல்வியை கொடுக்காததால் நாமே அதை உணரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது நம்மை பாலுணர்வின் விளிம்புநிலைக்கு கொண்டு சென்றதோடு உடலுறவை உணர்வோடு சம்பந்தப் படாமல் உடலோடு மட்டுமே
சம்பந்தப்பட்டதாக இழிவுபடுத்தப் பட்டிருக்கிறது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()