மனதுக்கு பிடித்த மலேசியப் பயணம்! …. 01…. அருணாசலம் லெட்சுமணன்.

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 – கோலாலம்பூர்நாடுகளுக்கிடையிலான பயணங்கள் என்றவுடன் ‘மார்க்கோபோலோ’ என்ற பெயர்தான் ஞாபத்துக்கு வருகிகிறது. உலக இலக்கிய நகர்வுகளில் பயண இலக்கியம் ஓர் கலையாக பரினமித்து வந்துள்ளது. தேடல் ஆர்வத்தின் பொதுத் தன்மையோடு பெற்ற அனுபவத்தின் ஊடாக ஊகித்துக்கொள்கின்ற, உணர்ந்துக்கொள்கின்ற பாங்கின் பதிவுகளாக இப் பயண இலக்கிய வடிவம் தனித்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு மொழிகளிலும் பயண இலக்கியம் மேலெழுந்து பொது தன்மையை உள்ளடக்கியுள்ளமை கவனிக்கதக்கது.பயணம் என்பது மகிழ்வி;ற்குறியது. பாடசாலை காலங்களிலும் சுற்றுப்பிரயாணம் என்றவுடன் கொண்டாட்டத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது வழமை. பங்கேற்கும் பயணம் பற்றி கட்டுரை எழுதப் பணிக்கும் போது ஆர்வப்படுபவர்கள் சிலர். ஆத்திரப்படுபவர்கள் பலர். கட்டுரை எழுதுவதைத் தவிர்க்கவே சுற்றுப்பயணங்களை தவிர்த்த அனுபவங்களும் சிலருக்கு இருக்கும்.
பயணக் களைப்பு, விடுப்பட்டிருந்த வேலைகளை சீர் செய்தல், பயணத்தின் செலவால் ஏற்பட்ட மாதாந்த பட்ஜட்டை சீர் செய்வதில் ஏற்படும் உள்ளார்ந்த சுமை நிலைகள் என்பதெல்லாம் மன அழுத்தத்திற்குறியதாகவும் அமையும். இச் சுமை நிலையில் இருந்து சற்று விடுபடுகின்ற போதுதான் பயணத்தின் அனுபவங்கள் மனதில் மீட்டுறுவாக்கம் பெறும்.
அண்மையில் சென்று வந்த மலேசிய பயணமும் அவ்வாறான அனுபவத்தைக் கொண்டதாகவே அமைகிறது. 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஏற்பாடுகள் கடந்த ஒரு வருட காலமாகவே ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பில் கடும் பிரயத்தனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. வலைத்தளங்களில் மாநாடு தொடர்பில் நான் அறிந்ததன் பின்னர் பலரும் அறியும் வகையில் புலனக் குழுக்களில் பகிர்ந்தேன். சிலருக்கு தனிப்பட்ட வகையில் தொலைபேசி அழைப்பு எடுத்தும் கூறினேன். யாரும் கண்டுக்கொண்டதாக இல்லை.
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுக்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் இரண்டு வேறு 11 வது தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடாத்துவதற்கான முயற்சிகளில் துரிதமாக ஈடுபட்டார்கள். இரண்டு அணியினரும் ஆய்வாளர்களை தெரிவு செய்யும் நோக்கில் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பி வைக்குமாறு கோரியிருந்தார்கள். இரண்டு ஏற்பாட்டாளர்களுக்கும் அனுப்பி வைத்தேன். ஒன்று சிங்கப்பூரிலும் மற்றது சவூதி அராபியாவிலும் நடத்துவதற்கான ஏற்பாடாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
சிங்கபூரில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு யூலை 2023 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் திட்டமிடப்பட்ட நிகழ்வே மலேசியாவில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இரண்டு மாநாடுகளுக்குமான எனது கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து மின்னஞ்சல் தகவல் மூலம் அறிந்தேன்.
விரிவான கட்டுரை இம் மாநாட்டிற்காக மின்னஞ்சலில் விரைந்தது. அதன் விளைவாகவே கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிய எனது பயணம் அமைகிறது.18.08.2023 கட்டுநாயக்க விமான நிலையம். உள் நுழையும் வளாகத்தின் முன் பகுதியில் மலேசியாவில் இடம்பெறவிருக்கும் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கையில் இருந்து ஆய்வாளர்களாக பங்கேற்கும் அணியினர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களது தலைமையில் ஒன்று கூடுகிறோம். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பிரதம நூலகர் இரா.மகேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை தலைவர் திருமதி சாந்தி கேசவன் அம்மையார், கிழக்குப் பல்கலைக்கழக நுன்கலைத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எஸ்.சந்திரகுமார். மட்-ம.மே- நாவற்காடு நாமகள்; வித்தியாலய ஆசிரியர் ந. கோவேந்தன், பூபாலசிங்க புத்தகசாலை அதிபர் திரு.பூ.ஸ்ரீதர்சிங், ஆகியோர் உட்பட நானும் அக் குழுவில் அங்கம் வகித்தோம்.
ரூபாயில் இருந்து ரிங்கிட்டுக்கு…..கடவுச்சீட்டு, 11வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமான டிக்கட், மலேசிய நாட்டிற்குள் உள் நுழைவதற்கு கிடைக்கப்பெற்ற அனுமதி வீசா ஆகிய ஆவணங்கள் மற்றும் பொதிகளுடன் உள் நுழைகிறோம். செல்லும் வழியில் பணம் பரிமாற்றம் செய்யும் கவுண்டர். ஒரு நாட்டிற்கு செல்லும் போது அந் நாட்டின் புழக்கத்தில் உள்ள நாணயத்தை மாற்றிக் கொள்வது வழமை.பணம் மாற்றுதல் – மாற்று வீதம்நாணய மாற்று வீதம் என்பது இரு நாடுகளில் புழக்கத்திலுள்ள நாணயங்களில் ஒரு நாணயத்தின் மதிப்பை மற்ற நாணயத்தில் எவ்வளவு பெறுமானத்தைக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பதாகும்.
மலேசிய நாணயம் மலேசிய வெள்ளி (மலேசிய ரிங்கிட்) என அழைக்கப்படுகிறது. 100 சென்ஸ் 1 ரிங்கிட் ஆகிறது. இங்கும் பத்தின் மடங்குகளாகவே பெறுமான அதிகரிப்பு நிலவுகிறமை குறிப்பிடத்தக்கது. மலேசிய மொழியான மலாய் மொழியில் ஒரு காசு என்பது 1 சென் என அழைக்கப்படுகிறது. இந்த நாணயத்தை மலேசிய நெகரா வங்கி வெளியிடுகிறது.
1975 வரையில் டாலர் என்றே அழைக்கப்பட்டது. அதன் பின்னர்தான் ரிங்கிட் என அழைக்கப்படுகிறது.
16ம் நூற்றாண்டில் போர்த்துகேயர்கள் மலாக்காவை ஆட்சி செய்த காலம். அவர்கள் பயன்படுத்திய நாணயம் ஸ்பானிய வெள்ளியாகும். ஸ்பானிய நாணயங்களின் ஓரங்களில் சிதரல்கள் மாதிரி மேடு பள்ளங்கள் காணப்படும். இவ்வாறான சிதரல்கள் ‘ரிங்கிட்’ என மலாய் மொழியில் குறிப்பிடப்படும். ரிங் (சுiபெ) என்பது வளையல் என பொருள்படும். கிட் (பனை) என்பது மேடு பள்ளம் என பொருள்படும். இச் சொற்கள் இரண்டினது சேர்க்கையாகவே ரிங்கிட் என யதார்த்தமாக அழைக்கப்படுகிறது.
1980 களில் கிளாந்தான் மாநிலத்தில் ‘கும்பாங்’ எனும் தங்க நாணயம் புழக்கத்தில் இருந்துள்ளது. அல் ஜிலுஸ் கிளந்தான் எனும் ஜாவி எழுத்துக்கள் காணப்படுகிறது. அம் மாநிலத்தில் பத்து காசு ‘சத்து கும்பாங்’ எனவே அழைக்கப்படுகிறது. 1909 களுக்கு பின்னர் ‘கும்பாங்’ எனும் சொல் விலக்கப்பட்டுள்ள நிலையிலும் ‘கும்பாங்’ எனும் சொல் பேச்சு வழக்கிலும் உள்ளமையும் கவனிக்கதக்கது.
1959.01.26 திகதி ‘மலேசிய நெகரா வங்கி’ தோற்றுவிக்கப்பட்டது. 1957.08.31 பிரித்தானிய காலனி ஆட்சியிடமிருந்து விடுதலை பெறுகிறது. 1963.09.16 மலாயா கூட்டமைப்பு, சரவாக், வடபோர்னியா, சிங்கபூர் ஆகியவை இணைந்து மலேசிய நாடாக பிரகடணம் ஆனது. மலேசியா சுதந்திரம் பெற்றதன் பின்னரும் 1967 வரையில் பிரித்தானிய நாணயத்தையே பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. 1967.06.12ம் திகதியே மலேசியாவின் முதல் நாணயம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மலாயா அவசர காலம் – 1948.06.16 தொடக்கம் 1960.07.12 பிரித்தானியாவிடமிருந்து பெற வேண்டிய தனித்துவத்தை விடுதலை வேட்கையாக பிரகடனப்படுத்திய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் போர்ப்படை மலாயா தேசிய விடுதலை படை என தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது. இப் படையுடன் பிரித்தானியர்கள் போர்த்தொடுத்த காலப்பகுதியே ‘மலாயா அவசர காலம்’; என வரையறுக்கப்படுகிறது. மலேசிய ஒப்பந்தம் (எம்.ஏ63) ஐக்கிய இராச்சியம், வடக்கு அயர்லாந்து, மலாயா கூட்டமைப்பு, வடக்கு போர்னியா, சரவாக், சிங்கபூர் ஆகிய நிலப்பகுதிகள் இணைந்து 09.யூலை 1963 அன்று கையொப்பமிட்டும் 31.யூலை முத்திரையிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1967.யூன் 12 வெளியிடப்பட்ட ரிங்கிட் நாணயம் சமகாலத்தில் பின்வருமாறு பெறுமானம் கொண்டதாக அமைகிறது. ஒரு மலேசிய ரிங்கிட் இலங்கை பெறுமதியில் ரூபாய் 69.2404 ஆகிறது. அவ்வாறே ஒரு ரிங்கிட் இந்திய பெறுமதியில் இந்திய ரூபாய் 17.8736 ஆகிறது. அமெரிக்க டொலர் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு 4.6525 மலேசிய ரிங்கிட் தேவையாகிறது. விமான நிலைய நடைமுறைகளை நிறைவு செய்த நிலையில் எயார் ஏசியா விமானம் நோக்கி பயணிக்கிறோம்……..பயணம் தொடரும்…..
![]()