“வழுக்கை” …. சிறுகதை …. யாழ் ராகவன்.

ஒரு வழியா சமய வேவேல்க்கு பொண்ணு கிடைச்சிருச்சு எப்படியும் இந்த தை மாசத்துல கல்யாணம் முடிஞ்சிடும் என்று உறவினர்கள் மத்தியில் ஒரே பேச்சா இருந்தது. தேவதானப்பட்டி சுற்றியுள்ள எல்லா ஊரிலும் சமய வேலை ப்பற்றி எல்லோருக்கும் தெரியும் எப்போது யார் வந்து கதவைத் தட்டினாலும் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்யும் சமய வேலை எல்லோருக்கும் பிடிக்கும்.
வயது 35 தான் ஆனால் தலையில் முடி சுத்தமாக இல்லை. சமயவேலைப் பார்பவர்கள் எல்லோரும் அவன் தலையை ப்பார்த்து விட்டு அப்புறம் மாப்பிள்ளை மண்டையில இரண்டு ஏக்கர் நிலம் உழுது விவசாயம் பண்ணின நல்லா விளையும் என்பார்கள்.
“சிலர் தலை கிளார் அடிக்குது அண்ணா” என்பார்கள்.
சிலர் அப்புறம் “உங்க பாடு கொண்டாட்டம் சீப்பு எண்ணெய் ஹேர் டை செலவு இல்லாமல் ஜாலியா இருக்கலாம்.”‘சித்தப்பா இளநி விக்கிற கடை பக்கம் போயிடாதீங்க”இப்படி ஆறு முதல் 60 வரை எல்லோருக்கும் கிண்டல் செய்ற பொழுதாக சமய வேலின் தலை வழுக்கை இருந்தது.
ஆரம்பத்தில் எவ்வளவு அடர்த்தியான முடி கற்றைக் கற்றையாக நெற்றியில் வழிந்து கருப்பு அருவி போல் இருக்கும். கல்லூரியில் சேரும்போது முடி கொட்ட தொடங்கிவிட்டது. நிறைய வைத்தியங்கள் நிறைய சிபாரிசுகள் ஒவ்வொருத்தர் சொல்லும் யோசனைகள் அத்தனையும் மூடி கொட்டுவது முன்னிலும் அதிகமானது.
பொது இடங்களில் போவதற்கு யோசித்து மன உளைச்சல் அதிகமானது சமய வேலுக்கு. பெண்கள் எல்லாம் இவன் தலை முடியை ப்பார்த்து கிண்டலாக சிரிப்பதாக பேசுவதாக நினைத்து கொள்வான். சிலர் வேண்டுமென்று கோயில்களில் பொது இடங்களில்”யோவ் சொட்ட” என்று சொல்லிவிட்டு திரும்புவார்கள்.
அன்புள்ளம் கொண்ட மனிதனின் மனதை ச்சிதைப்பதற்கு தான் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன. அதில் பிரதான விஷயமாக அவன் தலை முடி இருந்தது.கரும்பு உள்ளம் கொண்டவன் சமயவேல்எல்லோருக்கும் உதவுகின்ற மன பக்குவம் அவனுக்கு உண்டு.
மாரியம்மன் கோவில் அன்னதான திருவிழாவின் போது எல்லா வீடுகளிலும் சென்று வசூல் செய்வான். அவற்றையெல்லாம் மொத்தமாக்கி மண்டி தெருவில் பொருள்களை எல்லாம் வாங்கி காய்களைச் சேகரித்து சமையல் கலைஞர்களை வரவழைத்து மைக் பிடித்து சரியான ஒழுங்குபடுத்தி அறிவிப்புகளைச் சொல்லி பந்தி பரிமாறி கடைசியில் அனைவருக்கும் பிரசாத பையை
வழங்குவது வரை அனைத்து வேலைகளையும் ஓடி ஓடி செல்பவன் சமயவேல்.
கைகட்டி யாரிடமும் வேலை பார்க்கக் கூடாது அரசாங்க ஊதியம் என்ன அரசாங்க உத்தியோகம் என்ன நாமளே நாலு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் எனசொந்த உழைப்பில் மளிகைக் கடை, பிளக்ஸ் கடை, சோடா கம்பெனி எலக்ட்ரிக்கல் கடை என்று நான்கு கடைகளை வைத்து நிர்வாகம் சிறப்பாக ச்செய்து கொண்டிருப்பவன் சமயவேல்.
பண்டிதம் பார்த்து பண்டிதம் பார்த்து பணம் குறைந்து தான் மிச்சம் ஒட்டுமொத்த முடியும் கொட்டி மண்டை ஷைனிங்கான கிரானைட் கல் போல மின்னுகிறது. ஒரு அளவிற்கு மேல் அதைப் பற்றி கவலை பட கூடாது தொழிலைக்ர கவனிப்போம் ஒரு பக்கம் சேவையை செய்வோம் என்று முடிவு எடுத்து விட்டான் சமயவேல்.
இந்த வாழ்க்கை ஒருமுறைதான் இழந்ததை நினைத்து வருந்துவதா இருப்பதை மேம்படுத்துவதா கூந்தல் மட்டுமல்ல ஒரு மனிதனின் அழகையும் அறிவையும் தீர்மானிப்பது அது வெறும் கூந்தல் மட்டும் தான் என்பதை பலமுறை அறிவு சொன்னாலும் மனது கேட்க மறுக்கிறது.
கண்ணாடி முன்நின்று பார்க்கும் போதெல்லாம் மனசு நிறைய பேசுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நெற்றியில் நிறைய திருநீறு பூசிக்கொள்ளும் போதெல்லாம் ஒரு நிமிடம் விசும்புவான்.
திருமணம் முடிப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கி இரண்டு வருடம் மேலாகிவிட்டது. போட்டோவில் கிராபிக்ஸ் செய்து தலையை நிறைய முடி இருப்பதைப் போல இவனுக்கு தெரியாமல் தரகர் மூலமாக அம்மா கொடுத்து விடுவாள். நேரில் வந்து பார்த்தவர்கள் அல்லது யாரிடமாவது கேட்டவர்கள் இவர் தலையை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.
படிப்பை சம்பாதிக்கும் திறமையைஉதவி செய்யும் குணத்தை பெரியோர்களை மதிக்கும் தன்மையை இவற்றையெல்லாம் நோக்காமல் என் தலையை வைத்து என்னை தீர்மானிக்கிறார்களே என்று பலமுறை நொந்து கொள்வான் சமயவேல்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஒரு பார்வையற்ற பெண்மணி பாடல்
பாடிக்கொண்டிருந்தாள்” வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னுநட்டு ரெண்டு வாழ மரம் கட்ட போறேண்டி பந்தல் ஒன்னு போட்டா போதுமா பொண்ணு கிண்ணு வேணாமா பொண்ணு இல்லாம கல்யாணமா நீ இல்லாம நான் ஏதம்மா”அந்தப் பெண் இரண்டு குரலிலும் அற்புதமாக பாடியது மனக்களர்ச்சியை ஏற்படுத்தியது சமய வேலுக்கு அவன் கண் முன்னே கனவுகள் விரிந்தது.மனக்கோலத்தில் அவன் மிதப்பது போல் ஒரு நிமிடம் கனவில் அவன் சஞ்சரித்தான்.
அந்த பெண்ணிடம் சென்று உங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம் நினைக்கிறேன் என்ன வேணும் என்று கேட்டான் இந்த மைக் சின்னதா இருக்கு ஒரு ஸ்பீக்கரோட இருந்தா நல்லா இருக்கும். நீங்க யாருன்னு தெரியல என்கிட்ட வந்து கேக்குறீங்க என அந்த பெண்ணும் வெட்கம் கலந்த குரலில் உங்களுக்கு நன்றி எனச் சொன்னாள். உடனே தன் நண்பருக்கு போன் அடித்து அவள் சொன்ன மாதிரியே வாங்கி கொடுத்தான் சமயவேல்.
டீக்கடைக்கு சென்ற தன் கணவனை அறிமுகப்படுத்தி இவர் டீக்கடைக்கு போனதால் தான் நான் ரெண்டு வாய்ஸ்ல பாட வேண்டிதா போச்சு. என சொன்ன பொழுது இவர் நமக்கு உதவி செய்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தினாள். தன்னைப் போலவே பேருந்து நிலையம் வந்து போகிற ஆயிரம் மக்களையும் இவர்கள் பாட்டு பாடி மகிழ்ச்சியடையவைக்கிறார்கள்.பெரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் மனம் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நடந்தான் சமயவேல்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் ஒன்று நகரின் மையப்பகுதி உள்ளது. 50க்கும் மேற்பட்ட வயதானவர்கள் அங்கே தொழுநோயின் கொடூரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கத்தோலிக்க திருச்சபைச் சேர்ந்த அருள் சகோதரிகள் இறுதி காலத்தில் அவர்களை நல்லபடியாக வழி அனுப்பவும் அவர்கள் நோய் குணமாகவும் மருத்துவமும் வழிகாட்டுதலும் செய்து கொண்டிருக்கிறார்கள். தொழில் விஷயமாக அந்த பகுதிக்கு செல்லும் சமயவேல் இந்த நிறுவனத்தின் போர்டை பார்த்து பலமுறை யோசித்தது உண்டு
இவன் பொருள் வாங்கும் கடையில் அவர்கள் உண்டியல் வசூல் செய்ய வருவார்கள்ஒரு நாள் அவன் அந்த மையத்திற்கு சென்று அங்குள்ள நடைமுறைகள் அந்த பாவப்பட்ட மக்கள் அத்தனையும் பார்த்து மாத மாதம் தன்னால் இயன்ற தொகை தருகிறேன் சொல்லி பணம் அனுப்பி வைப்பான்.
இவன் முகவரியை வாங்கி அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவனுக்கு வாழ்த்து சொல்லி இவளை நல்லா இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்து விசாரித்து கடிதம் எழுதுவார்கள் 50-க்கும் மேற்பட்ட கடிதம் ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு வரும்.
ஊஞ்சலூர் அஞ்சலகத்திற்கு புதிதாக ஒரு பெண் அஞ்சல் ஊழியர் வந்திருக்கிறார் என்று ஊரெல்லாம் ஒரே பேச்சு. முகத்தில் எப்பொழுதும் டன்கணக்கில் புன்னகையோடும் பார்ப்பவர்களை வசிகரிக்கக் கூடிய கூந்தல் அமைப்பும். தன் வேலையை காதலோடு செய்யும் அமுதா. அந்த ஊரு அவளுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு பிரியப்பட்டு போனாள். அவளுக்கு எல்லோரும் வேண்டும் யார் மீதும் வெறுப்புகளோ கோபங்களோ இல்லை. இன்னார் நேசத்திற்குரியவர் இன்னார் வெறுப்புக்குரியவர் என்ற அட்டவணை எப்போதும் அவளிடம் இல்லை.
எல்லோரையும் உறவினர் போல ஒரே மாதிரி பார்ப்பது சிலருக்கு மட்டும் தான் சாத்தியம் அந்த சிலரில் அமுதாவும் உண்டு.
அஞ்சலகத்திற்கு வருகின்ற படிக்காத மக்களின் தேவைகளை வாஞ்சையோடு பூர்த்தி செய்து எல்லா விதமான அஞ்சல் அட்டைகளை கவர்களை பத்திரமாக எல்லோரிடத்திலும் ஒப்படைக்கிற பணியை செய்வது அவளின் சிறப்பு. தனது நீளமான கூந்தலில் எப்போதும் பிரியமுள்ளவள்.
சமய வேலுக்கு வரும் கடிதத்தை பார்த்து இப்படி ஒரு மனிதரா இந்த ஊரில் இவருக்கு இத்தனை ரசிகர் கடிதம் என்று ஒரு முறை அந்த போஸ்ட் கார்டை படித்துவிட்டாள். அது முதல் அவனை கண்டு அவரிடம் தான் கடிதத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.ரத்தினசாமி அண்ணன் கிட்ட யாருன்னு எந்த சமய வேல் என்கிறது.
” நம்ம வழுக்க”சொன்னதும் சற்றென்று அப்படின்னா யாரையும் சொல்லி கேலி பண்ணாதீங்க இயல்பா தான் சொன்னாள். அவனுக்கு வந்த கடிதத்தை ஒப்படைக்க முதல் முதலாக சமயவேல் வீட்டுக்கு சென்றாள் அமுதா.
இங்க யாருங்க சமயவேல் என்று கேட்டவுடன் உள்ள இருந்து சட்டை மாட்டிக் கொண்டே வெளியே வந்தான் சமயவேல். நீண்ட நாட்களுக்கு பின்னர் அவன் மனதில் திடீரென்று ஒரு வெட்கம் வேகமாக நெளிந்தான்.
முதல் பார்வையே தீட்சண்யமாய் இருந்தது. வைத்த கண் வாங்காமல் நான்கு கண்களும் பார்த்துக் கொண்டிருந்தன. ஆசை குரங்கு அங்கும் இங்கும் தாவித்தாவி ஓடி வந்தது. மனதுக்குள் மேளச்சத்தம் கெட்டிமேல சத்தமாக கொட்டி முழங்கியது.
எத்தனையோ பேரை கடந்திருப்பாள். இவனைப் பார்க்கும் முன்பு இவனைப் பற்றி கேள்விப்பட்டு பார்க்க வேண்டும் என்று துடித்தவள் ,தவித்தவள் வேலையின் பொருட்டு சந்திப்பதாக போக்கு காட்டினாலும் அலுவல் நிமித்தம் சந்திப்பு இருந்தபோதும் கூட உள்ளுக்குள் ஆசையாய் வாஞ்சையாய் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு முதலில் ஏற்பட்டது.
ஒவ்வொரு முறையும் வெளிய வந்த பொழுது அவளே அந்த கடிதத்தை அவனிடம் கொடுப்பாள். எப்பொழுதும் எந்த மணியாடர் செய்தாலும் தன் உதவியாளன் மணி தான் அஞ்சலகத்திற்கு செல்வான். இப்பொழுதெல்லாம் சமயவேலே அஞ்சலகம் செல்கிறான். புதிதாக தொப்பி ஒன்றை வாங்கி அணிந்திருக்கிறான்.
வேலை நிமித்தமாக சந்திப்பு கவனமாக பயன்படுத்த படுகிற சொற்கள் இருந்தபொழுதும் மறைமுகமாக புன்னகை செய்து கொள்வாள். உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கு என்று அவள் அந்த கடிதத்தை சமயவேலிடம் கொடுத்தாள். எப்பொழுதும் தருகிற கடிதம் போல் அல்ல சற்று சிறப்பு கடிதம்
என்று அவன் நினைத்துக் கொண்டான். உங்களிடம் பேச வேண்டும் மாரியம்மன் கோவிலுக்கு வருக குறிப்பு வரும்போது தொப்பி இல்லாமல் வருக என்று இருந்தது.
சொல்ல வார்த்தை இல்லை சந்தோசத்திற்கு அளவில்லை. இந்த காதல் என்ற வினோத புயல் நம் வாழ்க்கையில் வருமா என்று ஏங்கித் தவித்ததற்கு பத்து நாள் பட்டினி கிடந்தவனுக்கு பாயசத்தோடு விருந்து கிடைத்தது போல நீண்ட நாள் குழந்தை இல்லாதவனுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தை பிறந்தது போல அவனுக்கு இருந்தது.
மாரியம்மன் கோவிலில் வெளிப்புற பிரகாரத்தில் தலை நிறைய முடியோடும் முடி நிறைய பூவோடும் அமர்ந்திருந்தாள் அமுதவல்லி. இவ்வளவு கூந்தல் வைத்திருப்பவன் என்னைய காதலிக்கப் போகிறாள் ஏதோ சொல்ல முடியாத பிரச்சனை ஏதாவது இருக்கும் வழக்கம் போல உதவி செய்துவிட்டு வந்துவிட வேண்டியது தான் மனதை திறப்புப்படுத்திக்கொள்ளடா சமயவேல் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
தயங்கி அவள் அருகே நின்றதும் ஏதோ பேசணும் சொன்னீங்க என்ன சொல்லுங்க என்றான். நாலு மூட பருத்தி கொட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தாள். என்ன நக்கலா அது கடையில வந்து கேட்கலாம் அல்ல இங்க வர வச்சு கேட்கணுமா. இந்த ஊருக்கு வந்தவுடன் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன்.
அதுக்கெல்லாம் மணிமகுடம் சேர்ப்பது போல உங்களுக்கு வந்த கடிதத்தை ப்படிக்க நேர்ந்தது எவ்வளவு உதவிகள் செய்கிறீர்கள். எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கிறீர்கள். இப்படி ஒருவரை தான் நான் மனதுக்குள் தேடிக் கொண்டிருந்தேன். நான் கும்பிடும் கடவுளைத் தான் நம் இருவரையும் சந்திக்க வைத்திருக்கிறார்.
“யோ வழுக்க ஐ லவ் யூ யா” என்று சொன்னதும் கண்ணீர் வந்தது. ஊரெல்லாம் எதை கேலி செய்தார்களோ அவன் மனதைப் புண்படுத்தினார்களோ அதுவே அவளுக்கு பிடித்தது என்று நினைக்கின்ற போது அதைவிட மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும். இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நீளமாக முடி இருக்கிறது நீங்கள் கிண்டல் கிண்டல் பண்ணலையே என்று தான் பேசத் தொடங்கினான்.
வழுக்கை உள்ளபடி உங்களுக்கு அழகு அதுமட்டும் அல்ல நீங்கள் இதுவரை கூண்டுக்குள் இருந்த பறவை ஒன்று கூடு திறக்கப்பட்டு வெளிய பறப்பது போல இருந்தது சமய வேலுக்கு. இருண்ட வானத்தில் நிறைய விடிவெள்ளிகள் முளைத்தன பக்கத்தில் நிலவைப் போல இருந்தாள்அமுதவல்லி.
![]()