கதைகள்

“சமரசம் உலாவும் இடமே” …. சிறுகதை …. யாழ் ராகவன்.

மூன்று மாதத்திற்கு முன்பு ராசாத்தி அம்மா இறந்து போன அந்த இரவில் ஏற்பட்ட பெரும் பிரச்சனை பேசி முடிக்கப்பட்டது. ரத்த காயத்தோடு காவல்துறையில் புகார் அளித்து விட்டு தான் கௌதம் ஜிஹெச்க்கு சென்றான்.

அந்த ஊரில் மூன்று சமுதாய மக்கள் வாழ்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெருவில் தனித்தனியாக வசிக்கிறார்கள் தெருவைச்சொன்னால என்ன சமுதாயம் எனத்தெரியும் ஊரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம்

ஊரின் புறநகரில் ஒரு பேருந்து நிலையம். அங்குள்ளவர்கள் இங்கு வந்து பேருந்து ஏறுவதில்லை. இங்குள்ளவர்கள் அங்கு வந்து பேருந்து ஏறுவதில்லை. நிலவில் கால் வைக்க ஆயத்தமான தொழில் புரட்சி யுக காலத்திலும் கூட இன்னும் சாதி என்ற காட்டேரி மனித மனங்களில் இருந்து குறையவே இல்லை.

இரண்டு தேநீர் கடை ,தேனீர் கடையில் இரட்டை குவளைஇரண்டு முடிவெட்டுகிற இடம், பேருந்து நிறுத்தம் கோவில், எல்லாம் இரண்டு இரண்டாக தனித்தனியாக இருந்தது. 2023லிம்இந்த நிலை தொடர்ந்தது.காவல் நிலையம் ,வங்கி, அஞ்சலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் ஒன்றாக இருந்தது.ஊர் கட்டுப்பாடு என்று இவர்களாக வகுத்து வைத்த சட்டம்.மற்ற எல்லாம் பிரிந்து இருந்தது.

யார் இறந்து போனாலும் அந்தந்தச்சமுதாய மக்கள் உள்ள தெருவில் அவர்கள் பேனர் வைக்கப்படும். பொது இடத்தில் வைக்க கூடாது. பேனர்வைப்பதில் பல நேரங்கள் சிக்கல் ஏற்படும் .

ராசாத்தி அம்மா இறந்ததற்கு பேனரை அவர்கள் தெருவில் வைக்காமல் ஊரில் பொதுவில் வைத்தார்கள். ஊரில் 10 பேர் இதை பொறுக்க முடியாமல் அவர்கள் தெருவில் போய் குடிசையில் பேனரை அகற்றச் சொல்லி பார்க்கிற ஆளையெல்லாம் அடித்தார்கள். பெரிய கலவரம் தள்ளுமுள்ளு ஏற்பட ஆயத்தமானது.

யார் அடித்தார்களோ அவர்கள் பக்கத்தில் உள்ளவன் தான் கௌதம் அவன் படித்தவன் இந்த நிலை மாற வேண்டும் என்று துடிப்பவன் அவன் தான் இதெல்லாம் வேண்டாம் பேனர் வைத்தால் என்ன தப்பு இருந்துட்டு போகட்டுமே என்று இவர்கள் தரப்பை தடுப்பதற்காக போனவனை கோபத்தில் ‘நீயே இப்படி சொல்லுகிறாயா ‘என்று சொல்லி அடித்து விட்டார்கள் ரத்த காயத்தோடு தான் அன்று அவன் காவல் நிலையத்துக்கு ச்சென்றான்.

அடுத்த வேலை கஞ்சிக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வாழ்வில் எத்தனையோ புதுமைகள் வந்த போதும் இன்னும் மாறாமல் படுத்துகிற இந்த சாதி யைத்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை.மனிதனின் அகத்திலும் முகத்திலும் ரத்த காட்டேரி போல உள்ளே புகுந்து சமுதாயத்தை சீழ் பிடிக்க வைக்கிறது. இந்த கேடுகெட்ட சாதி வெறி. இன்னும் பல ஊர்களில்ஊர்களின் பேரோடு சேர்ந்து சாதி ஒட்டிக் கொண்டிருக்கிறது.

தேக்கு மரங்களை தேக்கி வைத்துள்ள தேனி மாவட்டத்தின் தென்கோடியில் அழகான ஒரு சின்னஞ்சிறிய கிராமம் மல்லிகாபுரம். பெயருக்கேற்றது

போல அழகான கிராமம் அங்கே காய்கறிகள் பழங்கள், பூக்கள் ,அத்தனையும் நன்றாக விளையும் பொன் விளையும் பூமி விவசாயத்தில் செழித்து இருக்கும்ஊர்.

ஆனாலும் 2000கே குழவிகள் இயற்கை சார்ந்த வேளாண்மை முறையை விரும்பாது படித்து முடித்து பட்டணங்களுக்கு பறந்து சென்று விட்ட காரணத்தினால் இப்பொழுது எல்லாம் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லை மெல்ல மெல்ல பல்வேறு காரணங்களால் விவசாயம் அழியும் சூழல் உருவாகிவிட்டது.

அழகான பச்சை வயல்கள் ஆளுயற கட்டடங்களாக மாறிக் கொண்டிருந்த சூழல். வயலோரத்து அள்ளிக் குளம் பெரிய கடல் போல அவ்வளவு பெரிய குளம் பாதி காணாமல் போய் பாதி கருவேலம் முட்கள் அடைந்து கிடக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஏன் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் பூக்கள் தேங்காய் வாழைப்பழம் திராட்சைப்பழம் எல்லாம் ஏற்றுமதியான அந்த ஊரில் தான் இன்று பெரும்பகுதி அவையெல்லாம் குறைந்து விட்டன.

கௌதம் பிஎஸ்சி வேதியல் படித்தவன். சரியான வேலை எதுவும் கிடைக்காமல் சுகியில்ல் உணவு வழங்கும் வேலையை சென்னையில் பார்த்தவன்.

அந்த வேலையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் சொந்த ஊருக்கு சென்று விடலாம். நிலத்தை பண்படுத்தி மீண்டும் பொன் விளையும் பூமியாக மாற்றலாம் என்ற சிந்தனையோடு ஊருக்கு வந்தவன்.

ஆனால் இங்கே நிலைமை இன்னும் தலைகீழாய் இருக்கிறது இதையெல்லாம் மாற்ற வேண்டும் என துடித்தவன். போன தலைமுறைக்கு இது புரியாது அவர்களை சரி செய்யவும் முடியாது ஆனால் அடுத்த தலைமுறையில் இதை மாற்றலாம் என்று யோசிக்கிறான்.

ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது ஆனால் 25-ல் முடிந்தால் வளைக்கலாம்.

அவன் அந்த ஊரில் விவசாய வேலையை தொடங்கிய பொழுது பல எதிர்ப்புகள். படிச்சிட்டு இப்படி நீயும்எங்கள மாதிரி நிலத்தை கிளறணுமா எல்லாரையும் மாதிரி நீயும் பட்டணத்தில் வேலை செய்ய வேண்டாமா என்று எத்தனை ஒரு ஏச்சு பேச்சுக்கு மத்தியில் மிகச் சிறப்பாக தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் முன்னேறி சென்றான் கௌதம்

ஒரு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி தன் ஊரில் உள்ள பல்வேறு விவசாயம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை எல்லாம் அவன் பதிவிட்டு கொண்டே வந்தான்.

அந்த ஊரில் பிறந்த பல்வேறு சமுதாயம் சார்ந்த அவன் நண்பர்களை எல்லாம் அதில் இணைத்தான்.

குழந்தை பருவத்தில் எவ்வித பாகுபாடில்லாமல் களத்தில் கிரிக்கெட்டு விளையாண்டது எல்லோரும் ஒன்றாக கூடி குழ் சமைத்து குடித்தது. ஊர் பொது காரியங்களில் ஒன்றாக இணைந்து வேலை பார்த்தது எல்லா ஞாபகங்களையும் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து வந்தான்.

அப்பொழுதும் பெருசுகள் குறிப்பிட்ட சாதிகாரோடு சேரக்கூடாது என்று தடுத்தது சாதியை பெருமை சொல்லி தன்னை வளர்த்தது எல்லாவற்றையும் அந்த குழுவில் பகிர்ந்து கொண்டே வந்தான்.

அந்த ஊரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் யார் இறந்தாலும் பிணம் பொது வழியில் செல்லாமல் ஊர் சுற்றி செல்ல வேண்டிய அவலம் 50 ஆண்டு காலமாக தொடர்ந்து வந்தது. இதனை மாற்ற வேண்டும் என கௌதம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

பழனியம்மாள் அத்தையின் உயிர் இப்போ பிறகு என உயிர் ஊசலாட்டம் ஏற்பட்டு கொண்டு இருந்த தருணம்.

இவர் உயிர் இன்னும் இரண்டு நாளில் பிரிந்து விடும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

பழனியம்மாள் அத்தையினுடைய நினைவுகள் கௌதக்கு வந்து கொண்டே இருந்தது.

அவர்தான் குளத்து ஓரத்தில் வயலில் எல்லாரும் வேலை செய்து கொண்டிருந்த பொழுது எந்த குழந்தை அழுதாலும் எடுத்து பால் கொடுத்துவிட்டு வயல்வேலைக்கு ச்செல்வார்.

தாய்ப்பால் வற்றிப்போன பல தாய்மார்களுக்கு தேவதையாக கடவுளாக பழனியம்மாள்அத்தை இருந்தால்

யார் குழந்தை எந்த சமுதாயத்துக்கு குழந்தை என்றெல்லாம் பழனியம்மாள் பார்ப்பதில்லை யாருக்கும் தெரியாமல் நிறைய குழந்தைகள் தூளியில் வரிசையாக மரத்தில் தொங்க விட்டு இருப்பார்கள்.

அவர்கள் வயலில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். அப்படியே மெதுவாக சைசாக வந்து அழுகிற குழந்தையை தொட்டில் ஆட்டிவிட்டு அந்த குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு கமுக்கமாக சென்று விடுவாள் பழனியம்மாள்.

அப்படி ஒரு தரம் ஊரில் பெரியதனக்காரர் பண்ணையார் இதனை ப்பார்த்து விட்டார் என்ன சொல்வாரோ ஏது செய்வாரோ என்று பயந்து போன வேளையில் இதில் என்ன இருக்கு பசித்த குழந்தைக்கு பால் கொடுப்பது என்ன தப்பா இல்லை எங்கிருந்து வந்தது சாதியும் வெங்காயமும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு மெல்ல அவர் அருகில் சென்றாள்.

“பழனியம்மா என்ன சொல்றதுன்னு தெரியல என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியல ஆனாலும் சாயந்திரமா யாருக்கும் தெரியாம எங்க வீட்டுக்கு பக்கமா வா” என்றார்.

இன்றைய வயல் வேலை முடிந்து விட்டு அவர் சொன்னதை ஞாபகம் வைத்து பண்ணைக்கார் வீட்டுக்கு பின்புறமாக சென்றாள் பழனியம்மாள்.

ரொம்ப நாள் கழிச்சு எனக்கு குழந்தை பிறந்திருக்கு கடவுள் கண்ணைத் திறந்து இருக்காரு ஆனாலும் என் பிள்ளைக்கு பால் கொடுப்பதற்கு வீட்டுக்காரிக்கு பால் இல்லை. “நீ இந்த மாதிரி செய்வதாக பல முறை பார்த்திருக்கிறேன் முதலில் எனக்கு ஆத்திரமா வரும் இருந்தாலும் இதற்கு வேறு வழியில்லை ஊருக்குள் நான் பெரிய ஆள் அதனால யாருக்கும் தெரியாமல் என் பிள்ளைக்கு பால் கொடுத்துட்டு போ தாயே என்றார் பண்ணையார். அதுக்கப்புறம் அந்த தட்டுல உள்ள காசு எடுத்துக்க ஊர்க்காரங்க யாருக்கும் தெரிய வேண்டாம்.”கண்ணீரின் நடுவிலே அந்த கம்பீரமான மனிதர் சொன்னதைஅவ்வுளும் கேட்டு பழனியம்மாளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

பஞ்சம் பிழைக்கும் பரதேசியின் பிள்ளையாக இருந்தா என்ன பண்ணையார் பிள்ளையாக இருந்தா என்ன எல்லா குழந்தைகளும் ஒன்று தான் அவளுக்கு

வீட்டுக்குள் போய் அந்த அமுதத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தாள். இது வெளியில் யாருக்கும் தெரியாது.

ஒருநாள் அரசல் புரசலாக ஊரார் பேசியதை கௌதமின் அப்பா கௌதம இடம் சொல்லி இருக்கிறார்.

ஊரில் பல்வேறு சமுதாயத்து மக்களில் பலர் பழனியம்மா ஆச்சீயின் பால் குடித்தவர்கள்.

அப்படிப்பட்ட ஆச்சீ இறந்த போதுதான் பெரிய ஏற்பாடு தேர் பாடைகட்டப்பட்டது வாட்ஸ் அப் மூலம் செய்தி எல்லோருக்கும் பரவியது பல்வேறு ஊர்களில் இருந்து எல்லோரும் மல்லிகாபுரம் வந்து குவிந்தனர்.

இதுதான் சரியான நேரம் என்று கௌதம் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

பேனர் வைக்கிறது பிணத்தை ஊரின் நடுவே கொண்டு செல்வது எனகொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஏற்கனவே பலமுறை வாட்ஸ் அப் மூலம் எல்லா இளைஞர்களும் ஒன்று திரட்டி ஊரின் செய்ய வேண்டிய பல விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி கம்மாயை தூர் வார்வது பொது கோயில் ஒன்று கட்டுவது பிள்ளைகளை படிக்க உதவி செய்வது என்று ஊர் சார்ந்த பல்வேறு காரியங்களை முன்னெடுத்து இருக்கிறான் கௌதம்.

அது பொறுக்காத சில ஆட்கள் தான் அவன் மீது கல் எரிந்து சொந்த சமுதாயத்தில் காரர்களே ரத்தத்தை அவனுக்கு பரிசாக தந்தார்கள்.

காவல்துறையில் அவர்கள் மேல் நடவடிக்கை ஒன்றும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி சமரசத்தை தேடுவது நோக்கம். யாரையும் பழி வாங்குவது அல்ல என எழுதி கொடுத்து விட்டு வெளியே வந்தான்.

அவன் பொறுமையாக காத்திருந்து பல நாள் அமைதியாக இருந்தது எல்லாம் இந்த பழனியம்மாவின் மூலம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை பொது பாதையாக மாற வேண்டும் என்ற சிந்தனை நிறைவேறத்தான்.

அவன் நினைத்தது போலையே எல்லோரும் பழனியம்மாவில் இழவிற்கு வந்தனர். ஏனென்றால் அவர்களில் பலர் பழனியம்மாள்வின் தாய்ப்பால் குடித்தவர்கள்.

இப்படி ஒரு கோரிக்கை கௌதம் வைத்த போது மறுக்க முடியவில்லை உள்ளுக்குள் என்னதான் சாதிய வன்மம் இருந்தபோதும் பழனியம்மாள் என்ற ஒரு பெண்மணியை நினைத்து பார்த்து அது நொடிப் பொழுதில் காணாமல் போனது .

வேண்டுமென்றே சில விஷமிகள் தடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவையெல்லாம் காற்றில் கலந்த சூடம் போல இல்லாமல் போனது.

தேர் பாடி கட்டி ஊரே ஒன்று கூடி ஆயிரம் பூக்களில் மிதந்து சாமி வீதி உலா வருவதைப் போல அந்த தாய் குலத்தை பொது சுடுகாட்டிற்கு பாதையில் எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்தனர். கௌதம் தனது கனவு நிறைவேறியது இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது அதற்கு பல மையில் தூரம் செல்ல வேண்டி இருக்கிறது என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *