கட்டுரைகள்

உக்ரேனுக்கு ஆயுத உதவியை நிறுத்திய போலந்து ! யுரேனிய ஆயுதம் வழங்க ஐநா அதிகாரி எதிர்ப்பு!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(போரின் திருப்புமுனையாக, போலந்து உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளதுடன், பல்வேறு நாடுகளும் உக்ரேனைக்கு ஆயுத உதவியை நிறுத்தக் கோரியுள்ளன)
உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்தது. ரஷ்ய துருப்புக்கள்
தற்போது கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் போரின் திருப்புமுனையாக, போலந்து உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையே தானிய ஏற்றுமதி பற்றிய சர்ச்சை மோசமடைந்த நிலையில் போலந்து அவ்வாறு முடிவெடுத்துள்ளது.
அதேவேளை ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு யுரேனியம் செறிந்த ஆயுதங்களை வழங்க வேண்டாம் என ஐநா சிறப்பு அதிகாரி ஆலிஸ் கில் எச்சரிதுள்ளார். சர்ச்சைக்குரிய யுரேனியம் செறிவூட்டப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டாம் என ஐ.நா., சிறப்பு அதிகாரி ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் வலியுறுத்தினார். யுரேனியம் செறிவூட்டப்பட்ட பீரங்கி குண்டுகளை ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ தான் காரணமா ?
அந்நிய நாடுகள் தன்அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, அதன்மூலம் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், என்பதால், அதனை தடுக்க வேண்டுமென முனைப்பில் ரஷ்யா படையெடுத்தது.
உண்மையில் ரஷ்யாவிற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கோபம் என்னவென்றால், 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த நாடுகளில், பலவும் நேட்டோ படைகளில் இணைவது தான் !
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் 1950களில் இருந்தே நேட்டோவிற்கும், ரஷ்யாவிற்கும் தொடர் பிணக்குகள் எழுந்துள்ளன. தனது பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கும் ரஷ்யா, அதில் கூடுதல் பலத்தை சேர்க்கும் வகையில், ஐரோப்பிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான உக்ரைனை, நேட்டோ அமைப்பில் சேர்ப்பதை கொஞ்சம்கூட விரும்பவில்லை.
எனவே, உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் எப்பொழுதும் சேர்க்கப்படாது என்ற உறுதிப்பாட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என மேற்குலக நாடுகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால். அது கைகூடாததன் எதிரொலியாக தான், தற்பொழுது உக்ரைன் மீதான போராகும்.
சோவியத் யூனியன் பிளவுபட்டது போன்ற மற்றொரு பாரிய பின்னடைவை ரஷ்யா விரும்பவில்லை. நேட்டோ அமைப்பை பலப்படுத்தி, அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தங்கள் அதிகார எல்லை வரம்பிற்குள் வந்து விடுவார்களோ என்ற அச்சம் ரஷ்யாவிற்கு எப்போதுமே இருந்து வருகிறது.
முக்கிய காரணம் நேட்டோ அமைப்பு, தனது பன்னாட்டு போர்த் தளவாடங்களை, ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்டோனியா, லித்துவேனியா, போலாந்து ஆகியவற்றில் வைத்திருக்கிறது. மேலும், ரஷ்யாவின் வான் தாக்குதலை தடுக்கும் வகையில் ரஷ்யாவின் எல்லைப் பகுதி நாடுகள் அனைத்திலும், நேட்டோ தனது படைகளை குவித்து வைத்துள்ளது. ஏற்கனவே இந்தப் படைகள் அனைத்துமே வெளியேற்றப்பட வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவது என்பது கொஞ்சம் கூட ரஷ்யா விரும்பாத ஒன்று தான். எனவேதான் ரஷ்யா இந்தப் போரில் தீவிரமாக களம் இறங்கியது.
போலந்து ஆயுதம் வழங்காது !
தற்போது போரின் திருப்புமுனையாக, போலந்து உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையே தானிய ஏற்றுமதி பற்றிய சர்ச்சை மோசமடைந்த நிலையில் போலந்து அவ்வாறு முடிவெடுத்துள்ளது. நவீன ஆயுதங்களுடன் தனது ஆயுத வளத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்புவதாகப் போலந்துப் பிரதமர் கூறியுள்ளார்.
இதனை எதிர்த்து, சில நாடுகள் உக்ரேனுடன் போலியான நட்புறவைக் கொண்டுள்ளதாகத் திரு. ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார். அது நியாயமற்ற கருத்து என்று கூறிய போலந்து, போர் தொடங்கிய நாளிலிருந்து உக்ரேனுடன் தான் துணைநின்றதை நினைவுகூர்ந்தது.
ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) முன்வைத்த கருத்தைப் பற்றிப் பேச உக்ரேனியத் தூதருக்குப் போலந்து அழைப்பு விடுத்தது.
ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்த பிறகு வர்த்தகப் பாதைகளில் சிக்கல் ஏற்பட்டது. உக்ரேனிலிருந்து வெளியேறிய பெரிய அளவிலான தானியச் சரக்குகள் மத்திய ஐரோப்பாவைச் சென்றடைந்தன.
அது உள்நாட்டு தானிய விலையைக் குறைப்பதாகச் சில நாடுகளின் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.அதன் விளைவாகப் போலந்து உள்ளிட்ட 5 நாடுகளில் தானிய இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகத் தடை விதித்தது. இதன் விளைவே போலந்து உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதம் வழங்காதே!
ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு யுரேனியம் ஆயுதங்களை வழங்காதே என அண்மையில் ஐநா சிறப்பு அதிகாரி ஆலிஸ் கில் எச்சரித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ‘யுரேனியம் செறிவூட்டப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டாம்’ என ஐ.நா., சிறப்பு அதிகாரி ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் வலியுறுத்தினார். யுரேனியம் செறிவூட்டப்பட்ட பீரங்கி குண்டுகளை ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற ஆயுதங்களை போரில் பயன்படுத்தினால் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட, அந்த ஆயுதங்கள் இன்னும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன, எனவே, குறைக்கப்பட்ட யுரேனியத்தால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
உக்ரைன் மேலும் முன்னேறவும், ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைனின் சில பகுதிகளை விடுவிக்கவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றன.
யுரேனியம் ஆயுதங்களை வழங்காதே!
இத்தகைய உதவிகள் மூலம் அந்த நாடுகள் நேரடியாக போரில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம்சாட்டிய போதிலும், சக்திவாய்ந்த பீரங்கிகளில் பயன்படுத்த சர்ச்சைக்குரிய யுரேனியம் செறிவூட்டப்பட்ட குண்டுகளை அனுப்புவதாக மார்ச் மாதம் பிரிட்டன் அறிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஷ்யா, அவர்களுக்கு எதிராக பயன்படுத்த சர்ச்சைக்குரிய யுரேனிய எரிபொருளால் செய்யப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
உக்ரைனுக்கு வெடிகுண்டுகளை அனுப்பும் பிரிட்டனின் முடிவு, இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளின்கன், யுரேனியத்தால் செய்யப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் உக்ரைனுக்கு தனது சக்திவாய்ந்த எம்-1 ஆப்ராம்ஸ் பீரங்கிகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அந்த ஏவுகணைகளில் பயன்படுத்த 120 மிமீ யுரேனியம் செறிவூட்டப்பட்ட குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதுபோன்ற ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப வேண்டாம் என ஐ.நா. சிறப்பு அதிகாரி ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் இப்போது வலியுறுத்துகிறார்.
அணு குண்டுகளை உருவாக்கும் யுரேனியம்:
அணு குண்டுகளை உருவாக்க யுரேனியம் செறிவூட்டப்பட்ட பிறகு இறுதி தயாரிப்பு யுரேனியம் எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பொருள் மிகக் குறைவான கதிர்வீச்சை வெளியிடுவதாக ஐ.நா. IAEA வின் கூற்றுப்படி, அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
யுரேனியம் உலோகத்தின் அதிக அடர்த்தி காரணமாக, இராணுவத் தளங்களில் கவசத் தகடுகளை உருவாக்க இதைப் பயன்படுத்தலாம். இருந்தாலும், கவச துளையிடும் குண்டுகளை உருவாக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், கதிரியக்கப் பொருட்களைக் கொண்டு ராணுவ உபகரணங்களை தயாரிப்பதற்கு ஒரு பிரிவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க பிரான்ஸில் எதிர்ப்பு !
உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட போராட்ட பேரணி இந்த வருட பெப்ரவரி இறுதியில் நடைபெற்றது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. போர் தொடங்கி பலகாலம் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் கவலையில் உள்ளன.
போரில் உக்ரைனுக்கு தனது ஆதரவை உறுதியாக பிரதிபலிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல தடவை உக்ரைன் நாட்டிற்கு வருகை தந்து அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். போரில் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடங்களை அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் வழங்கி உதவி வருகின்றன.
தீர்வு எட்டாத இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்குவதை எதிர்த்து பிரான்ஸ் நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. பாரீஸ் நகர வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பதாகைகளை ஏந்த போராட்டம் நடத்தினர். பிரான்ஸ், உக்ரைன் கொடிகளை ஏந்திக்கொண்டு “போரை நிறுத்துங்கள், மூன்றாம் உலகப் போர் வேண்டாம், அமைதி வேண்டும், நேட்டோவை விட்டு வெளியேறுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
மேலும், இந்த வாசகங்களை கொண்ட பதாகைகளை தூக்கி பேரணியாக சென்றனர். அத்துடன் பலரும் போர் நிறுத்தத்திற்கு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
ஜப்பான் நாட்டிலும் எதிர்ப்பு குரல்:
அதேபோல், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு ஜப்பான் நாட்டிலும் எதிர்ப்பு குரல் உருவாகியுள்ளது. அந்நாட்டில் பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் 76 சதவீதம் பேர் போரில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து வாக்களித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, போர் பாதித்த உக்ரைன் நாட்டிற்கு பொது உதவிகளை வழங்க 66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போரின் திருப்புமுனையாக, போலந்து உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளதுடன், பல்வேறு நாடுகளும் உக்ரேனைக்கு ஆயுத உதவியை நிறுத்தக் கோரியுள்ளன.
    – ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *