கதைகள்

நடுகைக்காரி! …. 58 …. ஏலையா க.முருகதாசன்.

  ஞானத்தின் தந்தை சுப்பையா அம்பனை வயல்வெளியிலுள்ள தங்களுடைய தோட்டத்திற்கு போய்விட்டு வந்தவர் விறாந்தையிலிருந்து தனது மனைவி மகனுடன் பள்ளிக்கூட சீருடையுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொம்பிளைப் பிள்ளையைப் பார்க்கிறார்.;,இந்தப் பிள்ளை ஞானத்துடன் படிக்கிற பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்,பொதுவாக அயலட்டை பொம்பிளைப் பிளளையளே ஆம்பிளைப் பிள்ளைகளுடன் கதைப்பதில்லை,அப்படிக் கதைச்சாலும் நெடுநேரம் கதைக்க விடுவதில்லை.

வேலியோரத்திலோ படலையடியிலோ நின்று கதைச்சாலும் தமது பொம்பிளைப் பிள்ளைகளின் பெயரைச் சொல்லி ஆட்டுக்கு குழை வெட்டிப் போடு என்று கூப்பிட்டு அப்படி என்னடி அவனோடை கதை அதுவும் ஆட்கள் போற வாற ஒழுங்கைப் படலையடியிலை நின்று கதைக்கிறாய் பார்க்கிற ஆட்கள் என்ன நினைப்பினம் நாளைக்கு நாலுவிதமாய்க் கதை வரும் என்று பேசுவதும் உண்டு.

அப்படித்தான் ஊர் உலகம் இருக்குது என்று நினைத்த ஞானத்தின்: தகப்பன் எதுவுமே சொல்லாது குளிப்பகதற்காக கிணத்தடியை நோக்கிப் போகிறார்.

ஞானத்தின் தாயும் தகப்பனும் அடுப்படிக்குள் ஒன்றாக இருந்து சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் இன்று புஸ்பகலாவைப் பார்த்ததும் அவள் கொண்டு வந்த புட்டை அவளுடனேயே இருந்து சாப்பிட வேண்டும் என்று நினைச்சுக் கொண்டாளோ தெரியாது சாப்பாட்டுக் கோப்பையைத் கையில் ஏந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

ஞானத்திற்கு புஸ்பகலா கொண்டு வந்த முட்டைப் பொரியல் பிரட்டிய புட்டின் வாசம் மூக்கைத் துளைத்தது.தனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு பதமான குத்தரிச் சோற்றுடன் விளைமீன் குழம்புடனும் அதள் மீன் பொரியல் வாழைப்பூ முருங்கை இலைக்கறி தேங்காய்ப்பூ போட்ட வறையுடன் புஸ்பகலா ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த ஞானம் தான் பத்தியக்கறி சாப்பிடுவதை நினைச்சு வேதனைப்பட்டான்.

புஸ்பகலா வராவிட்டால் அம்மாவிட்டைக் கெஞ்சிக் கேட்டாவது உறைப்புக் கறியைச் சாப்பிட்டிருக்கலாம் இவள் வந்ததாலை எல்லாமே குழம்பிப் போச்சு என்று நினைச்சவன் புஸ்பகலாவின் சொல்லுக்கு தான் ஏன் கட்டுப்படுகிறன் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

புஸ்பகலா கண்களை உயர்த்தி ஞானத்தைப் பார்ப்பதும் தனக்குள் சிரிப்பதுமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.பத்தியக்கறியும் ருசியானதுதானே இரசித்துச் சாப்பிடுங்கள் என்று சிரித்துக் கொண்டே அவள் சொல்ல சாப்பிட்டுப் பாருங்கள் என்று அவன் சொல்ல அதுதானே கொஞ்சமாய் மீன் குழம்பு தந்தேனே அதையும் பத்தியக் கறியோடை கலந்து சாப்பிடுங்கள் என்றவளுக்கு அதள் மீன் பொரியலைத் தரேலையே என்றவனுக்கு அதைக் கடைசிவரையும் தரமாட்டன் என்னைப் பொரியல் காய்ச்சலுக்கு துபபரவாகக் கூடாது என்று அம்மா சொல்கிறவா என்று சொன்னவள் ஞானத்தின் தாயைப்

பார்த்து என்ன மாமி நான் சொல்றது சரிதானே,நான் உங்களுக்கு மீன் பொரியலைத்தர அது காய்ச்சலைக் கூட்டிவிட இவனோடை படிக்கிறவள் ஒருத்தி வருத்தம் பார்க்கவெண்டு வந்து அவனுக்குக் காய்சசலைக் கூட்டிப் போட்டு போட்டாள் என்று மாமி வெளிப்படையாகச் சொல்லாட்டிலும் மனசுக்குள்ளையாவது நினைப்பாதானே என்று புஸ்பகலா சொல்ல,ஞானத்தின் தாய்க்கு கோபமே வரவில்லை அவள் பகிடியாக கதைத்த விதம் ஞானத்தின் தாய்க்கு சிரிப்பைக் கொண்டு வர் புரைக்கேறி அவள் இரும, துடித்துப் பதைத்து புஸ்பகலா செம்போடு தண்ணியைக் குடுத்தாள்.

புஸ்பகலாவும் ஞானத்தின: தாயும் சாப்பிட்டு முடித்து கோப்பையைக் கழுவுவதற்காக எழும்பிப் போய்க் கொண்டிருந்தனர்.

ஞானம் அருவருத்து அருவருருத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சோற்றைப் பிணைஞ்சு கொண்டிருந்தான்.

அடுப்படிப் படியோடு இருந்து வாளித் தண்ணீரில் ஞானத்தின் தாய் கோப்பையைக் கழுவியதன் பின் என்னட்டைத் தா நான் கழுவிறன் என்று புஸ்பகலாவின் கையிலிருந்த கோப்பையைத் தரும்படி கேட்க வேண்டாம் மாமி நானே கழுவுகிறன் என்று சொன்ன புஸ்பகலா அடுப்படிக்குள் போய் அடுப்புக்குள்ளிருந்து கொஞ்ச சாம்பலை கோப்பையில் போட்டுக் கொண்டு வந்து,ஏற்கனவே பாத்திரங்களை மினுக்கிப் போட்டு வைச்சிருந்த தென்னம் பொச்சை எடுத்து கோப்பையில் வைச்சிருந்த சாம்பலை கோப்பையில் பரவி உரசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஞானத்தின் தாய் என்ன பிள்ளை நான்கூட சும்மாதான் கோப்பையைக் கழுவினனான் நீ சாம்பல் போட்டு உரஞ்சி மினுக்கிறாய் என்று சொல்ல மாமி மச்சம் சாப்பிட்டனாங்கள் சாம்பல் போட்டு உரஞ்சிக் கழுவாமல் விட்டால் வெடுக்கடிக்கும் என்று சொல்லிக் கொண்டே கோப்பையைக் கழுவி ஞானத்தின் தாயிடம் குடுக்கிறாள்.

குளித்துவிட்டு வந்த ஞானத்தின் தகப்பன் சாப்பிடுவதற்காக அடுப்படிக்குள் போக ஞானத்தின் தாயும் அடுபபடிக்குள் போகிறாள்.

கணவனுக்குச சாப்பாட்டைப் போட்டுக் குடுத்துவிட்டு வெளியே வந்த ஞானத்தின் தாய் பூவரசம் தடியொன்றை முறிச்சு பல்லுத் தீட்டிக் கொண்டிருக்கும் புஸ்பகலாவைக் கண்டதும் இந்தப் பிள்ளை சரியான துப்பரவான பிள்ளை போல என்று நினைச்சவள் இப்படி ஒருத்தி ஞானத்திற்கு மனைவியாக வந்தாள்.. என்று கற்பனை செய்கிறாள்.

ஞானத்தின் தாய் எதுவும் கேட்காமலே மச்சம் சாப்பிட்டால் இப்படித்தான் நான் வேப்பந்தடியையோ இல்லாட்டி பூவரசம் தடியையோ முறிச்சு பல்லுத் தீட்டுவன் என்று சொல்லிக் கொண்டே வாளிக்குள் இருந்த தண்ணீரை கையால் அள்ளி எடுத்து வாயைக் கொப்பளிக்கிறாள்.

அடுப்படிக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஞானத்தின் தகப்பன் தனது மனைவியை அடிக்கடி ஏன் இந்தப் பிள்ளை மாமி மாமி என்று ஏன் சொல்கிறாள் என யோசிக்கிறார்.

வாயைக் கொப்பளித்த புஸ்பகலா மீண்டும் கதிரையில் வந்து உட்காருகிறாள்.அப்பொழுதும் ஞானம் சாப்பிடாமல் அருவருப்புடன் சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பதைக் கண்டதும் நீங்கள் சாப்பிட்டது

போதும் போய்க் கையைக் கழுவுங்கள் என்று சொல்லிக் கொண்டே கோப்பையை எடுத்துக் கொண்டு போய் ஞானத்தின் தாயிடம் குடுக்கிறாள்.

மாமி அங்கை ஒருக்காப் போறன் என்று கக்கூசைக் காட்டிக் கொண்டே புஸ்பகலா போய் உள்ளை போய் ஒரு நிமிடம்கூட ஆகவில்லை மாமி இஞ்சை ஒருக்கா வாங்கோ என ஞானத்தின் தாயைக் கூப்பிட ஏதேன் சிலந்தி மட்டத்தவளோ இல்லாட்டி பாம்போ தெரியாது என்று கணவனுக்குச் சொல்லியவாறு கக்கூசடிக்குப் போக,ஞானத்தின தாயை உள்ளே கூப்பிட்டுக் கதவைச் சாத்துகிறாள் புஸ்பகலா.

ஒரு சில விhடிகள்தான் சென்றிருக்கும் கதவை திறந்து கொண்டு வீட்டறைக்குள் சென்ற ஞானத்தின் தாய்; ,திரும்பி வரும் போது கையில் வெள்ளைத் துணித் துண்டையும் பேப்பர் துண்டையும் கொண்டு வந்து கக்கூஸ் கதவைத் திறந்து உள்ளே போய்க் குடுத்தவள் இது ஞானத்தின் அக்கா சிவலட்சுமியின் யங்கிதான் அளவாய் இருக்கும் துணியை சரியாய் வைச்சு போடு,போட்டிருந்த யங்கியை நான் தண்ணீர் கொண்டு வந்து தாறன் கழுவிப் போட்டு பேப்பரிலை வைச்சுச் சுற்று பொம்பிளையளுக்கு இது சொல்லிக் கொண்டா வரும் ஒண்டுக்கும் யோசியாதை என்றவள் வெளியே வந்து சிறிய வாளி ஒன்றில் தண்ணீர் கொண்டு வந்து குடுக்கிறாள்.

போட்டிருந்த யங்கியை அலம்பிப் பிழிந்த புஸ்பகலா பேப்பரில் வைச்சுச் சுற்றுகிறாள்.

இனிக் கொலிஜ்யுக்குப் போக வேணடாம் வீட்டுக்குப் போ,தனபாலசிங்கம் இப்ப வருவன் அவனோடை கொலிஜ் வரையும் போய் கெதியிலை வீட்டை போ என்று சொன்னவளுக்கு புஸ்பகலா சொன்ன செய்தி அதிர்ச்சியைக் குடுக்கிறது.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *