செய்திகள்

மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில் மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்குநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

இலங்கையில் நடைபெறும் தொடர்இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக வட அமெரிக்க தமிழ்மக்களை அணிதிரளுமாறுநாடுகடந்த அரசாங்கத்தின் அழைப்பு.

21/09/2023 அன்று நியுயோக் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா வில்பேசுவதற்கு வருகைதரும் சிங்களப்பேரினவாதி ரணில் ,வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக க் கூறியவர் எமது உடன் பிறப்புகளின் கொலையில் இவருக்கும் தொடர்பு இருப்பது தீவிர சந்தேகத்தை எழுப்புகிறது. இனப்படுகொலையாளிகளான முன்னாள் ஐனாதிபதி கோத்தபாயா, மகிந்த ராஐபக்ச, இராணுவத் தளபதிகள், புலனாய்வாளர்கள் உட்பட அனைவரையம் பாதுகாப்பதற்காக பதவியும் வழங்கி தொடர்ந்து காப்பாற்றி வருகின்றார்,ரணில் பெளத்த மயமாக்கல், சிங்களக்குடியேற்றத்தை தீவிரமாக செயற்படுத்தும்ரணிலை அமெரிக்காவில் விரட்டி அடிப்போம்!அம்பலப்படுத்துவோம்!!

அமெரிக்கா,கனடாவாழ் தமிழர்கள்தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் உங்கள் அனைவர்க்கும் அழைப்பு விடுக்கின்றதுமுக்கிய குறிப்பு: தியாக தீபம் திலீபன்அவர்களின் நினைவு ஊர்தியை அடித்துநொருக்குமாறும் , தமிழர்களை அடித்துகொல்லுமாறும் ,உத்தரவு பிறப்பித்த ரணில்அமெரிக்காவில் வந்து சொற்பொழிவாற்றுவதை நாம்வேடிக்கைபார்ப்பதா?தமிழர்களேநியுயோர்க் ஐ.நா முன்றில் அணிதிரள்வோம் ரணிலுக்கு தமிழர்களின் எதிர்பையும், உலகிற்குஉண்மையையும்,எடுத்துரைப்போம்.

இடம் : UN Park 47th & 1st Ave

New York.காலம் : 21/09/2023 வியாழக்கிழமை

நேரம் :12 .00 Pm – 1.00 Pmதொடர்புகட்கு :கமல்.: 917-740-8836கருணா :917-880-0320லோகேஸ்: 917-705-5650

“தமிழர் தலைவிதி தமிழர் கையில்”“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *