கட்டுரைகள்

ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!….7…. .சங்கர சுப்பிரமணியன்.

ஓலைச்சுவடிகளை தேடியெடுத்நை தமிழ்த்தொண்டாற்றியது உ. வே.ச. தமிழுக்கும் அமுதென்று பேர் தமிழின் பெருமை பேசியது பாரதிதாசன். யாமறிந்இத மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் பாரதி. இவ்வாறு தமிழின் மகிமையை போற்றியவர்கள் சிலரே.ஆனால் எத்தனையோ எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படம் எடுப்பவர்கள், இயக்குனர்கள் என்று தமிழை வைத்து பிழைப்பவர்கள் தமிழின்பால் அக்கறை கொண்டுள்ளார்களா?சில படங்களில் தமிழின் பெருமை பேசப்பட்டுள்ளன. சில பத்திரிகையாளர்கள் தமிழ் மக்களிடையே செல்ல உழைத்துள்ளார்கள். சில எழுத்தாளர்கள் தமிழ் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் எல்லோருமா அப்படியிருக்கிறார்கள்?தமிழை வைத்து பெயரும் புகழும் பணமும் சம்பாதிப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்க முனைந்துள்ளார்களா? அவர் தம் வாழ்நாளில் தமிழ் குறித்தும் தமிழர் குறித்தும் ஏதாவதொரு கவிதை கதை அல்லது ஒரு கட்டுரை எழுதியிருப்பார்களா? அப்படி செய்திருந்தால் பாராட்டுக்குரியவர்கள்தான்.ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நிகழ்வதில்லை. ஒரு சிறு சான்றின் மூலம் இதை விளக்கலாம். கடவுள் பக்தர்கள்

எத்தனையோ கோவில்களுக்கு சென்றிருப்பார்கள்ப. அங்கே பூசாரி மிகவும் பக்தியுடன் அபிசேகம் அலங்காரம் ஆராதணை எல்லாம் செய்வார். பக்தர்களும் வணங்கி கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.இது ஊரறிந்த விசயம். ஆனால் எந்த பூசாரியாவது அல்லது பக்தராவது கல்லினாலோ மற்ற உலோகம் போன்ற சில பொருள்களினாலோ சிலைகளை வடிவமைத்து வழிபட உதவியர்களப் பற்றி எண்ணியிருப்பார்களா? இதுபோல்தான் தமிழொடு தொடர்புடையவர்களும் தமிழை எண்ணிப் பார்ப்பதில்லை.உணவை உண்டு வாழும் மனிதர்களில்எத்தனைபேர் அந்த உணவுக்கான மூலப்பொருள் எப்படி வருகிறது? அதை விளைவிக்கும் விவசாயியின் உழைப்புஎத்தகையது? அந்த விவசாயியின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறதா என்று நம்மில் எத்தனைபேர் நினைத்துப் பார்க்கிறோம்.மண்ணோடு மண்ணாய் தன்னை மாய்த்து பயிர்வளர்க்கும் விவசாயியின் பொருள்வளம் பற்றி எவருக்குத்தெரியும். மண்ணை நம்பி பொன் பொருளை விற்று பலன் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் விவசாயம் செய்கிறான் விவசாயி. திடீரென இயற்கைச் சீற்றத்தால் வளர்த்தெடுத்த பயிர்கள் எல்லாம் பாழாகின்றன.அதிலிருந்து மீள வழியின்றி தவிக்கிறார்கள். ஒருவேளை இயற்கை சீற்றமின்றி பயிரை அறுவடை செய்தாலும் அதற்கு உரிய விலை கிட்டுவதில்லலை. அரசு விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்த பயிரினை கொள்வினை செய்து கொள்ளலாம். ஆனால் சரியான முறையில் கொள்வினை செய்யப்படுகிறதா என்பது சந்தேகமே.ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது நம்பவும் முடியவில்லை நம்பாதிருக்கவும் முடிவதில்லை. விளைந்த தாணியங்களை பாதுகாக்க கூடங்கள் இன்றி திறந்த வெளியில் வைத்திருக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.அறுவடைவரை பாதுகாத்த தாணியங்களைதிறந்த வெளியில் வைத்து பாதுகாக்கும்போது மழை போன்றவற்றால் பழுதடைகின்றன. நல்ல நிலையில் உள்ள தாணியங்களையே வைத்து பாதுகாக்க முடியாதபோது பழுதடைந்த தாணியங்ஙளின் நிலையும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் துயரும் என்னவாகுமென சொல்ல முடியாது.விவசாயிகளின் நிலை இவ்வாறிருக்கிறது.அடகுக் கடைகளிலும் வங்கிகளிலும் வைத்த நகைகளை மீட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அவற்றின்பேரில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் திண்டாடுகிறார்கள். கடைசியில் வட்டியும் முதலுமாக் நகைகள் கடனில் மூழ்கி விடுகின்றன.இல்லாவிட்டால் அந்த நகைகளை விற்றுவிடுகின்றனர். விளைவித்த பயிரிலிருந்து வருமானம் கிடைக்காத விவசாயிகள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நிலத்தில் விளைவித்து மற்றவர்களின் தேவையை பார்த்துக்கொண்டவர்களின் நிலை தலகீழாக மாறுகிறது.“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்தொழுதுண்டு பின்செல்பவர்”என்ற வள்ளுவன் வாய்மொழியை பொய்யாக்கி உயர்ந்த பெருமையுடன் தலைநிமிர்ந்து வாழ்ந்த இனத்தின் இன்றைய நிலை என்ன?வள்ளுவன் குறளையோ அதன் பொருளையோ கூட அறியாதவர்களின் பின் செல்லக்கூடிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்லே வந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடமே பணிசெய்யும் நிலை உருவானது. இதற்கெல்லாம் யார் காரணம்?-சங்கர சுப்பிரமணியன்.(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *