கட்டுரைகள்

ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!….5….சங்கர சுப்பிரமணியன்.

படைக்கும் கடவுள் பிரம்மாவின் நிலமை பற்ற அறிந்தோம். இதிலிருந்து என்ன தெரிகிறது? எதுவுமே நிலயற்றது என்பது தெரிகிறதல்லவா? அது கடவுளே ஆனாலும் நிலையாமை ஒன்றேதான். எத்தனையோ சிறப்பமிக்க நாகரிகங்கள் காலச்சுழற்சியில் அழிந்து விட்டன. எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன.ஆனால் அழிந்த மொழிகளுக்கெல்லாம் உயிரூட்ட பெருமளவில் பணத்தை செலவிட்டு உயிர்கொடுக்க முனைந்து வருகிறார்கள். இது எவ்வாறு சாத்தியம்? சாத்தியமாகுமோ இல்லையோ நம்பிக்கையுடன் முயன்று வருகிறார்கள்.அதற்கு காரணம் ஆட்சியும் அதிகாரமும் கையில் இருப்பதுதான். ஆனால் தமிழ்மொழி அழிந்து விடவில்லை. தமிழர் கையில் ஆட்சியும் அதிகாரமும் இல்லாததால் தமிழ் மொழிக்கும் தமிழர் மண்ணுக்கும் பங்கம் வரும்போது அதற்காக குரல் கொடுக்க ஆளில்லை.ஒருவேளை தமிழர் கையில் அதிகாரமும் ஆட்சியும் இருந்தாலும் அத்தமிழர் சொத்து சேர்க்கும் சுயநலப் பேர்வழியாகவும் மொழிப்பற்றா? அது என்னவிலை என்று கேட்பவராகவும் இருந்தால் அதனால் என்ன பலன்?ஆதலால் தமிழர் கையில் ஆட்சியும் அதிகாரம் வந்தால் மட்டும் போதாது. அவர் பணம் சேர்ப்பவராகவும் பதவிசுகம் காண்பவராகவும் இருந்தால் பயனில்லை. பதவியும் ஆட்சியும் பறிபோனாலும் தமிழ்மொழியையும் தமிழ்மண்ணையும் காக்கும் தன்மையுடையவராக இருக்க வேண்டும்.அப்படி ஒரு தமிழர் தமழருக்காக இச்சூழலில்வரமாட்டாரா? தமிழ்மக்களை குடிபோதையில் இருந்து மீட்கமாட்டாரா? தமிழ்மொழியைக் காட்கமாட்டாரா? மண்ணையும் மண்ணின் வளங்களையும் காக்கமாட்டாரா என்ற எண்ணம் பெரும்பாலான தமிழர் மத்தியில் உள்ளது.ஏற்கனவே தமிழர் நிலம், தமிழர் உரிமை தமிழ்மொழி என்று சொல்லித்தான் ஒவ்வொருவரும் ஆட்சியப் பிடிக்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் தமிழர் விரோதப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.இதனால் சூடுபட்ட பூனையாய் மாறிப்போன தமிழரில் ஒரு சாரார் கண்டிப்பாக தமிழர்பாலும் தமிழ்மொழிபாலும் தமிழ் மண்ணின்பாலும் பற்றுகொண்ட தமழர் ஒருவர் தோன்றுவார் என்ற நம்பிக்கையுடன்காத்திருக்கிறார்கள். ஒரு சாரார் மொழியாவது இனமாவது மண்ணாவது எது எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மனப்பாங்கு உடையவர்களாக இருக்கிறார்கள்.இன்னும் ஒருசாரார் புதிதாக இனம், மொழி மண் என்று வருபவர்கள் உண்மையாக இருப்பார்களா? அல்லது சொன்னதற்காக சில ஆண்டுகள் நல்லவர்கள்போல் நடந்துகொண்டு அதன்பின் ஊழல் பண்ணத் தொடங்கி விடுவார்களா? என்றும் எண்ணுகிறார்கள்.ஏனென்றால் தமிழரை இனம், மொழி, மற்றும் மண் என்று சொல்லி எளிதில் ஏமாற்றி விடலாம். இப்படித்தானே இத்தனை ஆண்டுகள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. எல்லோரையும் வேறுபாடின்றி ஏற்றுக் கொள்வதால் நம்முடனே பழகி நமது அடையாளத்தையே அழிக்கிறார்கள்.தமிழர்களின் கலை இலக்கியம் பண்பாடு மற்றும் கட்டடக்கலை போன்றவற்றை தமிழரின் அடையாளத்துடன் இணைப்பதை தவிர்த்து வேறொரு அடையாளத்தைக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் உயிர் என்று சொல்லி ஆட்சியைப் பிடிப்பவர்கள் தமிழர் இலக்கியங்களையும் வேறொரு பெயரிட்டு அழைத்து தமிழருக்கு இலக்கியங்கள் கூட கிடையாது என்று நிறுவ முற்படுகிறார்கள்.தமிழர் நிலை இன்று இருதலைக் கொள்ளி எறும்பை ஒத்தது. ஒருபக்கம் தமிழ் என்ற போர்வையில் நாட்டை ஆள்பவர்கள் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இவர்களிடமிருந்து விடுபட்டு மற்றொரு பக்கம் சென்றால் அவர்கள் தமிழ் மொழிக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச சிறப்பையும் அழித்து விடுவார்கள் என்ற ஐயப்பாடும் எழுகிறது.இதையெல்லாம் உணர்ந்து தமிழ்தேசிய இனம் பிராந்தியம் மற்றும் நாடு என்ற எல்லையையும் கடந்து நாம் எல்லோரும் ஒரே இனம் என்ற மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவேண்டும். அந்தப் பகுதி தமிழர்தானே பாதிப்புக்குள்ளாகிறார்கள்.அந்நாட்டு தமிழர்தானே இன்னலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணம்நமக்கு அழிவுக்கே வழி வகுக்கும்.ஏற்கனவே சாதி, மதம் மற்றும் அரசியல் என்று பிளவுபட்டுக்கிடக்கும் தமிழினம் பிராந்தியம் மற்றும் நாடு என்றும் பிரிந்து கிடந்தால் நம் இனத்தை அழிக்க நினைப்பவர்களின் பணி எளிதாகிவிடும்.-சங்கர சுப்பிரமணியன்.(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *