கட்டுரைகள்

பிஜியில் இந்திய வம்சாவழி மக்களுக்கு தேசிய அங்கீகாரம் : ஜனநாயக அமைதி வழிக்கு திரும்பிய இராணுவ அரசு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(பிஜியில், பூர்விக குடிமக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிய  பிணக்கு 2000 ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடர் சமாதான முன்னெடுப்புகளால் தற்போது பிஜித்தீவில் சுமூகமான சமாதான நல்வாழ்வு நிலவுகிறது. வன்முறைகளின் களமான இந்த அழிகிய தீவில் இன்றைய அமைதியும் , முன்னைய வரலாற்றுப் பிணக்குகளையும் வரலாற்று ரீதியாக இந்த ஆக்கம் அலசுகிறது.)ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடர் சமாதான முன்னெடுப்புகளால் தற்போது பிஜித்தீவில் சுமூகமான சமாதான நல்வாழ்வு நிலவுகிறது. வன்முறைகளின் களமான இந்த அழிகிய தீவில் இன்றைய அமைதியும் , முன்னைய வரலாற்றுப் பிணக்குகளையும் வரலாற்று ரீதியாக இந்த ஆக்கம் அலசுகிறது.)

2014 தேர்தலில் பிஜியில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு வாக்களிக்கும் உரிமை முழுமையாக அளிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சம் பேர் வசிக்கும் இத்தீவில் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜியில், பூர்விக குடிமக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையே பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வந்தது. 2000-ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடைபெற்ற போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தற்போது பிஜித்தீவில் சுமூகமான சமாதான நல்வாழ்வு நிலவுகிறது. வன்முறைகளின் களமான இந்த அழிகிய தீவில் இன்றைய அமைதியும் , முன்னைய வரலாற்றுப் பிணக்குகளையும் வரலாற்று ரீதியாக இந்த ஆக்கம் அலசுகிறது.
சுற்றுலாத் தீவான பிஜீ – Fiji :
அரசியல் மற்றும் இனக் கொந்தளிப்பு அதிகமாக வரலாற்றில் இருந்த போதிலும், கிட்டத்தட்ட 3500 ஆண்டுகள் பழமையான பிஜி தீவுகள் (FIJI) ஒரு சிறந்த சுற்றுலாத் மையமாகவே என்றும் இருந்து வருகிறது.
பிஜியில் சிதிவேனி ரபுகா எனும் பிஜி ஆளும் தலைவர் இத்தீவில்
இந்திய – பிஜியன் சமூகம் ஆற்றிய முக்கிய பங்கைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டி உள்ளார்.
இந்திய வம்சாவழியினர் செய்த மகத்தான பங்களிப்பையும், அவர்களில் பலர் விவசாயிகளாகவும், நிலத்துடனான அவர்களின் தொடர்பையும் நன்றியுடன்
ஒப்புக்கொண்டு அவர் அமைதிக்கு வலியுறுத்தி உள்ளார்.
முதன்மை சர்க்கரை உற்பத்தியாளர்:
இந்திய – பிஜிய விவசாய சமூகம், பிஜியின் முதன்மையான சர்க்கரை உற்பத்தியாளர்களாக, நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நிலையான தொழில்துறையின் முதுகெலும்பாக உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி உள்ளனர்.
உயர்மட்டத் தலைவரான ரபுகா இந்திய சந்ததியினரின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் விவசாயத்தில் பல தடைகளைத் தாண்டுவதற்கான குறிப்பிடத்தக்க திறனை அளித்தமைக்கு பாராட்டி உள்ளார். இது அவர்களின் உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாக விளங்குகிறது.
இந்த உணர்வுகளை எதிரொலியே இந்திய பிஜியன் சமூகம் இக் காலனித்துவ நாட்டை ஒரு மிகப்பெரிய பொருளாதார சொத்தாக மாற்றி அமைத்தது என்பதை வலியுறுத்தி கூறினார்.
இந்தியர்களின் குடியேற்றம்:
 
பிஜியில் தோட்டங்களுக்கான தொழிலாளர்களை வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவில் இருந்து 1789 ஆம் ஆண்டு முதல் 1916 வரை 60,000 இந்தியர்களை பிஜிக்கு அழைத்து வந்தனர்.
இன்று, இந்தத் தொழிலாளர்களின் சந்ததியினர் பிஜி மக்கள் தொகையில் சுமார் 44% பேர் உள்ளனர். பூர்வீக
பிஜி மக்கள் தொகையில் சுமார் 51% பேர் உள்ளனர். மற்றவர்கள் சீனர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பிற பசிபிக் தீவுக்காரர்கள்.
1800 களின் பிற்பகுதியில் இருந்து 1960 கள் வரை, பிஜி ஒரு இனமாக இருந்தது. குறிப்பாக அரசியல் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில். பிஜியர்கள், இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அனைவரும் தங்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து நியமனம் செய்தனர்.
1960 களின் சுதந்திர இயக்கங்கள்:
1960 களின் சுதந்திர இயக்கங்களால்
சுய-அரசாங்கத்திற்கான கோரிக்கைகள் எழுப்பட்டது. பிஜி மற்றும் லண்டனில் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் அக்டோபர் 10, 1974 இல் பிஜிக்கு முழு அரசியல் சுதந்திரம் கிடைத்தது.
 1974இல் புதிய குடியரசின் ஆரம்ப ஆண்டுகளில் இனவாத பிளவுற்ற அரசாங்கத்தைக் காண முடிந்தது. ஆளும் கூட்டணி கட்சி உள்ளூர் பிஜியர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
2000 ஆம் ஆண்டில்
மகேந்திர சௌத்ரி பிரதமராக பதவியேற்றார், பிஜி நாட்டின் முதல் இந்திய-பிஜி பிரதமராக ஆனார். துரதிருஷ்டவசமாக, அவரின் ஆட்சி குறுகிய காலமாக இருந்தது.
2000 ஆம் ஆண்டு மே 19 அன்று, வர்த்தகர் ஜார்ஜ் ஸ்பெயைட் தலைமையிலான இராணுவ பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்தை வன்முறையால் கைப்பற்றினர். சௌத்ரி மற்றும் அவரது அமைச்சரவை பல வாரங்களாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.
2000 ஆம் ஆண்டின் நெருக்கடி இராணுவ தளபதி ஃபிராங்க் பைனீமாராமா, தலையீட்டால் முடிவுற்றது. இதன் விளைவாக, சௌட்ரி ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 பல வாரங்கள் பதற்றம் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு அச்சுறுத்தல்களுக்குப் பின்னர், பிஜி நாடு கமாண்டோர் பிராங்க் பெயின்மாமாவின் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் 2006 டிசம்பர் 5, 2006 அன்று ஒரு இரத்தம் சிந்தப்படாத சதித்திட்டத்தில் அதிகாரம் கைப்பற்றப் பட்டது.
பிரித்தானியாவிடம் இருந்து பிஜி விடுதலை
1970 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து பிஜி விடுதலை பெற்றது. பிஜி அரசாங்கத்தில் பிஜி இந்தியர்கள் பெரும்பான்மையாக இருந்ததனால், மக்களாட்சி அமைப்பு 1987 ஆம் ஆண்டில் இரு தடவைகள் இராணுவப் புரட்சியால் தடைப்பட்டது.
1987 இல் இடம்பெற்ற இரண்டாவது இராணுவப் புரட்சியை அடுத்து பிஜிய அரசர், மற்றும் ஆளுனர் ஆகியோர் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர். பதிலாக நிறைவேற்றதிகாரமற்ற சனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பெயரும் டொமினியன் பிஜி இலிருந்து பிஜி குடியரசு (பின்னர் 1997 இல் பிஜித் தீவுகளின் குடியரசு) என மாற்றப்பட்டது.
இந்தப் மாற்றத்தை அடுத்து ஏற்பட்ட அமைதியின்மையால் பிஜி இந்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறினர். மக்கள்தொகை குறைந்ததனால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, ஆனாலும் மெலனீசியர்களான பூர்வ குடிகள் பெரும்பான்மையினமாக மாறினர்.
1990 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு பிஜிய இனத்தவரை நாட்டின் அரசியலுக்குள் கொண்டு வர உதவியது. இந்த அரசியலமைப்பு தன்னிச்சையாகக் கொண்டு வரப்பட்டதென்றும், பழைய 1970 அரசியலமைப்பை அமுல் படுத்தக் கோரியும் பிஜியில் இனவேறுபாட்டுக்கு எதிரான “கார்ப்” (Carb)என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
1987 இராணுவப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திய அன்றைய இராணுவப் படை அதிகாரி சித்திவேனி ரபூக்கா 1992 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டதில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமர் ஆனார்.
மூன்றாண்டுகளின் பின்னர், ரபூக்கா அரசியலமைப்பை மீளாய்வு செய்யக் குழுவை நியமித்தார்.
மகேந்திரா சவுத்திரி பிரதமர் :
அக்குழுவின் பரிந்துரைகளின் படி 1997 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வரசியலமைப்பை பிஜியர்களும், பிஜி இந்தியர்களும் ஆதரித்தனர். பிஜி பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மீளச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பிஜி இந்தியரான மகேந்திரா சவுத்திரி பிரதமரானார்.
2000 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் ஸ்பைட் தலைமையில் மற்றுமொரு ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மகேந்திரா சவுத்திரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்பதனை விட தூக்கி எறியப்பட்டார் என்பதே உண்மை.
அதன்பின் சர் காமிசே மாரா சனாதிபதிப் பதவியில் இருந்து கட்டாயமாக விலக, அதற்குப் பதிலாக இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாகப் பதவியேற்றார்.
அதே ஆண்டில் சுவா நகரில் அமைந்துள்ள எலிசபெத் மகாராணி இராணுவத் தளத்தின் இராணுவத்தினர் இரு தடவைகள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தை மீள அமுல் படுத்துமாறு உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. மக்களாட்சியை ஏற்படுத்த அங்கு 2001 செப்டம்பரில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் இடைக்காலப் பிரதமராக இருந்த லைசேனியா கராசேயின் கட்சி வெற்றி பெற்றது.
2006 நவம்பர் இறுதியிலும், 2006 டிசம்பர் ஆரம்பத்திலும் இடம்பெற்ற இராணுவப் புரட்சிக்கு இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா தலைமையேற்றார். பிரதமர் கராசே பின்னர் பதவி விலகினார்.
பைனிமராமா அவர் பிரதமர் :
பிஜி நாடு பொதுவாக நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சிக் குடியரசு முறையில் ஆளப்படுகிறது. பல-கட்சி முறையில் பிரதமர் அரசுத் தலைவராகவும், சனாதிபதி நாட்டின் நிறைவேற்றதிகாரமற்ற தலைவராகவும் உள்ளனர்.
ஆயினும் நிறைவேற்றதிகாரம் அரசாங்கத்திடம் அமைந்துள்ளது.
அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் இரண்டும் சட்டவாக்கத்தை நடைமுறைப்படுத்துகின்றன. நீதித்துறை இங்கு அரசாங்கத்தினாலோ அல்லது சட்டவாக்க அவையாலோ கட்டுப்படுத்தப்படவில்லை.
பிஜி விடுதலை பெற்றதில் இருந்து பிஜியில் நான்கு முறை இராணுவத் தலையீட்டுடனான ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றுள்ளன. 1987 ஆம் ஆண்டில் இரு தடவையும், 2000, 2006 ஆகிய ஆண்டுகளிலும் இராணுவப் புரட்ட்சிகள் இடம்பெற்றன. 1987 ஆம் ஆண்டில் இருந்து இராணுவம் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது அரசாங்கத்தில் செல்வாக்கையோ செலுத்தி வருகிறது என்பது வெளிப்படை.
பிஜி இந்தியர்களுக்கு உதவிய நியுசிலாந்து:
பிஜியில் வாழும் இந்திய வம்சாவளியிரைப் பாதுகாக்க நியுசிலாந்து உதவ வேண்டும் என்று 2000ஆண்டு நெருக்கடியில் முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரி வேண்டுகோள் விடுத்தார்.
அக்காலத்தில் பிஜியில் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர செளத்ரி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்களை புரட்சிக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு பாராளுமன்ற வளாகத்தில் 2000 மே 19 ம் தேதி சிறைவைத்து இருந்தார்.
இந்திய வம்சாவளியினர் பிஜி தீவில் ஆட்சி செய்யக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து புரட்சிக்கும்பல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது.
அதற்குப் பின் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. ராணுவத்துக்கும், புரட்சிக்கும்பலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் ஏறத்தாழ 56நாட்களுக்குப்பின் கடத்தப்பட்ட பிரதமர் மகேந்திர செளத்ரி உள்பட பிணைக்கைதிகள் அனைவரும் விடுக்கப்பட்டனர்.
பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட சில தினங்களில் புரட்சிக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை விடுவிக்கக் கோரியும், இந்திய வம்சாவளியினர்களுக்கு உயர்பதவிகள் கொடுக்கக் கூடாது என்றும் கூறி பிஜியில் பூர்வகுடி மக்கள் பலஇடங்களில் போராட்டம் நடத்தினர். குறிப்பாக இந்திய மக்களின் வீடுகளில் கொள்ளையடிப்பது, பயிர்களை அழிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து தாக்கப்பட்டு, தலைநகர் சுவாவிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிகாடாகோ பகுதியில் இந்தியர்களுக்குச் சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
இதனால் அங்கு வாழும் இந்திய மக்கள் அனைவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளுக்கு புகலிடம் தேடி போக ஆரம்பித்தனர்.
2000 ஆண்டில் அன்றைய நியுசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க், பிஜி தீவில் இந்திய மக்கள் துன்புறுத்தப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய விஷயமாகும் என ஐநா சபையில் தெரிவித்தார்.
அத்துடன் நியுசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பில் கோப் பிஜியில் வசிக்கும் இந்திய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து விசாரித்து, நியுசிலாந்து அரசு பிஜியில் வாழும் இந்திய மக்களுக்கு உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
 பிஜியில் மீண்டும் ஜனநாயக தேர்தல்:
பல ராணுவப் புரட்சி ஏற்பட்ட பிஜி தீவு நாட்டில் மீள தேர்தல் ஒரு பொது தேர்தல் 2014 செப்டம்பர் 17 அன்று நடந்தது. 1987 – 2006 இடைப்பட்ட ஆண்டுகளில் அமைந்த 4 முறை அரசுகளை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் நடந்த தேர்தலில் 2006-ம் ஆண்டு ராணுவ புரட்சியை நிகழ்த்தி தளபதி வோரேக் பிராங்க் பைனிமராமா ஆட்சியை கைப்பற்றினார்.
மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு அந்நாடு திரும்பி 2013-ம் ஆண்டு புதிய அரசியல் சாசன சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 50 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தற்போது நடைபெற்றது.
இந்தியருக்க வாக்களிக்கும் உரிமை :
2014 தேர்தலில் பிஜியில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு வாக்களிக்கும் உரிமை முழுமையாக அளிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சம் பேர் வசிக்கும் இத்தீவு நாட்டில் 44 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக நிலவிய பிணக்குகள் சர்வதேச தலையீட்டுடன் தீர்க்கப்பட்டு, தற்போது பிஜித்தீவில் சுமூகமான சமாதான நல்வாழ்வு நிலவுகிறது. வன்முறைகளின் களமான இந்த அழிகிய தீவில் இன்றைய அமைதியும் ,
பூர்விக குடிமக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையே எழுத்துள்ளது நாம் தற்போது காணலாம்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *