கட்டுரைகள்

உயர்சாதி குழந்தைகளுக்காக முலைப்பாலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள்!…. 4….. சங்கர சுப்பிரமணியன்.

பெண்கள் கூடியிருந்தனர். அவர்களில் மூத்த பெண்ணுக்கு 80 வயது. மற்றவர்கள் நாற்பதில் இருந்து அறுபது வயதுக்குள் இருந்தனர். சிலர் நின்று கொண்டிருக்க மற்றவர்கள் கீழே தரையில் அல்லது பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.நான் மொழிபெயர்க்க முடிவெடுக்குமுன் தரையில் அமர்ந்தபடியே அவர்கள் ஊர்க்கதை பேசுவதை கேட்டுக் கொண்டுருந்தேன். “நான் உங்கள் எல்லோருடமும் ஒன்று கேட்க விரும்புகிறேன்“ என்று தொடங்கினேன்.“கேள் குழந்த, என்ன அது” பெண்களில் ஒருத்தி பதிலளித்தாள்.“நம் இனத்துப் பெண்களோ அல்லது மற்ற தாழ்ந்தசாதிப் பெண்களோ பண்ணையார் வீட்டு குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்தார்கள் என்பதுபற்றி தெரியுமா?”அவர்கள் உள்ளுக்குள் சிரித்தார்கள். அவர்களில் ஒருத்தி என் அருகில் வந்து தலையத் தடவியபடியே நான் எதற்காக பழையதைப்பற்றி கேட்கிறேன் என்று கேட்டாள். ஆகையால் அக்கம்மாவையும் நான் கேள்விப்பட்டதையும் அவர்களுக்கு சொன்னேன்.கிட்டத்தட்ட என்பது வயது மதிக்கத்தக்க வெள்ளி மயிர்கள் மிளிர நரசம்மா கைத்தடியை தரையில் ஊன்றி அழுத்தியபடி கரகரத்த குரலில் பேசினாள்.“அவர்கள் எங்களை அவர்களின் தேவைக்கு பயன்படும் பொருட்களாக மட்டுமே பார்த்தார்கள்” என்று சொன்னாள்.“தீண்டாமை என்பது அவர்கள் குழந்தைகளுக்கு முலைப்பாலூட்ட எங்களை விரும்பும்பொழுதும் அவர்கள் எங்களை விரும்பி கற்பழிக்கும் பொழுதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தென்படவில்லை”.கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக பண்ணையார்களின் சிவப்பு மிளகாய் வயல்களிலும் மாட்டுத் தொழுவத்திலும் மாடுகளையும் தொழுவத்தையும் சுத்தப்படுத்தும் வேலையையும் நரசம்மா செய்து வந்திருக்கிறாள்.அவளது இருபது வயதின் நடுப்பகுதியில் பண்ணையாரின் குழந்தைக்கு முலைப்பால் கொடுப்பவளாக மாறினாள்.அவர்கள் அவர்களது குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுக்கும் முன் எங்கள் குழந்தைகளுக்கு பாலாட்ட முடியாதபடி தடுத்தார்கள். அவர்கள் ஒருபோதும் உடல்ரீதியாக எங்களை தடுக்கவில்லை என்றவள் அவர்கள் எங்களுக்குள் ஏற்படுத்திய பயம் ஒன்றே கீழ்படிதலுக்குபோதுமென்று தாடையை இறுக்கினாள்.சற்றுமுன் தீண்டத்தகாத குழந்தைக்கு முலைப்பாலூட்டிய முலைகளிலிருந்து அவர்களின் குழந்தைகள் பால்குடிப்பதை அவர்கள் விரும்பவில்லை.அவளது கைத்தடியை மேலும் தரையில் அழுத்தியபடியே, பெட்டை*****மகன்கள் என்றாள்.“என் குழந்தை பசியுடன் இருப்பது துன்பம் அளித்தது. ஆனாலும் எப்போதும் நான்அப்படியே நடந்தேன் ஏனென்றால் அப்படித்தான் நடக்கவேண்டி இருந்தது” என்றாள் நரசம்மா. அதற்குண்டான சரியீடு அவ்வப்போது கிடைக்கும். அது ஒரு மூட்டை தாணியமாகவோ அல்லது பத்து அல்லது இருபது (ஒரு சென்ட்டுக்கும் குறைவாக) பைசாவாகவோ இருக்கும்.அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள். “அவர்களின் இடத்துக்கு சென்றவுடன் ஒரு துண்டு சோப்பைக் கொடுத்து அருகிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் குளித்துவிட்டு வரச்சொல்வார்கள். எந்த மனிதப் பிறவி அம்மாதிரி நடந்துகொள்வதை விரும்பும்?என் குழந்தையை பசியோடு வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் குழந்தைக்கு பாலூட்ட செல்வேன். மேலும் அவர்களுக்காக எங்கள் உடல்களை அடிமையாக்கும் பொழுது எங்களை அப்படி நடத்துவது அவர்களது பிறப்புரிமைக்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை என்றே பார்த்தார்கள்.அவர்கள் அந்த வலியை உணரவேண்டும்:அப்போது நரசம்மா போன்ற பெண்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் இன்று அவர்கள் எப்படி நடத்தப்பட்டா்கள் என்பதை எண்ணும்போது அவமானமடைகிறார்கள்.தெலுங்கானாவின் தலைநகரானஹைதராபாத்திலுள்ள சமூக அறிவியல் டாடா இன்ஸ்டிடியூட்டில் பாலின ஆய்வு மைய உதவிப்பேராசிரியரான சௌஜன்யா டமலபகுலா என்பவர் இந்திய சமூகத்தில் தலித் பெண்கள் என்ற ஆய்வினை செய்கிறார்.இந்தியாவின் ஆணாதிக்க சமூகமும் சாதிய அமைப்பு அதிக்காரவர்க்க பெண்களை தூய மற்றும் கற்புடைய நீண்ட பண்புடையவர்களாகவும் அதேசமயம் தலித் பெண்களின் மீது சுரண்டலை அனுமதிப்பது முறையான உரிமையாகவும் வகைப் படுத்தியிருப்பதாக சொல்லியிருக்கிறார்.(தொடரும்)-சங்கர சுப்பிரமணியன்.நன்றி: ஜான்வி உப்புலெடி / அல் ஜஷீரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *