கட்டுரைகள்

மீண்டும் பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவ தளங்கள்!… தென் சீனக் கடலில் சீனா ஆக்கிரமிப்பின் விளைவு!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் கடந்த வாரம் பிப்ரவரி 2 அன்று, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னத்தை விரிவுபடுத்தும் திட்டங்களை முழுமையாக அறிவித்துள்ளன. மேலும் நான்கு தளங்களை, தாய்வான் மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் பெருகிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் நிர்மாணிப்பதாக அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் இணைந்து அறிவித்துள்ளன.
பிலிப்பைன்ஸில் அமெரிக்க ராணுவ தளங்கள்:
பிலிப்பைன்ஸ் ராணுவ முகாம்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்த பேச்சு வார்த்தைக்காக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் மூலம் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இக்கூட்டு அறிவிப்பில், ஒருங்கிணைந்த பயிற்சி, பயிற்சிகள் மற்றும் இயங்குதன்மை ஆகியவற்றை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (EDCA) என்று அழைக்கப்படுவதை முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக இரு அரசும் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தற்போதைய ஐந்து EDCA தளங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு $82 மில்லியனை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மூலோபாய பகுதிகளில்்நான்கு புதிய தளங்களுக்கு தனது இராணுவ இருப்பை தற்போது அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் போர் அச்சுறுத்தல் :
இதேவேளை வட கொரியாவின் வளர்ந்து வரும் அணுசக்திக்கு பதிலளிக்கும் விதமாக தென் கொரியப் படைகளுடன் கூட்டுப் பயிற்சியை மேம்படுத்துவதற்காக கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் போன்ற மேம்பட்ட ஆயுதங்களை அமெரிக்கா அதிகப்படுத்துவதாக கூறியுள்ளது.
ஆசியாவிலேயே வாஷிங்டனின் மிகப் பழமையான உடன்படிக்கைக் கூட்டாளியும், அமெரிக்கா நடாத்தும் போர்களில் முக்கிய முன்னணியுமான பிலிப்பைன்ஸில், திரு. ஆஸ்டின் தெற்கு ஜாம்போங்கா நகரத்திற்குச் சென்று பிலிப்பைன்ஸ் ஜெனரல்கள் மற்றும் உள்ளூர் இராணுவ முகாம், பிராந்திய பிலிப்பைன்ஸ் இராணுவத்தில் உள்ள அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புப் படைகளின் ஒரு குழுவைச் சந்தித்தார்.
100 க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் பல தசாப்தங்களாக மிந்தானோ முஸ்லீம் கிளர்ச்சியை எதிர்த்துப் போராடும் பிலிப்பைன்ஸ் துருப்புக்களுக்கு பல ஆண்டுகளாக உளவுத்துறை மற்றும் போர் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
தென் சீனக் கடலில் சீனா ஆக்கிரமிப்பு:
சமீபகாலமாக, அமெரிக்கப் படைகள், தென் சீனக் கடலிலும்,
தாய்வான் கடல் வழியாக அதன் வடக்கு லுசோன் பகுதியிலும் பிலிப்பைன்ஸ் துருப்புக்களுடன் போர் தயார்நிலை மற்றும் பேரழிவு பதிலளிப்பதில் கவனம் செலுத்தும் கூட்டுப் பயிற்சியை தீவிரப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளன.
அமெரிக்காவிற்கு வெளியே நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள கடல் நெருக்கடி கால நடவடிக்கை படைப் பிரிவின் தளபதியான
லெப்டினன்ட் ஜெனரல் ஜேம்ஸ் பைர்மேன் Third Marine Expeditionary Force (III MEF) கூற்றுப்படி சீனாவுடனான எந்தவொரு மோதலிலும் தமது படையே முன் வரிசையில் இருப்பார்கள் என்றும், தற்போதய கவனம், மத்திய கிழக்கில் பயங்கரவாதத்தின் மீதான போரில் இனி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
கடல் நெருக்கடி கால நடவடிக்கை படைப் பிரிவு:
போர் மூண்டால் AirSea war ‘வான்கடற்போர்’ என்று அழைக்கப்படும் சீன இராணுவத் தளங்கள் மற்றும் சீனாவின் மூலோபாயத் தளங்கள் மீது பாரிய விமான மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அத்தகைய தாக்குதலுக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆதரவளிக்கும். பென்டகன் தனது சொந்த ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களைக் கொண்டு, தனது பிராந்தியத்தை பாதுகாப்பதற்கும், அண்டைய கடல்களை பாதுகாப்பதற்கும் அமெரிக்கா அதிக அக்கறை கொண்டுள்ளது.
ஜப்பானுடன் இணைந்த அமெரிக்க போர் தயாரிப்புகள்:
தற்போது ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் தயாரிப்புகள் வேகமாக நடந்து வருகின்றன. அமெரிக்க தளபதி பைர்மன் பெருமையாகக் கூறியது போல், இரண்டு இராணுவங்களும் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளன.
சமீபத்திய பயிற்சிகளின் பின்னர் அமெரிக்க கடற்படையினர் ஒரு ஜப்பானிய கட்டளை புள்ளியுடன் தொடர்புகொள்வதற்கு பதிலாக, முதன்முறையாக இருதரப்பு தந்திரோபாய ஒருங்கிணைப்பு மையங்களை தரையில் நிறுவியுள்ளனர்.
அதிபர் மார்கோஸின் முன்னோடியான ரோட்ரிகோ டுடெர்டேயின் (Rodrigo Duterte) கீழ் நெருக்கடியான காலகட்டத்திற்குப் பிறகு, நவம்பரில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்குப் பிறகு பிலிப்பைன்ஸுக்குச் சென்ற சமீபத்திய மூத்த அதிகாரி அமெரிக்கப் பாதுகாப்புத் தலைவர் ஆவார்.
Rodrigo Duterte சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணக்கமான உறவுகளை வளர்த்து வந்தார், மேலும் ஒரு கட்டத்தில் வாஷிங்டனுடனான உறவுகளைத் துண்டிக்கவும், வருகை தரும் அமெரிக்கப் படைகளை வெளியேற்றவும் மற்றும் ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் அச்சுறுத்தினார் என்பதும் அறிந்ததே.
தாய்வான் மீது சீனா இராணுவ நடவடிக்கை ?
தாய்வான் மீது சீனா இராணுவ நடவடிக்கை எடுத்தால்,
அனைத்து ஆசியான் பிராந்தியமும்,
பெரும்பாலும் ஜப்பான் மற்றும் தென் கொரிய பாரிய பாதிப்பக்க்களை முகங்கொள்ள வேண்டிடும்.
பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசியான் உறுப்பினர்களான புருனே, மலேசியா மற்றும் வியட்நாம், தாய்வானுடன் சேர்ந்து, தென் சீனக் கடலில் சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டமான பிராந்திய மோதல்களை எதிர் கொள்ள வேண்டிடும்.
இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான ஒரு முக்கியமான எதிர்ப்பாளராகக் கருதப்படுகிறது மற்றும் பிலிப்பைன்ஸ் படைகள், கப்பல்கள் அல்லது விமானங்கள் தென்சீனக்கடல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானால், பிலிப்பைன்ஸின் பாதுகாப்பிற்கு வருவதாக உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே இரண்டு பெரிய அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை தளங்களை பிலிப்பைன்ஸ் அமைத்துள்ளது.
முன்பு பிலிப்பைன்ஸ் செனட்
முடிவின் படி 1990களின் முற்பகுதியில் அமெரிக்க தளங்கள் மூடப்பட்டன. பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பு வெளிநாட்டு துருப்புக்களை நிரந்தரமாக நிலைநிறுத்துவதையும் உள்ளூர் போரில் அவர்கள் ஈடுபடுவதையும் தடை செய்தது.
ஆனால் அமெரிக்கப் படைகள் 1999 புதிய ஒப்பந்தத்தின் கீழ் பிலிப்பைன்ஸ் துருப்புக்களுடன் பெரிய அளவிலான போர்ப் பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
சீனாவுடனான போருக்கான மேம்பட்ட செயல்பாட்டுத் திட்டத்தை பைர்மன் முன்னிலைப்படுத்துவதானது, அமெரிக்காவும் ஜப்பானும் இராணுவச் செலவினங்களை பெரிதும் அதிகரிப்பதுடன் பொருந்துகிறது.
கடந்த மாதம் ஜனாதிபதி பைடனால் அங்கீகரிக்கப்பட்ட புதிய அமெரிக்க பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் புதிய இராணுவ உள்கட்டமைப்பு மற்றும் பசிபிக்கில் மூலோபாய முன்முயற்சிகளுக்காக பில்லியன் கணக்கான டாலர்கள் அடங்கும் என்று இராணுவ செய்தித்தாள், (Stars and Stripes) ஜனவரி 2 இதழில் தெரிவித்து உள்ளது.
இந்தோ-பசிபிக் கட்டளையகத்தில் ஏற்கனவே சுமார் 375,000 இராணுவம் மற்றும் சிவிலியன் பணியாளர்கள் இப்பகுதியில் பணிபுரிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் :
ஹவாயில் உள்ள கட்டளை தலைமையகம், இராணுவ குடியிருப்புக்காக 87.9 மில்லியன் டாலரை புதிய அமெரிக்க பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் மூலம் பெறுகிறது. அத்துடன்
ஏவுகணை சேமிப்பு வசதிகளை மேம்படுத்த 103 மில்லியன் டாலர், நிறுவனத்தின் செயல்பாட்டு வசதிக்காக 111 மில்லியன் டாலர், மற்றும் இராணுவ தேசிய காவலர் தயார்நிலை மையத்திற்காக 29 மில்லியன் டாலர் என நிதிகளை மேலும் பெறுகிறது.
அமெரிக்க கடற்படையானது புதிய போர்க்கப்பல்கள் மற்றும் 36 F-35 விமானங்களுக்கு மட்டும் 32 பில்லியன் டாலர் நிதி பெறும், இவை ஒவ்வொன்றுக்கும் சுமார் 89 மில்லியன் டாலர் செலவாகும். இந்த நிதி ஒதுக்கீட்டில் இரண்டு SSN-774 விர்ஜீனியா வகுப்பு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 621 மில்லியன் டாலர் நிதியும் அடங்கும், அவை பசிபிக் பகுதியில் செயல்படும் மற்றும் Pearl Harbor Naval Shipyard பராமரிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன ஆயுதங்களை எதிர்கொள்ள, இராணுவம் பீரங்கி மற்றும் ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்தி வருவதுடன், புதிய தொலைதூர பீரங்கிகளையும் ஹைபர்சோனிக் ஆயுதங்களையும் நாடுகிறது, அதேவேளை விமானம் மற்றும் கடல் ஏவுகணைகள், மற்றும் கப்பல் ஏவுகணைகளை இராணுவப் பிரிவுகள் மூலம் தரையில் ஏவுவதற்கு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்டில் தாய்வான் பதட்டம் :
கடந்த ஆகஸ்டில் வெள்ளை மாளிகையால் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயம், கடுமையான பதட்டங்களைத் தூண்டியதுடன் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இரு தரப்பிலிருந்தும் ஒரு ஆபத்தான மோதல் முனைப்பை ஏற்படுத்தியது.
தாய்வான் வர்த்தக மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம்,
அமெரிக்கா முன்கூட்டியே இப்பிராந்தியத்தில் வலுவாக காலூன்றிக் கொள்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *