உளவு நிறுவனங்கள்!… 40…. மௌனஅவதானி.

இலங்கையின் ஏற்பட்ட அரசியல் நெகிழ்வு அத்தனைக்கும் இந்தியாதான் காரணம் என்பதை இப்பொழுது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சிக்கல்வரை பெரும்பாலான இலங்கையர்கள் நம்பத் தயாராக இல்லை.
அதிலும் சிங்களவர்களைவிட தமிழர்கள் இந்தியாதான் எமக்கு வழிகாட்டி என்ற மாயையை விட்டு விலகவே இல்லை.
இந்தியா மீதான இத்தகு அதீதமான பாசந்தான் இலங்கையை கையாள்வதற்கு இந்தியாவிற்கு சுலபமான வழியைக் காட்டியிருக்கின்றது.
ஓவ்வொரு நாடும் தனித்துவமானவை.அந்நாடுகளில் வாழும் பண்பாடுகளாகட்டும் கலை வடிவங்களாகட்டும் இன்னொரு நாட்டின் பண்பாட்டுடனும் கலைகளுடனும் ஒப்பிடுகையில் வித்தியாசமானவை மட்டுமல்ல பழக்கவழக்கங்களும் வித்தியாசமானவையாகவே இருக்கும்.
ஆனால் இந்தியா முழுவதும் மாநிலங்கள் ரீதியாக வாழும் மக்களின் பழக்க வழக்கங்களோ, கலை, பண்பாட்டு அடையாளங்களோ கணிசமான அளவு இலங்கை வாழ் மக்களான தமிழர்கள், சிங்களவர்களுடன் ஒத்தவையாக இருந்து வருகின்றன.
இந்தியாவின் தென் எல்லைகளான தமிழகத்திலிருந்து தமிழர்களும், மத்திய பிரதேசத்திலிருந்து சிங்களவர்களின் மூலவேர் பரம்பரையினரும் இலங்கையில் குடியேறியவர்கள் என்று வரலாற்று நூல்களும் சொல்லி வருகின்றன.
இலங்கைத் தமிழர்கள்,தமிழின வம்சாவழியினர் என்ற வரலாறும், அதே வேளை அவர்கள் திராவிட இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்று இனக்குழும வரலாறும் உண்டு.
அதே போல இலங்கை வாழ் சிங்கள மக்கள் ஆரியவம்ச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற வலாற்றுக்கமைய அவர்கள் இந்திமொழி பேசும் மக்களோடு தொடர்புடையவர்கள் என்றும் வரலாற்று நூல்கள் சொல்கின்றன.
இன்றுவரை பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களின் சமயமாக இருந்து வருகின்ற சைவசமயமும், இலங்கை வாழ் பெரும்பான்மையான சிங்கள மக்களின் சமயமாக இருந்து வருகின்ற புத்த சமயமும் இந்தியாவிலிருந்துதான் இலங்கையில் பரவியது என்பதற்கமைய இன ரீதியாகவும் சமய ரீதியாகவும் இந்தியாவுடன் தவிர்க்க முடியாத வலிந்துகூட அறுக்க முடியாத இறுக்கமான தொடர்பு இலங்கைக்கு இருந்து வருகின்றது.
இந்தியாதான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குக் காரணகர்த்தா என்று இலங்கைத் தமிழர்களில் பரவலாக அறிவுசீவிகள் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வந்த போதும் அதனை தமது பலமான வெளிப்பாடாகக் கொண்டு இலங்கை அரசியல் விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு உண்டு என்பதை
இலங்கை அரசிற்குச் சொல்லி இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சிக்கவேயில்லை.
இந்தியாதான் தமிழரின் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கொண்டுவரும் என்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஆண்டாண்டு காலமாக நம்பி ஏமாந்து வருகிறார்கள்.எதற்கெடுத்தாலும் இந்திய அரசியல்வாதிகளிடம் தஞ்சமடைந்து கையேந்தி நிற்பதும், அவ்வரசியல்வாதிகள் தமிழ் அரசியல்வாதிகளாக இருப்பினும் அவர்களும் றோவின் உளவாளிகள் என்பதை நுட்பத்தன்மையுடன் சிந்தித்தல் வேண்டும்.
உளவாளிகளையும், ஒற்றர்களையும் தமது உளவு வேலைகளுக்கு பயன்படுத்துவதற்காக பெண்,பொருள்,பணம் என்பனவற்றை கொடுப்பது போல இந்தியாவின் றோ அமைப்பும் அவற்றையே பயன்படுத்துகின்றன.
மேற்கத்தைய நாடுகளில் உளவு வேலை பார்ப்பவர்களுக்கு ஒருநாட்டு இரகசியத்தின் முக்கியத்துவம் அறிந்து பெண் சுகத்தை ஊதியமாக கொடுப்பது போல ஆன்மீக பண்பாடுடைய இந்தியாவும் அந்த அணுகுமுறைக்கூடாகவும் இரகசியங்களை அறிந்து கொள்ளுமா என்று வியப்படையத் தேவையில்லை.
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகைகளை இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளுக்கு காமக்கிழத்திகளாக பயன்படுத்தி வருகின்றமையை நிராகரிக்கவே முடியாது.
இந்தியாவிற்கு மிக அண்மையில் இலங்கை இருப்பதாலும் அது சிறு தீவாக இருப்பதாலும், அதுவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பரப்பளவில் இருப்பதாலும் இந்தியா இலங்கையை ஒரு அடிமை நாடாகவே பார்த்து வருகின்றது.
இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் வடக்கு – கிழக்கு அரசியல்வாதிகள் அடிக்கடி இந்திய அரசியல் நிர்வாகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி அரசியல் தீர்வுக்கு கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு உலகின் பலம்பொருந்திய உளவு நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவின் றோ தனது ஒற்றர்கள் மூலம் அவர்களை தமது வலையில் வீழ்த்தி உள்ளது.கொண்டு வந்துள்ளது.
எட்டித் தொட்டால் கைக்கெட்டிய தூரத்தில் இலங்கைத் தீவு என்ற நிலையில் இந்தியா தனது உளவு வேலைகளை இலங்கையில் செய்வதற்கு இந்தியாமீதான தமிழினம் சார்ந்தும், தமிழ்மொழி சார்ந்தும், சைவம் சார்ந்தும் தமிழர்கள் வழிபாடுடை நாடாக கருதிய நிலையிலும்,ஆரியவம்ச பரம்பரை சார்ந்தும் கௌதம புத்தர் பிற்ந்த இடம் வாழ்ந்த இடம் என்று சிங்கள மக்கள் ஒரு அக்கறையுடன் இந்தியத்திசை நோக்கி பார்க்கும் நிலையில் அதுவே இலங்கை மக்களின் பலவீனமாகிவிட்டது.
தமிழர்கள் தாம் இலங்கைவாழ் தேசிய இனம் என்பதற்கப்பால் தமது சனத்தொகை பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை.சனத்தொகைகூடிய இனமாக இருந்து வரும் சிங்கள மக்களின் பக்கமே இந்தியா இருந்த போதிலும் முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டது போல தமிழரைக் கையாள்வதற்கு சிங்களவர்களையும், சிங்களவர்களைக் கையாள்வதற்கு தமிழர்களையும் இந்திய அரசு, சனநாயக
வழிமுறை அரசுகள் இலங்கையில் ஆட்சிக்கு வந்ததன் பின்னருங்கூட தனது உளவு நிறுவனமான றோ மூலம் இலங்கையைக் கையாண்டு வருகின்றது.
இலங்கைத் தலைநகரான கொழும்புவில் இயங்கி வந்த இந்தியத்தூதரகம் இலங்கை இந்திய வெளிநாட்டுக் கொள்கைக்கான செயல்பாட்டுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல.எல்லா நாட்டுத் தூதரகங்கள் போல இந்தியத் தூதரகமும் ஒரு உளவு நிறுவனந்தான்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இலங்கைக்கான உதவித் தூதரகமும் ஒரு உளவு நிறுவனமே.
இந்தியா மீதான இலங்கையர்களுக்கு உள்ள அபரிதமான வாஞ்சையே இலங்கையின் அரசின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு காரணமாகின்றது.
அமெரிக்கா மீதான ஆர்வ அலைக்கு காரணமாக இருப்பது அங்கிருந்து உலகம் பூராவும் திரையிட்டு வரும் திரைப்படங்கள்,அமெரிக்காவின் உணவகங்கள், பாலியல் படங்கள், பிரமிக்க வைக்கும் நவீன விஞ்ஞானக் கண்டுபிடிபு;பகள்,கோள்களை நோக்கிய நாசாவின் பயணங்கள்,பிரபஞ்ச வெளியைத் தனது கைக்குள் கொண்டு வந்தமை, பலபொருந்திய முப்படைகள் என அமெரிக்காவை நோக்கி உலக நாடுகள் பார்ப்பது போலவே, இந்தியாவை நோக்கி இனமரபு பரம்பரை வழியாகவும்,சமய ரீதியாகவும் இந்தியா நோக்கிய பார்வை இலங்கை மக்களுக்கு பிரமிப்பாகவே இருந்து வருகின்றது.
„இந்தியா எமது’ என்ற ஒரு மனப்பான்மை இலங்கை மக்களிடம் இருக்கும் வரைக்கும் இலங்கை தன்னிலையில் உறுதியாக இருப்பது என்பது நடக்காத ஒன்றேயாகும்.
இலங்கையின் இன்றைய நிலைக்கு இந்தியாவின் றோதான் காரணம் என்றும்,றோவிற்காக செயல்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகையில்,இனமரபு,சமய அடையாளம் தவிர்த்து, அங்கிருந்து வரும்திரைப்படங்கள்,பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,இலங்கை இந்தியாவுடனான மண் ரீதியாகவும், இலங்கை இந்தியாவுடனான பலவாயிரம் வருடங்களாக நிலவி வருகின்ற வரலாற்று தொடர்புகளும் தமிழர்,சிங்களவர்களுக்கான வழிபாட்டுத் தளங்கள் போன்றவையும் இந்தியா இலங்கையைக் கையாள்வதற்கான பலமாக இருந்து வருகின்றது.
ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டுடன் இருவித உறவுகளைப் பேணிவருகின்றன.பொதுநிலையில் நல்லுறவு,இன்னொன்று ஒரு நாட்டிற்குள் உளவு நிறுவனங்களை அனுப்பி ஒற்றர்கள் மூலமாக கறுப்பு இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவது.மற்றைய எந்த நாட்டுக்குள்ளும் உளவு நிறுவன ஒற்றர்கள் நுழைவதைவிட இலங்கை;குள் இந்திய றோ அமைப்பின் ஒற்றர்கள் பல்வேறு வடிவங்களில் நுழைவது இலகுவானதே.
(தொடரும்)
![]()