கட்டுரைகள்

இலங்கை வரலாற்றில் தமிழர்களால் மூடிமறைக்கப்பட்ட உண்மைகள்!…. ஏலையா க.முருகதாசன்.

தாய்வீடு நவம்பர் 2022 இதழில் „சிங்களச் சமூகத்தில் சாதி பேதமும் ஒடுக்கலும்’ என்ற கட்டுரை வெளிவந்திருந்தது.அக்கட்டுரையை வாசித்த போது இலங்கைச் சமூகத்திற்குள் இருந்த பிரிவினர்கள் பற்றியும் அவர்களில் கொவிகம என்ற சிங்கள உயர்சாதிப் பிரிவினரின் வம்சாவழியைக் கொண்டு தமிழ்ச் சமூகத்திற்குள் அச்சாயல் பெயர் கொண்ட பிரிவினர் எவ்வாறு இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் குறிப்பாக,இலங்கையின் வடபுலத்தில் கும்பல் கும்பலாக வாழ்வதுபற்றியதுமான கட்டுரையே இது.

எனது இந்தக் கட்டுரையில் சாதி என்ற பெயரைப் பயன்படுத்தாது „பிரிவினர்’ என்ற சொற்களையே பயன்படுத்தியுள்ளேன்.

நான் சொல்லப் போகும் சில உண்மைகளை வாசிக்கும் போது பலரால் அதனை ஏற்றுக் கொள்ளவோ சீரணிக்கவோ முடியாமலிருக்கலாம்.ஆனால் மறைக்கப்பட்ட சில உண்மைகளைப் பேசத் தயங்குவது என்பதும் இன ரீதியாக தம்மையே மேம்படுத்துகின்ற தவறான வரலாற்றையே நாம் நம்பிக் கொண்டிருப்பதும் அதனையே வாழையடி வாழையாக சொல்லி வந்தனால் அதுதான் உண்மையான வரலாறு என ஒரு இனத்தையும், சமூகத்தையும் நம்ப வைத்துள்ள பெரும் தவறை வரலாற்றாசிரியர்கள் செய்துள்ளார்களோ என நினைக்கத் தோன்றுகின்றது.

உண்மைகளை மூடிமறைத்து,சார்புநிலை கொண்டு பொய்களையும் கலந்து எழுதியதை சாதாரண மனிதர்கள் நம்பியிருந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல மாணவ சமுதாயமே அதனைப் படித்துக் கொண்டுமிருக்கிறார்கள்.

எப்பொழுதும் எது உண்மையோ அதுவே உண்மையான வரலாறாக இருக்க வேண்டும்.இலங்கை வரலாற்றில் தமிழர்சார் வரலாற்றில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. நிறைய மூடிமறைப்புக்கள் இருக்கின்றன.

வரலாற்று ஆசிரியர்களிடம் நேர்மை இருந்திருக்கின்றதா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போகின்றது.இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் தவிர்ந்த சிங்களவர்கள் தமிழர்கள் அகிய இரு இனங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்த இனந்தான் அதனைத்தான் மரபணுக்கள் சொல்கின்றன என்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் சொல்வதை இந்த இரண்டு இனங்களுமே கவனத்தில் எடுக்கவே இல்லை.அவர்களிடம் ஒரு தயக்கம் இருக்கின்றது.(முஸ்லீம்களும் இதில் உள்ளடங்குவர்,ஏனெனில் அவர்கள் மதம் மாறியவர்களே)

அதற்கான காரணம் இலங்கையின் ஆதிக்குடிகள் நாம் மட்டுமே என்று தமிழர்களும்,இலங்கை ஒரு பௌத்த நாடு நாமேதான் இலங்கையின் சொந்தக்காரர்கள் என்று சிங்களவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இருபக்க இனவாதப் போக்கும் சார்புநிலைப் போக்கும் கொண்ட இரு தரப்பினரும் உண்மைகளை மூடிமறைக்கின்றனர்.

சோழரும் பாண்டியரும் காலத்திற்குக் காலம் இலங்கை மீது படையெடுத்த வேளைகளில் அதனை எதிர்த்து நின்ற சிங்கள உயர்குடியினரான கொவிகம பிரிவினரை அவர்கள் கைது செய்து தமிழர்கள் வாழும் வடகிழக்குப் பகுதிகளில் ஒன்றான வடக்கிற்கு கொண்டு வந்து தமது போர் தொடுப்புக்கு ஆதரவாக இருந்து வந்த தமிழ் உயர் குடியினரின் ஏவலுக்கு வேலை செய்யும் அடிமைகளாக்கப்பாட்டனர்.

அது போல சிங்கள மன்னர்கள் தமக்குள் போர் தொடுத்த போதெல்லாம் கணிசமான சிங்கள மக்கள் வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்துள்ளர்.

சிங்கள மக்களிடையே உயர்குடியினராக கருதப்பட்ட கொவிகம பிரிவினர் போர்ச் சூழ்நிலை, மிரட்டல் போன்றவற்றால் அவர்கள் தம்மை ஒடுக்கிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை இருந்ததால் ஆங்காங்கே பல ஊர்களில் குடும்பங்களாக வாழத் தொடங்கினர்.

இதில் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது என்னவெனில் ஒரு இனம் அல்லது ஒரு சமூகப் பிரிவு தனது சொந்த இடத்தில் மேன்மையுடன் வாழ்ந்தாலும் ஏதிலிகளாகி இன்னொரு புலத்திற்குச் செல்கையில் அவர்களின் மேன்மை நிலை செல்லுபடியதற்றதாகிப் போய்விடும் என்பதுடன்,உயிர்வாழ்தல் வேண்டுமென்பதற்காகவும்,உயிர்ப்பயம் காரணமாகவும் இட்ட வேலைகைளைச்

செய்பவர்களாகவும்,கிடைத்த உணணைவைச் சாப்பிடுபவர்களாவும்,கையேந்துதலுக்கு உட்பட்டவர்களாக சூழ்நிலை அவர்களை மாற்றிவிடும்.

இவ்வாறு புலம்பெயர வைக்கப்பட்டவர்கள்தான் கொவிகம என்ற பெயரை ஒத்த பிரிவினராகும்.சிங்களவரிடையே உயர் பிரிவினராக இருந்தவர்கள் தமக்குச் சமனாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, போரில் சிறை பிடிக்கப்பட்டவர்கள், போரிலிருந்து தப்பி வந்தவர்கள் என்ற காரணத்தால் அவர்களை தாழ்ந்த நிலையில் தமக்கு அடுத்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் அவமானப்படும் வேலைகளை செய்யும்படி நிர்ப்பந்தப்படுத்தியதுடன் மிகவும் மோசமான பெயர்களை அவர்களுக்கு இட்டு கோபம் வரும் போதெல்லாம் அப்பெயர்களைச் சொல்லி அழைக்கும் திமிரையும் உயர்குடிப் பிரிவினர் இன்றுவரை கடைப் பிடித்து வருகின்றனர்.

சிங்களச் சமூகத்திலிருந்து புலம்பெயர வைக்னகப்பட்ட இவர்கள் சங்கானை, சுண்ணாகம் ,மல்லாகம்,பண்ணாகம் அச்சுவேலி,தெல்லிப்பழை,வரணி,மீசாலை, கரணவாய், வேலணை,தொல்புரம்,சுளிபுரம்,கொடிகாமம்;,சாவகச்சேரி,வடலியடைப்பு,கொய்யாத் தோட்டம்,ஈச்சமட்டை,அல்வாய்,கரவெட்டி,உடுப்பிட்டி ஆகிய ஊர்களில் தமது வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர் அல்லது அங்குள்ள உயர்குடிப் பிரிவினருக்கு ஏவல் செய்பவர்களாக ஆக்கப்பட்டனர்.

கொவிகம என்ற உயர்சிங்களப் பிரிவினர் வடகக்கிற்கு புலம்பெயர்ந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் தமிழர்களாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மறுக்க இயலாது.

சிங்கள மொழியில் வத்தை என்பது தோட்டத்தைக் குறிக்கும்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக தெல்லிப்பழையிலுள்ள அம்பனைச் சந்தியிலிருந்து கொல்லங்கலட்டி நோக்கி வடக்காகச் செல்கையில்,சந்தியிலிருந்து கிட்டத்தட்ட 700 மீற்றரில் உப தபால் நிலையத்தின் அருகோடு மேற்காகச் செல்லும் ஒழுங்கையில் கொத்தர் கிணத்தடி என்ற பொதுக் கிணத்தடியும் அதன் மேற்கு நோக்கிய ஒழுங்கை வளவும் அதைச் சுற்றியும் உள்ள வளவுகள் அனைத்தையும் நீலாவத்தை என்றே அழைக்கப்படுகின்றது.அங்கு கொவிகம என்ற சிங்கள உயர்குடிப் பிரிவினரின் பெயரின் திரிபுநிலைப் பெயர் கொண்டவர்கள் குழவாக வாழ்கின்றனர். கொவிகம திரிபு நிலை கொண்ட தமிழர்களாக மாறிய இப்பிரிவினர் சுண்ணாகம்,சங்கானை அச்சுவேலி கொடிகாமம் ஆகிய இடங்களில் அதிகளவு எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

நீலாவத்தை என்ற பெயர் கொண்ட வளவுகளில் எண்ணிக்கையில் பதினைந்து குடும்பங்கள் வாழ்கின்றனர்.வத்தை என்ற சொல்லால் அழைக்கப்படுதல் கொவிகம என்ற சிங்கள உயர்சாதியினரின் பெயரின் திரிபான பெயரைக் கொண்டவர்களே இப்பிரிவினராகும்.

தெல்லிப்பழையில் விழிசிட்டி என்ற இடத்திலும்(சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் கூற்றான சிட்டி என்று முடிவடையும் ஊரப்பெயர்கள் சிஙகளவர்கள் வாழ்ந்ததற்கான இடங்களாகும்) கொவிகம என்ற சிங்கள உயர்சாதியினரின் பெயரில் இருந்து திரிபு நிலை அடைந்து அழைக்கப்படும் பெயருடைய சில குடும்பங்கள் வாழ்கின்:றன.

இதைவிட தெல்லிப்பழைச் சந்திக்கு தென்கிழக்குப் பகுதி வளவுக்குப் பெயர் பத்தாவத்தை.அங்கும் கொவிகம திரிபுநிலையடைந்த பிரிவினரே வாழ்ந்தனர்(போர்க்காலச் சூழ்நிலை காரணமாக அக்குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டன.)

தெல்லிப்பழையில் புதுத்தோட்டம் என்ற குறிச்சி இருக்கின்றது.இங்கும் கொவிகம திரிபுநிலைப் பிரிவினரே இருக்கின்றனர்.பல வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தைச் சேர்ந்த சில தோட்டக்காரர்கள் தாங்கள் சிங்கள வம்சாவழி எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எமது இடத்தின் உண்மையான பெயர் அளுத்வத்தை என்றனர்.அழுத் என்பது „புது’ என்பதும் வத்தை என்பது தோட்டம் என்பதையம் வெளிபபடுத்தியதால் தமிழில் புதுத்தோட்டம் என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.

அது போல நீலாவத்தை என்ற குறிச்சியைச் சேர்த்தவர்ளும் தாம் சிங்கள வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சொன்ன போது நான் இவர்கள் ஏதோ நகைச்சுவைக்காகச் சொல்கிறார்கள் என கவனத்தில் எடுக்கவே இல்லை.

சுண்ணாகத்திலுள்ள கந்தரோடையில் இருக்கின்ற பௌத்த அடையாளச் சின்னங்கள் கொவிகம திரிபு நிலையடைந்தவர்களால் ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்டமையாகும் எனக் கொள்ளலாம்.

தமிழர்களாக மாறிய சிங்களவர்களே இச்சின்னங்களை உருவாக்கினார்கள் என்பதை மறுக்கின்ற வரலாற்றாசிரியர்களின் உள்நோக்கம் அரசியல் காரணமாகவே இருக்கின்றன.

வரலாற்றை பொய்யாக்குவதற்காக சிலரால் நிர்ப்பந்திக்கப்பட்ட வரலாற்றாசிரியர்கள் தமிழர்கள் பௌத்த மதத்தினையும் தழுவியவர்கள் என்று எழுதினார்களே தவிர,பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர்களின் வேர்கள் சிங்களவர்கள் எனத் தெரிந்திருந்தும்,அதனைத் துணிந்து கூறத் தயங்கினார்கள்.

கலாநிதி திரு.இந்திரபாலா அவர்கள் கந்தரோடையிலிருக்கின்ற பௌத்தமதச் சின்னங்கள் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான நிரூபணம் எனக் கூறிய போது அவர் அரசுடன் சேர்ந்து வரலாற்றை திசைதிருப்பப் பார்க்கிறார் எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக பிரான்சிலிருந்து வெளிவந்த எரிமலை சஞ்சிகை ஆரம்பத்தில் கலாநிதி திரு.இந்திரபாலா அவர்களுக்குத் துரோகிப்பட்டம் சூட்ட முயற்சித்தது.ஒரு தொல்லியல் ஆய்வாளரை பகைத்தல் தவறு என அறிந்த எரிமலை வெளியீட்டாளர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அவர் மூலமாக, தமிழர் பகுதிகளில் காணப்பட்ட தொல்பொருள் எச்சங்கள் பற்றியவற்றை எரிமலைக்கு எழுத வைத்தனர்;.(நடுநிலை நின்று உண்மைகளைப் பேசுகின்ற ஆய்வாளர்கள்,அறிவுஜீவிகள் மிரட்டலுக்கு உட்பட்டமையை மறுப்பதற்கில்லை)

தமிழ்நாட்டிலிருந்து இராஜராஜ சோழன் காலத்தின் போது அவரால் இலங்கையின் வடபகுதி நோக்கி அனுப்பப்பட்ட உயர்பிரிவினர் அதற்கடுத்தடுத்த (தலித்) சாதியினர்,உயர்சாதியினருள் தனித்துவமான அடையாளமாக விளிக்கப்பட்ட „பிள்ளை’ „உடையார்”முதலியார் „என்பவர்களும்,இவர்களுடன் பிராமணர்களும் இதில் அடங்குவர்.

ஆனால் இவர்களில் கொவிகம திரிபுப் பெயருடையவர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வராதவர்களாகும்.தமிழகத்தில் இப்பிரிவினர் இல்லவே இல்லை.

எனவே,கொவிகம என்ற பெயர் திரிபடைந்து தமிழர் பகுதிகளில் அதே சாயலில் விளிக்கப்பட்டு வாழும் இப்பகுதியனர் சிங்கள வம்சாவழியினர் என்பது உறுதியாகின்றது.

இலங்கையில் தமிழச் சமூகத்திற்குள் வாழும் இப்பிரிவினரும் புலம்பெயர் நாடுகளில் வாழும் இப்பிரிவினரும் தாம் சிங்கள வம்சாவழியினர் என்பதை உணரத் தொடங்கிவிட்டனர்.இன்னும் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் இப்பிரிவினர் மத்தியில் தாம் சிங்கள வம்சாவழியினர் என்பது உண்மையே என்பதை தமது பிரிவினருக்குச் சொல்வதன் மூலம் தம்மைப் பற்றி அறியத் தொடங்கி அத்தகவல் வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது.

கொவிகம என்ற சிங்கள வம்சாவழியில் வந்தவர்கள் பணிநிமித்தமோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சிங்களப் பகுதிகளில் வாழும் போது அவர்கள் சிங்கள மக்களுடன் உறவினர்கள் போல வாஞ்சையுடன் பழகுவார்கள்.ஆனால் தமிழர்களில் உயர்பிரிவினராக இருப்பவர்கள் சிங்களப் பகுதிகளில் வாழும் போது சிங்களவர்களை மதிக்காதவர்களாக இருக்கிறார்கள்;;.அவர்களுடன் பழகுவதே தமக்கு கௌரவச் குறைச்சல் என்றும் எண்ணுபவர்கள்.

இன்னும் இதனை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது பிரித்தானியர்களால் உயர்பதவிகளில் பணியமர்த்தப்பட்ட தமிழர்களிலுள்ள உயர் பிரிவினர் சிங்களப் பணியாளர்களை எள்ளவும் மதிக்காதவர்களாகவும் அவர்கள் புத்தியில்லா மூடர்கள் என்பதைப் போலவும் அவர்களின் முகத்துக்கு நேரே „மோடையா’ எனத் தமக்கு அடிமை போலவும் நடத்துவார்கள்.ஆனால் கொவிகம என்ற சிங்கள உயர்சாதியிலிருந்து திரிபுநிலை அடைந்தவர்கள். திணைக்களங்களில் அதிகாரிகளாக இருக்கையிலும்கூடத மக்குக் கீழ் பணியாற்றும் சிங்களப் பணியாளர்களுடன் நட்புடனும் வாஞ்சையுடனும் பழகுவார்கள்.அதுதான் தானாடாவிட்டாலும் தன்தசையாடும் என்பதற்கொப்பான மரபணு ஈர்ப்பாகும்.

ஒரு பெரும் உண்மையை குழிதோண்டீ ஆழமாக தமிழ் வரலாற்றாசிரியர்கள் புதைத்தற்கு என்ன காரணம் என ஆராய்கையில்,தமிழ் வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலானோர் உயர்பிரிவினராக இருப்பதால்,சிங்களச் சமூகத்தில் உயர்பிரிவினராக இருப்பவர்கள் தமக்குச் சமமாக வருவதை விரும்பவில்லை. என்பதுடன் அப்பிரிவினர் சிங்கள வம்சாவழியினர் என்பதை எழுத்து மூலமாக

வெளிப்படுத்தும்போது வடபகுதியும் சிங்களவர்களின் நிலந்தான் என்பதை தமிழர்களே ஒப்புக் கொள்வதாகிவிடும் என்பதுமாகும்.அத்துடன் சிங்கள அரசின் பார்வை இப்பிரிவினரை நோக்கி செல்கையில் அவர்கள் சலுகைகளுக்கு உட்பட்டு, அவர்களும் தமிழ் பேசும் சிங்களச் சமூகத்தவர் என்ற நோக்கில் அவர்களையும் பெரும்பான்மை இனத்துக்குட்பட்டவர்களாக கணிக்கப்பட்டு அரச திணைக்களங்களில் உயர் பதிவிகள் வழங்கப்படலாம் என்ற காரணமாகவும் இருக்கலாம்.

தமிழ் வரலாற்றாசிரியர்களைவிட சிங்கள பேராசிரியர்களும்,அவர்களில் வரலாற்றுத்துறை சார்ந்த கலாநிதிகளும்,குறிப்பாக இலங்கை வரலாற்று ஆய்வாளர்களாக இருக்கும் பௌத்த குருமாரும் இலங்கை வரலாற்றின் ஆதியை துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நிராகரிக்க முடியாது.இராவணன் இலங்கையின் தமிழ்ச் சக்கரவர்த்தி என்பதை பெரும்பாலான வரலாற்றாய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறார்கள்.ஆனால் சிங்களவர்கள் இராவணன் தமிழ்ச் சக்கரவர்த்தியாக இருந்த போதும் அவன்தான் இலங்கையின் பெருமைமிகு சக்கரவர்த்தி எனக் கொண்டாடுகிறார்கள்.

சுவாமி ஞானப்பிரகாசர் சிங்கள மக்கள் தமிழ்ப் பகுதிகளில் இருந்தமையும் இப்பொழுது அவர்கள் இப்பொழுது தமிழராக மாறியுள்ளதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.அவரின் அக்கட்டுரை தொடர்பான தகவல்களை பேராயர் ஜெபநேசன் அவர்கள் தனது கட்டுரை வாயிலாகக் கூறியிருந்தார்.

சிலாபத்தில் வாழ்ந்த தமிழர் பலர் இன்று சிங்களவர்களாக முற்றிலும் மாறியது போலவே கொவிகம் என்ற சிங்கள உயர்பிரிவினர் தமிழர்களாக மாறியது என்பது வரலாற்று உண்மையாகும்.

சுவாமி ஞானப்பிரகாசர் மேலும் அக்கட்டுரையில் நாரந்தனை என்ற பெயர் சிங்களவர்கள் வாழ்ந்ந்த இடமாகும் என்றும் சுளிபுரத்தில் சுளிபதே என்ற விகாரையும், தொல்புரத்தில் தொல்பதே என்ற விகாரை இருந்ததாகக் கூறும் அவர்,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இருக்கும் இடத்தில் முன்பு பெரிய ஆலமரத்தடி விகாரை என்றழைக்கப்பட்ட விகாரை இருந்ததாகவும்.அந்த இடத்திலேயே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கட்டப்பட்டதாகவும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பணம் என்ற பெயருக்கு யாழ்பாடி என்ற பாணர்கள் காரணமல்ல அது ஒரு புனைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோவிகம என்ற சிங்கள உயர்பிரிவின் பெயரிலிருந்து திரிபுபட்ட பெயரைக் கொண்டு வாழும் பிரிவினருக்கும் சிங்கள மக்களுக்குமிடையே குணாம்சங்களில் நிறைய ஒற்றுமை உண்டு.

இவர்கள் இரு பகுதியினரும் வேகமாக கோப உணர்ச்சிப்படுபவர்கள்.சங்கானையிலும் அச்சுவேலியிலும் ஆங்காங்கே நடைபெற்ற சாதிக்கலவரங்களில் இவர்களே முன்னிலை வகித்தவர்கள்.

இவர்கள் தமிழ்ச் சமூகத்தில் உள்ள உயர்பிரிவினரால் தூண்டப்பட்டு சாதிக் கலவரங்களை ஏற்படுத்தியவர்கள்.அடிப்படையில் கொவிகம தமிழ்ப் பிரிவினருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் எப்பொழுதுமே நட்பு இருந்து கொண்டேதானிருந்தது.

ஆனால் அவர்களைத் தூண்டியவர்கள் உயர் பிரிவினராகவே இருந்து வந்துள்ளார்கள்.மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்பட்டவர்களை தரிசனத்துக்குப் போகவிடாமல் தடுத்ததில் அடங்காத் தமிழன் என்று கூறப்பட்ட திரு.சுந்தரலிங்கமே அதற்கு முழுக் காரணம் என்பதுடன்: தாழ்த்தப்பட்டவர்களை தடுத்து நின்றவர்கள் கொவிகம வம்சாவழியினரே

கலாநிதி திரு.குணேஸ்வரன் இக்கட்டுரையில் குறிப்பிட்ட கொவிகம என்ற சிங்கள உயர்சாதியினர் தமிழர் பகுதிகளில் திரிபுபட்ட பெயர் கொண்டு இன்று தமிழர்களாக வாழ்வது பற்றி எவ்வித குறிப்பும் சொல்லாமல் கடந்து சென்றதன் மூலம் பெரும்பாலான தமிழ் வரலாற்றாசிரியர்கள் எதையோ மூடிமறைக்கிறார்கள் அல்லது சார்பு நிலை வரலாற்றாசிரியர்களாகவும் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்குகின்றது.

தமிழ்ச் சமூகத்துக்குள் கொவிகம திரிபுநிலைப் பெயர் கொண்ட பிரிவினரின் வரலாற்றினை பல ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற ஆய்வில் அவர்கள் சிங்கள வம்சாவழியினர்தான் என்ற வரலாற்று உண்மையை அறிந்து அந்த ஆயவினை அப்படியே மூடிமறைத்ததற்கு தமிழ் உயர் பிரிவினரும் அப்பிரிவினைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளுமே காரணமெனக் கூறப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *