செய்திகள்

ஆதரவளிக்கச் சென்றவர் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு முன்பே மரணம்

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் தமக்குப் பிடித்த வேல்ஸ் (Wales) அணியினர் விளையாடுவதைக் காணக் கத்தாருக்குச் (Qatar) சென்றிருந்த ஆதரவாளர் ஒருவர் மாண்டார்.

62 வயது கெவின் டேவிஸ் (Kevin Davies) வேல்ஸிலுள்ள பெம்ப்ரோக்ஷாயரைச் (Pembrokeshire) சேர்ந்தவர்.

அவர் டோஹாவிற்குத் (Doha) தமது மகனோடும் நண்பர்களோடும் சென்றிருந்தனர்.

ஆனால் வேல்ஸ் ஈரானிடம் (Iran) 2-0 கோல் கணக்கில் தோல்வியடைந்த போட்டியைக் காண அவர் செல்லமுடியவில்லை…

அதற்கு முன்னரே டேவிஸ் இயற்கைக் காரணங்களால் மாண்டதாக BBC செய்தி தெரிவித்தது.

அவரின் மரணம் குறித்து வேல்ஸின் காற்பந்துச் சம்மேளனம் (Football Association of Wales) Tweet செய்தது.

இந்த இக்கட்டான நிலையில் டேவிஸின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆதரவும் உதவியும் அளிப்பதாக அது குறிப்பிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *