நம்பகத்தனமையற்ற அறம்மறந்த ஊடகங்கள்!..,. ஏலையா க.முருகதாசன்.

![]()
இன்று தமிழ் இணையத்தள ஊடகங்கள் வகை தொகையாக பெருகிவிட்டன.அது மகிழ்ச்சியான விடயமே.சிந்திக்கும் சமூகத்தில் நூல்களும்,பத்திரிகைகளும் பெருகிவருவது ஆரோக்கியமானதே.பொதுவாக இந்நிலைமையப் பார்க்கின்ற போது நாளுக்கு நாள் இடம்பெறும் உலக நிலவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் காட்டும் ஆர்வமும் ஈடுபாடும் ஒரு வளர்ந்த சமூகத்தின் அறிகுறிகளாகும்.
அதே வேளை சில இணையத்தள ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மீதான நம்பகத்தனமையும் குறைநஇத கொண்டே வருகின்றன.
ஒருசில இணையத்தள ஊடகங்களைத் தவிர பல தமிழ் இணையத்தள ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் போட்டு புழுகித் தள்ளுகின்றன. 
எனக்கு இத்தகைய ஊடகங்களைப் பார்க்கின்ற போது,ஒரு காலத்தில் இலங்கையில் தினபதி,தவச குழுமத்தினரால் வெளியிடப்பட்ட தந்திப் பத்திரிகையே ஞாபகத்திற்கு வருகின்றது.
பத்திரிகைக்கு அளவான தாளை வெட்டியபின் மிகுதியாக வரும் தாளை குப்பையில் தூக்கிப் போடாமல் அதையும் பயன்படுத்தும் நோக்கில் அதற்கு தந்தி என்ற பெயரிட்டு பத்திரிகை வடிவம் கொடுத்ததை நாமறிவோம்.
அச்சு ஊடகங்களைவிட இணையத்தள ஊடகங்கள் மீதான கவனமும் ஈர்ப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், யாராவது இணையத்தள ஊடகங்களில் வரும் செய்திளை மேற்கொள் காட்டியோ உசாத்துணையாகவே ஒரு கட்டுரையையோ அல்லது வரலாற்று நூல்களையோ எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆய்வு நூல்களை எழுத முனைவோர் தமக்குத் தேவையான தகவல்களைத் சேகரிப்பதற்குhக அதுசார்ந்த பலபல நூல்களை மட்டும் வாசிப்பவர்கள் அல்ல,அவர்கள் அச்சு ஊடகங்களிலும், இணையத்தள ஊடகங்களில் வரும் செய்திகள்,கட்டுரைகள போன்றவற்றையும் தமது தேவைகளைப் பொறுத்து வாசிப்பவர்களே.
ஆனால் ஒருசில ஊடகங்களைத் தவிர பல ஊடகங்கள் நம்பகத்தன்மையற்ற ஊடகங்களாகவே இருக்கின்றன.
இன்னும் இணையத்தள ஊடகங்கள் செய்திகளைப் பிரசுரிக்கும் செய்தியைத் தயாரித்தவரின் பெயரையோ, வெளியான திகதியையோ நேரத்தையோ குறிப்பிடுவதில்லை என்பதும் சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றது.
இத்தகைய செய்திகளை வெளியிடுவோர்’மக்கள் விழுந்தடித்து எமது செய்திகளை வாசிக்க வேண்டுமென்பதற்காக,புளகாங்கிதம் கொள்ளும் செய்திகளை பிரசுரிக்கிறோம் „ என பத்திரிகை அறம் மறந்து சொல்வதையும் கேட்டு வருகிறோம்…..
![]()