பெண்ணியம் பேசிய முதல் பெண் பார்வதியே ஏலையா க.முருகதாசன்

நவீன உலகில் பெண்ணியம் பேசுபவர்களும், பெண் விடுதலைக்காக எழுதியும்
களவேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள் என உலகளவில்
பெருகிக் கொண்டே வருகின்றனர்.
ஆகக் கூடியது என்று சொன்னால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெண் விடுதலை
சார்ந்த பெண்ணியக் கருத்துக்களும் வரத் தொடங்கியுள்ளது எனலாம்.
அதற்கு முன்னரே பார்வதி வரையறுக்க முடியாத் ஆண்டுகளுக்க முன்னரே தனது கணவர்
சிவாவுடன் சரிக்குச் சமனாக நின்று வாதாடி கோபத்துடன் தனது உரிமைக்காக
போராடியிருக்கிறார். விவாகரத்து வரைக்கும்கூட பார்வதி போயிருக்கிறார்.பலபேர்
தலையிட்டு பார்வதியின் முடிவை மாற்றியிருக்கிறார்கள்.
நான் எழுதப் போவதை வாசிப்பவர்களுக்கு இது நகைச்சுவையாகத் தோன்றலாம்.ஆனால்
இதை ஒரு தத்தவமாகக்கூடக் கொள்ளலாம்.
அது உங்கள் பார்வையைப் பொறுத்தது.;இந்தாளுக்கு வேறை வேலை இல்லை எதையும்
எதையும் கொண்டு வந்து முடிச்சுப் போடுகிறார் பாருங்கள் என்று கோபித்துக்
கொள்ளலாம்,என்னைத் தூற்றலாம் அது உங்களுடைய கருத்துச் சுதந்திரம் உரிமையும்கூட.
இனி பார்வதிக்கும் சிவாவுக்கும் நடந்த பிரச்சினையை கதை வடிவில் சொல்கிறேன்.
வீட்டுக்குள் நுழைந்த சிவாவைக் கண்ட பார்வதி'இவ்வளவு நேரமும் எங்கை போட்டு
வாறியள்,இஞ்சை வீட்டிலை ஒரு சாமான் சக்கட்டு இல்லை, என்ன சமைக்கிறதெண்டே
தெரியேலை,அது சரி நான் ஒரு கதை கேள்விப்பட்டன் ஊருக்குள்ளை போறவாற
இடத்திலையெல்லாம் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறியளாமே…..உண்மையா என்று பார்வதி சிவாவிலை எரிஞ்சுவிழ,
„பொறு பொறு கனக்க வசனம் பேசாதை ஒவ்வொண்டாய்க் கேள் பதில் சொல்றன்என்று சிவா
திரிசூலத்தை சாத்தி வைத்துவிட்டு சக்கைப்பணிய இருந்து கொண்டு நான் ஆடினால்தானே
உலகமே இயங்கும் என்று சொன்ன சிவாவை இடைமறித்த பார்வதிஉங்களுக்கு
வெட்கமாயில்லையா, சூலம் ஒரு கையிலை இடுப்பிலை புலித்தோல், போதாதற்கு உடம்பு
முழுக்க சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு, பாம்புகளை கையிலையும் கழுத்திலையும்
சுத்திக் கொண்டு உடுக்கடிச்சு ஆடுறது…வெளியிலை என்னாலை தலைகாட்ட முடியேலை…
„இடுப்பிலை கட்டிறது அரைகுறை புலித்தோல்.உள்ளுக்குள்ளை கோவணம் கீவணம்
கட்டிறேலை இதுக்குள்ளை காலை நல்லாய் தலைக்கு மேலே உயர்த்தி ஆடுறது, பாக்கிறவை
வந்து சொல்லுனம் உன்ரை மனுசன் ஆடுறது சரி,உள்ளுக்குள்ளை ஒண்டும் கட்டாமல் ஆடுறார்,
அவற்றை உடுக்குச் சத்தத்தை கேட்கிறதா இல்லாட்டி அந்தச் சத்தத்தைக் கேட்கிறதா என்று
எங்களுக்கே தடுமாற்றமாயிருக்குது என்று பார்வதி கோபத்தின் சூடு தணியாமல் சொல்ல,
„அதுசரி உந்தக் கதை ஆர் சொன்னது என்று சிவா கேட்க,
„வேறை யார் இலட்சுமியக்காவும் சரஸ்வதியக்காவுந்தான் என்று பார்வதி சொல்ல
„அவை உனக்கு அக்காக்களே,உனக்குத்தான் வயதுகூட அவை உனக்கு தங்கச்சிமார்…அது சரி
சரஸ்வதி சொன்னதை காதிலை விழுத்தாமல் விடலாம்,ஏணெண்டால் மனசுக்க ஆறுதலாய்
இடைக்கிடை வீணை வாசித்து எங்களைக் கேட்கச் செய்கிறார்,
இலட்சுமியாலை அங்கை பூமியிலை எவ்வளவு பிரச்சினை தெரியுமோ சாதாரண வட்டிக்கு
குடுக்கிறவன், கந்துவட்டிக்கு குடுக்கிறவன், நாள் வட்டிக்கு குடுக்கிறவன் மணித்தியால
வட்டிக்கு குடுக்கிறவன்,நிமிச வட்டிக்கு குடுக்கிறவன் எல்லாம் அவாவின்ரை படத்துக்கு
முன்னாலை நின்று „தாயே சனங்கள் காசுக்கு வழியில்லாமல் கஸ்டப்பட வேண்டும்,
என்னட்டை வரவேண்டும் எண்டு கும்பிடுகினம.; அது தெரியாமல் நீயும் அவையின்ரை
கதையைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு என்னோடை பாயிறாய் என்ற சிவா,
பார்வதிக்கு கேட்காது என்று நினைத்துக் கொண்டு அப்பனைப் போலத்தானே மோளும் என்று
சத்தமில்லாமல் சொல்ல அடுபபடிக்குப் போய்க் கொண்டிருந்த பார்வதிக்கு அது கேட்டுவிட
„இப்ப எதுக்கு என்ர அப்பாவின்ரை பெயரை இழுத்தனீங்கள் „ என்று கோபமாக கேட்க
ஏன் கொப்பன் தக்சன் பெரிய திறமானவரே,ஊர் உலகத்திலை உள்ள எல்லாரையம் கூப்பிட்டு
பெரிய யாகம் ஒண்டு செய்தவர், என்னை அதுவும் ஒரேயொரு மருமகனான என்னை, அனைத்து
உலகத்துக்கும் அதிபதியான என்னை வரச் சொல்லிக் கேட்கேலை அவர் ஏதோ திறமானவன்
என்று கதைக்க வந்திட்டா இவாஎன்று சொல்லி முடிக்க முந்தி இஞ்சை பாருங்கோ அப்பாவை அவன் இவன் என்று கதைச்சியள் என்றால் விவாகரத்து
செய்திடுவன்என்று சொல்ல,
„போற வாறவன் எல்லாம்,என்ன ஈரேழு உலக அதிபதி என்கிறீர்கள், என்ன கொம்மான்
யாகத்துக்கு கூப்பிடாமல் உங்கடை முகத்திலை நல்லாய்க் கரியைப் பூசிப் போட்டார் என்று
நக்கலாகச் சிரிக்கினம்
„இது போதானெ;று மன்மதன் கரும்பைச் சப்பிச் சப்பி துப்பிக் கொண்டே ஆகா…ஓகோ..என்று
சிரிக்கிறான்' என்று சொன்னதும், பார்வதிக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏற,..
„நான் உங்களுக்க கனதரம் சொல்லியிருக்கிறன் அந்தக் கரும்புக்காரனைக் கண்டால் ஒதுங்கிப் போகச் சொல்லி…ஊராரின் கரும்புத் தோட்டங்களில் கரும்பைப் பிடுங்கிச் சப்புவது, கரும்பைக்கொண்டு திரிந்து அம்பு விடுகிறது,
தனியாப் போற பொம்பிளையளை கரும்பு கடிக்கத் தாறன் என்று தோடட்டத்துக்குள்ளை
கூட்டிக் கொண்டு போறது…ஐயையோ என்னவெல்லாமோ நடக்குது …குமட்டுது…
அந்தாளோடை சேராதையுங்கா என்று எத்தனை முறை சொன்னனான்..அந்தாளோடை
சேர்ந்துதான் பகீரதி கங்கா என்று எல்லாம் என்னமோ நடக்குது…
இது இப்படியே போனால் விவாகரத்துத்தான்…நீங்கள் உள்ளுக்குள்ளை ஒண்டும் கட்டாமல் ஒரு
துண்டைக் கட்டிக் கொண்டு திரியிறது போலத்தான் முருகனும் கோவணத்தோடை மட்டும்
திரியறான்..இந்த இலட்சத்திலை என்ரை அப்பரைப் பற்றிக் கதைக்கிறியள்.. அவன் இவன்
என்றியள் என்ரை அப்பரை.என பார்வதி சொல்ல„ஏதோ வாய் தடுமாறி வந்திட்டுது,அதுக்கு உடனை விவாகரத்து என்கிறாய் சரி சரி இனிகடைசியிலை வாற „ன்' னன்னா சொல்ல மாட்டன் „ர் வைத்துச் சொல்றன் என்று பார்வதியைசமானப்படுத்துகிறார் சிவா.
„அது சரி உன்ரை மூத்து மோன் எங்கையென்று கேட்க, „அவன் கொழுக்கட்டை சாப்பிட்டுக்
கொண்டு எலிக்குஞ்சுகளோடை விளையாடிக் கொண்டிருக்கிறான் „ என்கிறார் பார்வதி.
„அவனுக்கு அதுதானே எந்த நேரமும் வேலை என்று சொல்ல ஏன் உங்களைப் போல
உங்கடை இரண்டாவது மகனைப் போல இருக்கச் சொல்றியளோஎன்று ஏளனமாகப் பார்வதி
கேட்க,துணுக்குற்ற சிவா„ நான் அப்படி என்ன பிழை விட்டிட்டன் என்று துள்ளிக் குதிக்கிறாய் „ என்று பார்வதியைப்பார்த்து சிவா கேட்க, „ஏன் உங்களுக்கே தெரியாதா, பகீரதி யார்,கங்கா யார் என்ற பார்வதிக்கு„ அது இரண்டும் நதிகளப்பா, ஆரோ உன்னட்டை தப்புத் தப்பாய் என்னைப் பற்றிச்சொல்லியிருக்கினம்என்று மெதுவாக தான் செய்கிற ஜில்மால்களை மூடிமறைத்தார் சிவா.
ஆனால் பார்வதி விடவில்லைஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அந்த இரண்டு சக்களத்தியளையும்
கையும் களவுமாக பிடிக்கிறனோ இல்லையோ என்று பாருங்கள் „ என்று பார்வதி சொல்ல,
சும்மா வாயை வைச்சுக் கொண்டிருக்காமல்ஆம்பிளையள் எண்டால் அப்படி இப்படித்தான்
இருப்பினம், பெண்சாதிமார் கண்டும் காணாமல் இருக்க வேணும் என்று சிவா சொல்ல
இன்னும் பார்வதியின் கோபத்தைக் கிளற,ஓகோ அந்தளவுக்கு வந்திட்டியள், இனிப் பொறுக்க ஏலாது,இனி விவாகரத்துத்தான்,பொம்பிளையளை அடிமைமாதிரி வைச்சிருக்கிற உங்களோடை வாழ ஏலாது நான் என்ரைமூத்த பிள்ளை விநாயகனைக் கூட்டிக் கொண்டு போகப் போறன்; என்று சொன்னபார்வதியிடம்„ அப்ப அவன் முருகனை என்ன செய்யிறது, நான் உலக இயக்கத்துக்கு நடனம் ஆட வேணும்,உயிர்களுக்கு படியளக்க வேணும், எனக்கு எவ்வளவு வேலை கிடக்குது „ என்று சிவா சூலத்தைத் தூக்கிக் கொண்டு பின்னேர படியளப்பிற்கு வெளிக்கிட „அவனும் உங்களைப் போலத்தான்,மயிலிலை ஏறி அங்கை இங்கை பறந்து திரியிறான் ஏதாவது கன்னியர்களைக் கண்டால் ஏதாவது இசகுபிசகாய் நடந்திடும் என்று தெய்வானைக்கு கல்யாணம் செய்து வைத்தால், அவன் வேட்டைக்குப் போறன் என்று வில்லையும் அம்பையும் எடுத்தக் கொண்டு தெய்வானைக்கு பொய் சொல்லிப் போட்டு ஆரோ வள்ளியாம் அவளோடை தொடுப்பு வைச்சிருக்கிறான்.
நான் கேள்விப்பட்டன் வள்ளியை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வரப் போறானாம்,
அண்டைக்கு தெய்வானை இஞ்சை வந்து „மாமி உங்கடை மகன் முருகன் செய்யிற ஜில்மால்
வேலை உங்களுக்குத் தெரியுமோ ,ஆரோ வள்ளியாம் அவளிட்டை போட்டு வாறார்,திணைக் கொழுக்கட்டை திணைப் புட்டு எல்லாம் சாப்பிடுறாராம், அங்கைத்தை காட்டுத்தேன் நல்லது
என்று அதையும் நக்கிப் போட்டு வாறார்,
மாமாவும் இவரைப் போலத்தான் என்று நாரதர் மாமா கிண்டலும் கேலியுமாக சொல்லுறார்.
„கோபிக்காதையுங்கோ மாமி இனிப் பொறுக்கேலாது அவரை விவாகரத்துத்தான்என்று
சொல்லிப் போட்டுப் போறாள்.
„இதென்ன கரைச்சல் பிடிச்ச கதையாக் கிடக்குது,மாமியும் மருமோளும் ஒரு
முடிவிலைதானிருக்கிறியள்; என்று சிவா சொல்ல;பொம்பிளையள் எண்டால் நாங்கள் என்னகிள்ளுக் கீரையோ என்று பார்வதி சொல்ல, சரி நான் பின்னேரப் படியளந்து போட்டு வாறன்என்று சிவா வெளிக்கிடஏதோ நான்தான் உலகத்துக்கே படியளக்கிறன் என்று விலாசமாய்க்கதைக்கிறியள் இன்டைக்கு அதையும் பார்க்கிறன் „ என்று சொல்லிய பார்வதி,சிவாவீட்டைவிட்டு வெளிக்கிட்டுப் போனதும் ஒரு எறும்பைப் பிடித்து சீலைத்தலைப்பில் வைத்து முடிச்சுப் போட்டு வைத்திருந்தார்.
கொஞ்ச நேரம் பொறுத்து சிவா படியளந்து போட்டு வீட்டுக்குள்ளே நுழையும்போதே „ ஈரேழு
உலகத்திற்கும் படியளக்கிறதென்றால் சும்மாவா ..போதும் போதுமென்றாகிவிட்டுது…அதுவும்
பூமியிலிருக்கிற மனுசற்றை ஆசையை என்னவென்று சொல்லுறுது…
ஒரு வீட்டுக்குள்ளேயே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணவிலை விருப்பம்,கடவுளாய்
இருக்கிறது எவ்வளவு கஸ்டம் என்று மனுசருக்கு புரியேலை..ஒருத்தர் நூடில்ஸ்
என்கிறார்,இன்னொருத்தர் பிஸ்ஸா என்கிறார், இன்னொருத்தர் பஸ்மதி அரிசியிலை புரியாணி என்கிறார்…பொன்னியரிசிச் சோறு என்கிறார்….இதிலை சிலர் சீரகச் சம்பாவிலை புரியாணி என்கின்றனர்..குத்தரிசியில் சோறு என்கின்றனர்….இடியப்பம் ..புட்டென்கின்றனர்…றொட்டி பாண் என்கின்றனர்…கொத்து றொட்டி என்கின்றனர்…எல்லாருக்கும் எல்லாத்தையும் குடுத்து
முடிச்சிட்டு வரும் வரையும் .கடவுள் என்ற என் பாடு பெரும் பாடு..இடுப்பிலை கிடக்கிற துண்டு அவிழ்ந்து விழாத குறை மட்டுந்தான் ..எனச் சிவா சலித்துக் கொண்டதைக் கேட்டுக் கொண்டே வந்த பார்வதி…,கட்டிறதே அரை இஞ்சி புலித்தோல் அதுவும் உள்ளுக்குள்ளை ஒண்டும் மறைக்கிறேலை இந்த இலட்சணத்திலை கட்டினது அவிழ்ந்து விழுந்தாலென்ன விழாட்டில் என்ன „என்று நக்கலாகச் சொன்னவர்.. நான்தான் ஈரேழு உலகத்திற்கும் படியளக்கிறன் என்று கெத்தாப்பு கதை கதைக்கிறியள்
இண்டைக்கு ஒரு சோதனை வைச்சிருக்கிறன் அதிலை நீயா நானா என்று பார்ப்பம்
„என்றவள்,தரையிலை காலை நீட்டி உட்கார்ந்த சிவாவைப் பார்த்துபுலித்துண்டை இழுத்து
மூடிக் கொண்டு சப்பாணி கட்டிக் கொண்டு இருங்கள் „ என்று சொல்லியவாறு சிவாவுக்கு
எதிரே தரையில் காலை மடித்து ஒருக்களித்து உட்கார்ந்து கணவனைப் பார்த்தபடியே
ஒருவிதமான கர்வத்துடன் சீலைத் தலைப்பின் முடிச்சை அவிழ்த்தவள், தான் முடிஞ்சு
வைத்திருந்த எறும்பு அரிசியொன்றை கவ்விக் கொண்டு இருப்பதைப் பார்த்து
திகைத்துவிட்டார்.
அதைக் கவனித்த சிவா தனது பாறு தன்னிடம் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக எதையுமே
கவனிக்காதது போல,; பாறு நீ ஒண்டுக்கும் யோசிக்காதை கவலைப்படாதை „ என்று சொல்லிக்
கொண்டே பார்வதியை இழுத்து அணைக்க, வாஞ்சையுடன் சிவாவின் தோளில் தலை
சாய்த்தவள் „பகீரதி கங்கா விசயம் இனித் தொடருமென்றால் விவாகரத்துத்தான் „ என்று
கோபமாகவும் செல்லமாகவும் சொல்லிக் கண்ணயர.. தெருவில் நாராயணா……நாராயணா என நாரதரின் குரல் கேட்க „
அந்தாள் இஞ்சை வரப் போறாரே …என்னென்ன பிரச்சினையைக் கிளறப் போறாரே
தெரியேலையே „ என்று சிவா மனதில் நினைத்தவாறு, பார்வதியைப் பார்க்க,அந்த நேரம்
பார்த்து „ ஓம் நமசிவாய ..ஓம் பார்வதி நம „ என்று சொல்லிக் கொண்டே கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது.
கதவைத் திறந்த பார்வதி „ நாரதரண்ணை வாங்க என்று சொல்லி அவரை உட்காரச்
சொல்கிறார்.
பார்வதியின் முகத்தை உற்றுப் பார்த்த நாரதர்,என்ன சிவா தங்கச்சி முகம் ஒரு மாதிரி
இருக்கு…அதுசரி அந்தப் பகீர். என்று நாரதர் தொடங்க முந்தி „
அதுதானண்ணை பிரச்சினை, என்னுடைய பெண்ணுரிமையை இவர் மதிக்காவிட்டால்,அந்தப்
பகீர் பிரச்சினையாலை விவாகரத்துத்தான் நடக்கும் என்று சொல்ல „
என்ன தங்கச்சி நீ எதுக்கெடுத்தாலும்,அந்த முடிவை எடுக்கிறாய், உங்களாலைதான் பூமியிலைகல்யாணம் முடிச்ச சின்னஞ்சிறுசுகள்கூட பொறுமை, சகிப்புத்; தன்மை இல்லாமல் சின்னச்சின்னப் பிரச்சினைக்கெல்லாம் விட்டிட்டுப் போறன் என்று அழுங்குப் பிடியாய் நிற்குதுகள் என்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்க „
ஒரு மாதிரி தணிஞ்சு கிடந்த பிரச்சினையை ஊதிப் பகீரென்றாக்கிவிட்டுட்டுதே இந்த நாரதர் „
என்று சிவா மனதில் நினைக்க, „
மெய்யே சிவா,தங்கச்சி பார்வதி,மாப்பிளை முருகன் வள்ளியை வீட்டுக்கு கொண்டு வந்திட்டார்
என்று ஒரு கதை நடக்குது உண்மையோ,அதாலை தெய்வானை ஏறுவன் கோர்ட்டுப் படியை
என்று கோபாவேசத்திலை நிற்கிறாளாமேஎன்றவர், சரி வாறன், எனக்கும் கன வேலை இருக்கு
சிவா அந்த ப…,சரி சரி அதைப் பிறகு கதைப்பம் என்று சொல்லியபடியே சிவா பார்வதியின்
வீட்டைவிட்டுப் போகிறார்.
„அப்பனைப் போல பிள்ளை „என்று பார்வதி பல்லை நெருமசரி சரி விடு „ என்றவாறு
பார்வதியின் மடியில் சிவா தலைவைத்துப் படுக்கிறார்.
(இது ஒரு கற்பனைக் கதை சிவா என்பது சிவபெருமானையும், பார்வதி என்பது பார்வதியையும்
குறிக்கும்)
![]()