கதம்பம்

பெண்கள் கால்பந்து போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

6-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்திடம் வீழ்ந்தது.

லீக் சுற்று முடிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற வங்காளதேச அணி 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், இந்திய அணி (2 வெற்றி, ஒரு தோல்வி) 6 புள்ளிகளுடன் 2-வது இடம் பெற்றும் அரைஇறுதிக்கு முன்னேறின. இந்திய அணி அரைஇறுதி ஆட்டத்தில் வருகிற 16-ந் தேதி நேபாளத்தை சந்திக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *